கொரோனாவை பரப்பிய ஆன்மீகக் குழுவால் இலங்கைக்கும் ஆபத்து!
30 Mar,2020
புத்தளம் - கடையான்குளம் பகுதி நேற்று முற்றாக வெளித்தொடர்புகளில் இருந்து முடக்கப்பட்ட போதும், பின்னர் அந்த ஊர் மக்கள் அனைவரும் பாடசாலை ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கல் மையத்துக்கு மாற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அண்மையில் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவுக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற குழுவில் அடங்கிய ஒருவர் குறித் பகுதியில் கொரோனா தொற்று தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனால் ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய மூன்று குழுக்கள் கொரோன அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன.
மலேசியாவில் குறித்த ஆன்மீக நிகழ்வில் பங்கேற்ற பலருக்கு வெளிநாடுகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ஆன்மீக நிகழ்வில் கலந்துகொண்டவர்களால் தான் மலேசியாவில் அதிகமானேருக்கு கொரோனா பரவ காரணமாக இருந்துள்ளது. பின்னணியிலேயே இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்தக் குழுக்களை உளவுத்துறை அடையாளம் கண்டுள்ள நிலையில் , அக்குழுவில் உள்ளடங்கிய ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள் அக்குரணை, புத்தளம், பாலாவி மற்றும் மூதூர் பகுதிகளைச் சேர்ந்தோர் என கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இந்த ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய முதல் குழுவில் அக்குரணை மற்றும் மூதூர் பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் உள்ளடங்குவதாகவும் அந்த குழு கடந்த 13 ஆம் திகதி நாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளில் இருந்தோர் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கிக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
2 ஆம் குழுவில் 5 பேர் உள்ளடங்குவதுடன் அவர்கள் பாலாவி மற்றும் புத்தளத்தை சேர்ந்தோர் எனவும் அவர்கள் கடந்த 15 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளதாகவும் உளவுத்துறை கண்டறிந்துள்ளது.
அத்துடன் 6 பேரை உள்ளடக்கிய மூன்றாம் குழு 17 ஆம் திகதி நாடு திரும்பியுள்ள நிலையில் அக்குழுவில் உள்ளடங்குவோர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தோர் என லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா கூறினார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் அவ்வாறு சென்று வந்த அனைவருக்கும், அவர்களுடன் தொடர்புகளை பேணியோருக்கும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட சுகாதார துறை ஆலோசனை வழங்கியுள்ளது