கருணாவின் அணி மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது!
11 Dec,2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தியது.
கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்.
இன்று நாம் சுக நேரத்தில் எமது கட்சியின் சார்பாக போட்டியிடும் தலைமை வேட்பாளர்கள் மூலம் இரண்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கு கட்டுப்பணத்திணை செலுத்தியுள்ளோம்.அதில் கட்சி சுயேட்சையாக போட்டியிடுவதற்காக எமது மத்தியகுழுவின் தீர்மானங்களுக்கு அமைய போட்டியிடவுள்ளோம்.
கருணாவின் அணி மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது!
முதலில் வாகரை உள்ளுராட்சி மன்றத்தின் சார்பில் தலைமை வேட்பாளராக சின்னத்தம்பி துரைராசசிங்கம் உட்பட 21 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதுடன் வாழைச்சேனை உள்ளுராட்சி மன்றத்தின் சார்பில் தலைமை வேட்பாளராக சண்முகம் கதிரவன் உட்பட 26 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதில் ஏனைய தமிழ் பகுதிகளுக்கு எதிர்வரும் நாட்களில் தலைமை வேட்பாளர்களின் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தவுள்ளோம் என தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர்பற்று பிரதேச சபை, ஏறாவூர் நகரசபை, மண்முனைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றுக்கு வேட்புமனுக்களைக் கையளிக்கும் தினம் இன்று ஆரம்பமானதுடன், 14.12.2017 திகதி பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
அதே நேரம், ஏனைய சபைகளுக்கு 18ஆம் திகதி முதல் 21ஆம்திகதி பகல் 12 மணிவரையில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யமுடியும்