அவசரகால சட்டம், பயங்கரவாத சட்டம் மூலம் தமிழர்கள் பாதிக்கப்பட்டனர் – அமைச்சர் சந்திரசேகர்

நாட்டில் அவசரகால சட்டத்தைக் கொண்டு வந்து, பயங்கரவாத சட்டத்தை அமுலாக்கி தமிழர்களை வதைத்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினராகும். அதற்கு வழிவகுத்தவர் அன்றைய ஜனாதிபதி ஜே .ஆர் ஜெயவர்தன என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நுவரெலியாவை எரித்து சாம்பலாக்கியவர்கள் யார் என்பது தற்போது சபையில் இருக்கும் இராதாகிருஷ்ணன் எம்பிக்கும் தெரியும்.

அப்போது மகாவலி அபிவிருத்தி அமைச்சராகவிருந்த காமினி திசாநாயக்க வீடு வீடாகச் சென்று வீடுகளையும் கடைகளையும் எரிக்க நடவடிக்கை எடுத்தவர். எமது பெண்களை துவம்சம் செய்த பாவிகள் ஐக்கிய தேசியக் கட்சியினர் என்பதே உண்மை.

பதுளையில் தமிழர்களின் கடைகளை எரிக்கும் போது இராணுவத்தினரே வெண் கட்டியை உபயோகித்து அவற்றுக்கு அடையாளம் இட்டார்கள். பச்சிளம் குழந்தைகளையும் தீயில் போட்டு எரித்தார்கள்.

நாட்டில் அவசரகால சட்டத்தைக் கொண்டு வந்து, பயங்கரவாத சட்டத்தை அமுலாக்கி தமிழர்களை வதைத்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே. அதற்கு வழிவகுத்தவர் அன்றைய ஜனாதிபதி ஜே .ஆர் ஜெயவர்தன.

ஜனநாயகத்தை எதிர்பார்த்து வாக்குகள் மீது நம்பிக்கை வைத்த வடக்கு கிழக்கு இளைஞர்களை ஏமாற்றியவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர்.

தமிழர்களின் இதயமான யாழ் நூலகத்தை எரித்து பல்லாயிரக்கணக்கான நூல்களை எரித்து சாம்பலாக்கிய பெருமை அவர்களுடையது.

எனவே நாட்டில் மீண்டும் இன ஐக்கியத்தை கட்டியெழுப்பும் வகையிலேயே அரசாங்கம் ஜூலை கலவரம் தொடர்பான இந்த பிரேரணையை கொண்டு வந்தது என்றார்.என்றும் அதற்கு வழிவகுத்தவர் அன்றைய ஜனாதிபதி ஜே .ஆர் ஜெயவர்தன எனவும்

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை ஜனநாயகத்தை எதிர்பார்த்து வாக்குகள் மீது நம்பிக்கை வைத்த வடக்கு கிழக்கு இளைஞர்களை ஏமாற்றியவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் நாட்டில் மீண்டும் இன ஐக்கியத்தை கட்டியெழுப்பும் வகையிலேயே அரசாங்கம் ஜூலை கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சபையில் நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கறுப்பு ஜூலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

நுவரெலியாவை எரித்து சாம்பலாக்கியவர்கள் யார் என்பது தற்போது சபையில் இருக்கும் இராதாகிருஷ்ணன் எம்பிக்கும் தெரியும்.

அப்போது மகாவலி அபிவிருத்தி அமைச்சராகவிருந்த காமினி திசாநாயக்க வீடு வீடாகச் சென்று வீடுகளையும் கடைகளையும் எரிக்க நடவடிக்கை எடுத்தவர். எமது பெண்களை துவம்சம் செய்த பாவிகள் ஐக்கிய தேசியக் கட்சியினர் என்பதே உண்மை.

பதுளையில் தமிழர்களின் கடைகளை எரிக்கும் போது இராணுவத்தினரே வெண் கட்டியை உபயோகித்து அவற்றுக்கு அடையாளம் இட்டார்கள். பச்சிளம் குழந்தைகளையும் தீயில் போட்டு எரித்தார்கள்.

ரஞ்சித் மத்தும பண்டார போன்றவர்கள் அவற்றை மறந்து விடக்கூடாது.

நாட்டில் அவசரகால சட்டத்தைக் கொண்டு வந்து, பயங்கரவாத சட்டத்தை அமுலாக்கி தமிழர்களை வதைத்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே. அதற்கு வழிவகுத்தவர் அன்றைய ஜனாதிபதி ஜே .ஆர் ஜெயவர்தன.

ஜனநாயகத்தை எதிர்பார்த்து வாக்குகள் மீது நம்பிக்கை வைத்த வடக்கு கிழக்கு இளைஞர்களை ஏமாற்றியவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர்.

தமிழர்களின் இதயமான யாழ் நூலகத்தை எரித்து பல்லாயிரக்கணக்கான நூல்களை எரித்து சாம்பலாக்கிய பெருமை அவர்களுடையது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.