ஓமானில் இலங்கைத் தூதரக பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் மரணம்!
13 Jan,2023
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தப் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இங்கு தங்க வைக்கபட்டிருந்தவர்களில் சிலர் அண்மையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.