நாய் கடித்ததற்கு மிளகாய்த்தூள் சிகிச்சை பெற்றவர் மரணம்!
08 Jun,2019
நாய் கடித்ததற்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெறாமல் மிளகாய்த்தூள் தடவி சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார்.
கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணித்தியாலத்தில் அவர் உயிரிழந்தார்.
கலேவெல தேவஹூவ ஹீனுக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான சாந்த அபேரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் நாய்யொன்று அவரை கடித்துள்ளது. எனினும் அதற்கு வைத்திசாலையில் சிகிச்சைபெற்றுக்கொள்ளாது, அந்த காயத்தின் மேல் மிளகாய்தூளை தூவி சிகிச்சையளித்துள்ளார். இதனால் காயம் காய்ந்துவிடுமென உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், உடலில் ஏற்பட்ட சில மாற்றங்களை அடுத்து நேற்று பிற்பகல் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்திய பரிசோதனைக்குப் பின்னர், சில மணிநேரத்திலேயே மரணித்துவிட்டார்.