கொங்கு காட்டா குழம்பு

உங்களுக்கு கொங்கு ஸ்டைல் காட்டா குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்கு ஸ்டைல் காட்டா குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: காட்டா குழம்பு மசாலாவுக்குத் தேவையானவை:
– 1 ஸ்பூன் நல்லெண்ணெய் –
1/2 ஸ்பூன் சீரகம் –
1 ஸ்பூன் மல்லி விதைகள்
2 வர மிளகாய்கள் –
2 ஸ்பூன் புழுங்கல் அரிசி –
2 ஸ்பூன் துவரம் பருப்பு –
8 சின்ன வெங்காயம் குழம்பு வைக்க
1 ஸ்பூன் நல்லெண்ணெய் –
1/4 ஸ்பூன் கடுகு –
1/4 ஸ்பூன் சீரகம் –
2 கொத்து கறிவேப்பிலை –
1.5 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் –
தேவையான அளவு உப்பு –
எலுமிச்சை அளவு புளி

செய்முறை: – ஒரு வாணலியில் கால் டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் துவரம்பருப்பு மற்றும் அரிசியைச் சேர்க்கவும். பருப்பையும், அரிசியையும் மிதமான தீயில் வைத்து வறுக்கவும். அரிசியும் பருப்பும் பொன்னிறமாக மாறியதும்,

அவற்றை வாணலியிலிருந்து எடுத்து ஒரு தட்டில் ஆறவிடவும். – அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து, அதில் சீரகம், மல்லி விதைகள் மற்றும் வர மிளகாயைச் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கவும். – அதனுடன் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை 3-4 நிமிடங்கள் வதக்கவும்.

– வறுத்து வைத்துள்ள பருப்பு-அரிசி கலவை மற்றும் மசாலாப் பொருட்களை, அரை கப் தண்ணீர் சேர்த்து சற்று கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதைத் தனியே எடுத்து வைக்கவும். – ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், அதில் கடுகு மற்றும் சீரகத்தைச் சேர்க்கவும். அதனுடன் சிறிதளவு கறிவேப்பிலையையும் சேர்க்கவும். – கடுகு பொரியத் தொடங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்க்கவும். இந்த குழம்புக்கு அதிக அளவில் வெங்காயம் சேர்ப்பது அவசியம். வெங்காயம் விரைவாக வதங்குவதற்கு, அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக்கொள்ளவும்

– வெங்காயம் மென்மையாகி பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, அதை நன்றாகப் பிசைந்து புளிக்கரைசலை எடுத்துக்கொள்ளவும். – இந்த புளிக்கரைசலை வாணலியில் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்க்கவும். – குழம்பை மிதமான தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். கொதிக்கும் போது குழம்பு கெட்டியாகும். அடிப்பிடிக்காமல் இருக்க, அவ்வப்போது கிளறி விடவும். – குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைத்து இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.