ஈரான் உட்கட்டமைப்புகள் மீதான இராணுவத் தாக்குதல்கள் குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

 

அமெரிக்காவுடனான புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்து தெஹ்ரானில் உள்ள மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளர் அலி அக்பர் தாரெய்னி கருத்து வெளியிட்டுள்ளார்.

ஈரான் போரை விரும்பவில்லை; ஈரான் இங்கு பாதிக்கப்பட்ட தரப்பாகவே உள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலுமே ஆக்கிரமிப்பாளர்கள். தற்போது ஜனாதிபதி ட்ரம்ப் அவராகவே கையெழுத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை அவரே இல்லாது செய்துள்ளார் என்று தாரெய்னி சாடியுள்ளார்.

மேலும், அமெரிக்காவின் தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் நிலைமையை புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முந்தைய காலத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதனால் நிலைமை “கட்டுப்பாட்டை மீறி” தீவிரமடையக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஈரான் போரை விரும்பவில்லை என்றாலும், ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்தும் அதன் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் சிறிய அளவிலான இராணுவத் தாக்குதல்களை அதனால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தாரெய்னி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, ஈரான் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் ஒரு பரந்த புவியியல் பரப்பை உள்ளடக்கிய பன்முகப் போரை முன்னெடுக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.