பொங்கல், பூஜை வழிபாடுகளுடன் திறந்து விடப்பட்ட கைதடிப் பாலம்!
03 Jul,2018
யப்பானிய அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட கைதடி கொங்கறீட் பாலம் இன்று முற்பகல் 10 மணிக்கு மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலை (ஏ9) வீதியில் கைதடிப் பகுதியில் அமைந்துள்ள இரும்புப் பாலத்திற்கு மாற்றீடாக அமைக்கப்பட்ட கொங்கரீட் பாலமே இன்று திறந்து விடப்பட்டது.
பாலத்தில் நடந்த பொங்கல், பூஜை வழிபாடுகளுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் ஒப்பந்த நிறுவனத்தினரும் இணைந்து மக்களின் பாவனைக்காக இதனைத் திறந்து விட்டனர். எனினும் 10 ஆம் திகதி பலாலிக்கு வரவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இப்பாலம் உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்படவுள்ளது.
இப் பாலத்தில், துவிச்சக்கரவண்டி பாதைக்கான சமிக்ஞை குறியீடுகளும் வரையப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் இப்பாலத்துடான வீதியிலேயே முதல் முறையாக இந்தக் குறியீடு வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.