ஈபிஆர்எல்எப் பத்மநாபா அணி தனித்துக் களமிறங்குகிறது
12 Dec,2017
சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் களமிறங்குவதற்காக முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈபிஆர்எல்எப் பத்மநாபா அணி இன்று கட்டுப்பணம் செலுத்தியது. அந்தக் கட்சியின் தலைவர் அ.வரதராஜப்பெருமாள், செயலாளர் சிறிதரன் உள்ளிட்டவர்கள் இன்று பி.ப. 2.40 மணியளவில் கட்டுப்பணத்தைச் செலுத்தினர்.
இதேவேளை, வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈபிஆர்எல்எப் பத்மநாபா அணி, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைகின்றது என செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே அந்தக் கட்சி இன்று தனியாகக் கட்டுப்பணம் செலுத்தியது.