ஐந்தறிவும் ஆறறிவும்

 

சமூ­கங்­க­ளி­டையே பிள­வு­க­ளையும் குரோ­தங்­க­ளையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இக்­கா­லத்தில் ஒரு சில இன­வாத போக்­கு­டை­ய­வர்­களும் சமூக ஊட­கங்­களும் இருந்தால் போதும் என்ற நிலையை உணர்த்­திய சம்­பவம் கடந்த வாரம் எமது நாட்டில் இடம்­பெற்­றது.

ஆனால், இந்த சம்­ப­வத்தின் மையப்­புள்­ளி­யாக விளங்­கி­யது என்­னவோ ‘சுப்­ர­மணி’ என்ற பெயர் கொண்ட ஓர் நாய் தான் எனும் போது, ஐந்­த­றிவு கொண்ட விலங்­கொன்று நாட்டில் இரு சமூ­கங்­க­ளி­டையே முறு­கலை ஏற்­ப­டுத்த கார­ண­மாக இருந்­தி­ருக்­கின்­றதா என்ற ஆச்­ச­ரி­யமும் தலை­தூக்­கு­வதை தவிர்க்க முடி­யா­துள்­ளது.

கதிர்­கா­மத்­துக்கு பாத­யாத்­தி­ரை­யாக செல்லும் பக்­தர்­க­ளுடன் ‘சுப்­ர­மணி’ என்று அழைக்­கப்­படும் ஒரு நாயும் இணைந்து பய­ணித்து வரு­கின்­றது.

யாத்­ரி­கர்கள் கல்­முனை நகரை கடந்து பய­ணிக்கும் போது அங்கு இளநீர் கடை வைத்­தி­ருக்கும் ஒரு இளைஞன் அந்த நாயை உதைத்து விடு­கின்றார்.

அவர் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த ஒருவர். யாத்­திரீகர்கள் குழுவில் உள்ள ஒருவர் தாம் பாத யாத்­திரை செல்­வதை தனது திறன் பேசி மூலம் பதிவு செய்து கொண்டே போகின்றார்.

ஒரு சில இடங்­களில் தனது பேஸ்புக் பக்­கத்தில் நேர­டி­யாக காட்­சி­களை பதிவு செய்­கிறார். அவ­ரது கவனம் தம்­மோடு வரும் நாயின் மீதே உள்­ள­மையை அவ­ரது பதி­வுகள் காட்­டு­கின்­றன. அதில் குறித்த இளைஞன் நாயை எட்டி உதைப்­பதும் பதி­வாகி விடு­கின்­றது. இந்த சம்­பவம் சமூக ஊட­கங்­களில் பரவ ஆரம்­பித்து விட்­டது.

ஒரு பக்கம் பொது­மக்கள் மற்றும் மிரு­க­வ­ளர்ப்பு ஆர்­வ­லர்கள் மத்­தியில் இந்த சம்­பவம் பெரும் கொந்­த­ளிப்­பையும் கடு­மை­யான கண்­ட­னங்­க­ளையும் தோற்­று­வித்­தது.

மனி­த­நே­ய­மற்ற இந்தச் செய­லுக்கு எதி­ராக சமூக வலைத்­த­ளங்­களில் கண்­டனக் குரல்கள் மிக வேக­மாக வைர­லா­கின. வளர்ப்பு மிருகம் ஒன்றை இவ்­வாறு தாக்­கு­வது முறை­யற்­றது என எதிர்ப்­புக்­கு­ரல்கள் அதி­க­ரித்­தன. மறு­பக்கம்

இது ஒரு மத­நிந்­தனை என்ற வாதங்கள் அதி­க­மாக பர­வின. முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான மிக மோச­மான வார்த்தைப் பிர­யோ­கங்கள் சமூக ஊட­கங்­களை நிறைத்­தன.

இதே­வேளை, நாயை தாக்­கிய இளைஞர் தனது செய­லுக்கு மன்­னிப்பு கோரிய வீடியோ பதிவும் சமூக ஊட­கங்­களில் வெளி­யா­னது.

ஆனால், அதன் பிறகும் கூட எழுந்த எதிர்ப்­ப­லை­களால் குறித்த இளைஞர், கல்­முனை தலைமை பொலிஸ் காரி­யா­லய அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்டு கல்­முனை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டார்.

குறித்த இளை­ஞரை 50 ஆயிரம் ரூபாய் சரீ­ரப்­பி­ணையில் செல்ல நீதி­மன்றம் அனு­ம­தித்­த­துடன் இது தொடர்­பான வழக்கை எதிர்­வரும் 13 ஆம் திகதி மீண்டும் விசா­ர­ணைக்கு எடுக்க உத்­த­ர­விட்­டுள்­ளது.

இவ்­வ­ளவு சம்­ப­வங்கள் இடம்­பெற்றும் சமூக வலை தளங்­களில் தமிழ் மற்றும் முஸ்லிம் இளை­ஞர்கள் தமக்குள் பரஸ்­பரம் கடும் வார்த்தைப் பிர­யோ­கங்­களை பதி­வி­டு­வதை நிறுத்­த­வில்லை.

இதன் உச்­ச­கட்­ட­மாக சவூதி அரே­பி­யாவில் பணி­யாற்றும் தமிழ் இளைஞர் ஒருவர் நபிகள் நாயகம் குறித்த ஒரு மோச­மான பதிவை இடு­கின்றார்.

இது ஒட்டு மொத்த முஸ்லிம் மக்­க­ளையும் கோபத்­துக்­குள்­ளாக்­கி­யதில் அவர் பணி­பு­ரியும் நிறு­வனம் தொடர்பில் தக­வல்­களை சேக­ரித்து அங்கு பொலி­ஸா­ருக்கு அவரைப் பற்­றிய முறைப்­பாடு செய்­யு­ம­ள­வுக்கு நிலைமை சென்று விட்­டது.

அதன் விளை­வாக குறித்த இளை­ஞரை சவூதி பொலிஸார் கைது செய்து விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளனர். பெரும்­பான்­மை­யாக இஸ்­லா­மி­யர்கள் வாழ்ந்து வரும் மேற்காசிய நாடு­களில் மத நிந்­த­னைக்கு அதிக பட்ச தண்­ட­னை­யாக மரண தண்­டனை அமுலில் உள்­ளது.

இந்­நி­லையில் குறித்த தமிழ் இளை­ஞ­ருக்கு என்ன தண்­டனை கிடைக்­கப்­போ­கின்­றது என்ற பதற்­றத்தில் அவ­ரது குடும்­பத்­தினர் இங்கு தவித்து வரு­கின்­றனர். ஆனால், தான் கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்­ப­தாக குறித்த தமிழ் இளை­ஞரும் தனது பதி­வுக்கு முஸ்லிம் சமூ­கத்­திடம் பகி­ரங்­க­மாக மன்­னிப்பு கோரி வீடியோ பதி­வொன்­றையும் இட்­டி­ருந்தார்.

கல்­முனை சம்­பவம் தற்­செ­ய­லா­னது. ‘சுப்­ர­மணி’ கதிர்­காம யாத்­தி­ரீகர் குழு­வுடன் செல்­வது குறித்து அங்கு இளநீர் விற்­றுக்­கொண்­டி­ருக்கும் இளை­ஞ­ருக்கு தெரிய வாய்ப்­பில்லை.

மேலும் நாய்­களின் எச்சில் தம்­மீது படு­வது மார்க்க ரீதி­யாக அசுத்தம் என்­பதால் முஸ்­லிம்கள் நாய்­களைக் கண்டால் வில­கியே செல்வர்.

ஆனால், அது முன்­பா­து­காப்பே ஒழிய நாய்கள் மீதான வெறுப்­பில்லை. வீட்டை காப்­ப­தற்கும், கால்­ந­டை­களை வளர்ப்­ப­தற்கும் நாய்­களை வளர்க்க இஸ்லாம் அனு­ம­தி­ய­ளிக்­கின்­றது என்­பதே உண்மை.

யாத்­திரீகர்­க­ளுடன் சென்ற ‘சுப்­ர­மணி’ குறித்து அவ்­வி­ளை­ஞ­னுக்கு எடுத்துக் கூறிய பின்னர் அப்­ப­கு­தி­யி­லுள்­ள­வர்­களும் அதற்கு தமது வேத­னையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

இளைஞர் மன்­னிப்பு கோரிய வீடி­யோவில் ஒருவர் “கல்­முனை மக்கள் சார்­பாக நாம் மன்­னிப்பு கோரு­கிறோம்” என்று கூறி­யி­ருந்­தமை முக்­கிய விடயம். சில நேரங்­களில் நாயை உதைத்த இளைஞர் முஸ்லிம் அல்­லாத ஒரு­வ­ராக இருந்­தி­ருந்தால் இந்­த­ள­வுக்கு நிலைமை சென்­றி­ருக்­காது என்று தான் கூற வேண்­டி­யுள்­ளது.

குறித்த சம்­ப­வத்தை தமது குரோ­தங்­க­ளுக்­கா­கவும் இனங்­க­ளி­டையே நிலவும் நல்­லு­றவை சிதைப்­ப­தற்கும் தருணம் பார்த்து சிலர் பயன்­ப­டுத்­திக்­கொண்­டனர் என்­பதும் உண்மை.

 

இதன் கார­ண­மா­கவே மன்­னிக்கும் பண்­பு­களை கொண்ட மனி­தர்­களின் சொற்­க­ளை­விட, முறு­கல்­களை விரும்பும் தரப்­பி­னரின் இன­வாத கருத்­துகள் மிக வேக­மாக சமூக ஊட­கங்­களில் பய­ணித்து சம்­ப­வத்தை திசை திருப்பி விட்­டது.

உணர்ச்சி வசப்­பட்டு பொது­வெ­ளியில் வார்த்­தை­களை விடு­வதால் அது இந்­த­ள­வுக்கு தீவி­ரத்தை ஏற்­ப­டுத்தும் என சவூ­தியில் பணி­யாற்றும் தமிழ் இளை­ஞரும் நினைத்­தி­ருக்க மாட்டார்.

தாம் எந்த நாட்டில் பணி­யாற்­றி­னாலும் அந்­நாட்டின் சட்ட திட்­டங்­களை அறிந்து செயற்­பட வேண்டும் என்­பதை இளையோர் அறிந்து கொள்ளல் எந்­த­ள­வுக்கு அவ­சியம் என்­பதை இந்த சம்­பவம் உணர்த்­தி­யுள்­ளது. அவ­ரு­டைய நிலைமை குறித்து அர­சாங்­கமும் தனது கவ­னத்தை திருப்ப வேண்­டிய சூழ்­நி­லைகள் எழுந்­துள்­ளன.

கடந்த ஏப்ரல் மாதம் அமை­திக்­கான நடை பய­ணத்தை மேற்­கொண்டு இலங்­கைக்கு வருகை தந்த பெளத்த துற­வி­க­ளுடன் ஆலோக்கா என்ற நாயும் இணைந்து கொண்­டி­ருந்­தமை அனை­வரும் அறிந்த விடயம்.

ஆலோக்கா சர்­வ­தே­சத்தின் கவ­னத்­தையும் ஈர்த்த நாயாகும். அதன் வருகை குறித்து முன்­ன­தா­கவே அறி­விக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் அதன் பரா­ம­ரிப்­புக்­கென பிரத்­தி­யேக குழு­வி­னரும் வந்­தி­ருந்­தனர்.

பெளத்த துற­விகள் செல்லும் இடங்­க­ளுக்­கெல்லாம் ஆலோக்கா சென்ற போது இலங்கை மக்­களால் அதற்கு பெரு வர­வேற்­ப­ளிக்­கப்­பட்­டது. ஆனால் ‘சுப்­ர­மணி’ என்ற நாய் குறித்து நாட்டு மக்கள் அறிந்­தி­ருக்­க­வில்லை. தமிழ் மக்­க­ளிடம் மாத்­தி­ரமே அது குறித்து செய்­திகள் சென்­ற­டைந்­தி­ருந்­தன. எனவே கல்­முனை சம்­ப­வத்­துக்கு அதுவும் ஒரு காரணம்.ச்

இலங்­கையில் வாழ்ந்து வரும் சிறு­பான்மை இன மக்­களின் இறை நம்­பிக்­கைகள் குறித்து பெரும்­பான்மை மக்கள் மற்றும் பெளத்த மதத் துற­வி­களால் பல சந்­தர்ப்­பங்­களில் விமர்­சிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இஸ்லாம் மார்க்கம் பற்றி ஞான­சார தேரர் உள்­ளிட்ட தரப்­பினர் கடும் வார்த்தைப் பிர­யோ­கங்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­த­மையை நாடே அறியும். முஸ்­லிம்­களின் ஆடை மற்றும் அவர்­களின் கலா­சாரம் குறித்து கடந்த காலங்­களில் அதி­க­மாக விமர்­சித்து வந்­தவர் ஞான­சார தேரர். ஆனால், அனைத்­தையும் சகித்து கொண்டு அமை­தி­யாக இருந்­தனர் முஸ்லிம் மக்கள். இஸ்லாம் மன்­னிக்கும் மார்க்கம் என்­பதில் அவர்கள் அளவு கடந்த நம்­பிக்கைக் கொண்­டி­ருந்­தனர்.

வடக்கு, கிழக்குப் பகு­தி­களில் தமிழ் மக்­களின் பாரம்­ப­ரிய வழி­பாட்­டி­டங்கள் மற்றும் தொல்­லியல் பிர­தே­சங்­களை ஆக்­கி­ர­மித்து அங்கு புதி­தாக விகா­ரை­களை அமைத்து வர­லாற்­றையே மாற்­றி­ய­மைக்கும் வேலை­க­ளையும் இதே பெளத்த பிக்­கு­களே முன்­னெ­டுத்­தனர்.

இதற்கு தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை கவ­ன­ஈர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் மூலம் வெளிப்­ப­டுத்­தி­னாலும் மறு­பக்கம் சட்­ட­ரீ­தி­யா­கவும் இதற்கு முகங்­கொ­டுத்து வரு­கின்­றனர். மேற்­படி சம்­ப­வங்­களைப் பார்க்கும் போது, இந்­நாட்டின் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் பேரி­ன­வாத சிந்­தனை கொண்ட பெளத்த துற­வி­க­ளாலும் ஒரு சில நபர்­க­ளாலும் , தமது இறை நம்­பிக்கை, வழி­பா­டுகள் மீதான அடக்­கு­மு­றை­க­ளுக்கு உட்­பட்ட தரப்­பி­ன­ராக விளங்­கு­கின்­றனர்.

இந்த நிலை­மைகள் இன்னும் தொடர்­கின்­றன. அவ்­வாறு இருக்­கையில் இந்த இரு­த­ரப்­பி­னரும் சில சம்­ப­வங்­களை ஊதி பெருப்­பித்து தமக்­குள்ளும் மத­ரீ­தி­யாக பகை­மை­களை வளர்த்­துக்­கொள்ளல் பேரி­ன­வாத சிந்­த­னை­யா­ளர்­க­ளுக்கு ஒரு வாய்ப்­பாக அமைய இட­முண்டு.

கல்­முனை சம்­ப­வத்தை பூதா­க­ர­மா­ன­தாக சித்­த­ரித்து, இதற்கு ஊட­கங்கள் உதவ வேண்டும் என்றும் குறித்த இளைஞன் மன்னிப்பு கேட்க வேண்டும் என யாத்திரீகர்கள் குழுவில் உள்ளோர் மேற்கொண்ட முகநூல் பதிவுகளும் இதற்கு காரணமாயிற்று. ஆன்மிக யாத்திரைகளில் பல இடையூறுகள் , துன்பங்கள் ஏற்படலாம். மனிதர்களை பக்குவப்படுத்துவதற்கே நெறிகளும் மதங்களும் உருவாகின என்றால் அந்தப் பக்குவம் ஆறறிவு படைத்த மனிதர்களுக்கே ஏற்பட வேண்டும்.

கல்முனை முஸ்லிம் இளைஞன் வழக்கிலிருந்து விடுபட சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால், சவூதியில் பணியாற்றும் தமிழ் இளைஞனின் நிலை குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.

“கண்ணுக்குக் கண் எனப் பழி வாங்கத் தொடங்கினால், இறுதியில் உலகமே குருடாகிவிடும்” என்பது மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற கூற்று. பழிவாங்கும் உணர்வு முடிவற்ற வன்முறைக்கு வழிவகுக்கும் என்பது இதன் அர்த்தம். எனவே, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய தருணம் இது.