சவூதி அரேபியா, அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி, மே மாதத்தில் இந்தியாவின் 3வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோக நாடாக வெனிசுலா உருவெடுத்தது. ஏப்ரலில் நாள் ஒன்றுக்கு 2.83 லட்சம் பேரல்களாக இருந்த வெனிசுலாவிய எண்ணெய் இறக்குமதி, மே 1-20 தேதிகளில் 47% அதிகரித்து 4.17 லட்சமாக உயர்ந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 19 லட்சம் பேரல்களுடன் ரஷ்யா முதலிடம், 5.6 லட்சத்துடன் UAE 2ம் இடத்தில் உள்ளது.




