பிரபாகரனின் உடையை கழற்ற உத்தரவிட்டசரத்பொன்சேகா?
27 Aug,2018
யுத்தம் நிறைவுப்பெற்ற இறுதி நேரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலில் இருந்து சீருடையை அகற்றுமாறு சரத் பொன்சேகா உத்தரவிட்டார் என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சகி கலகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் யாழ். ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபாகரனின் உடலில் சீருடையை விட்டு வைப்பதற்காக சரத்பொன்சேகா இராணுவ அதிகாரிகளுடன் கூச்சலிட்டார். பிரபாகரனின் உடல் முதலில் தொலைக்காட்சிகளில் வெளியான போது அது சீருடையுடன் காணப்பட்டது. இதனை பார்த்த சரத்பொன்சேகா கடும் சீற்றமடைந்தார் என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரபாகரனது சீருடைகளை அகற்ற சரத் பொன்சேகா உத்தரவிட்டார், இதன் பின்னர் நான் பிரபாகரனின் உடலை முகாமிற்கு எடுத்து சென்று சீருடையை அகற்றிய பின்னர் மீண்டும் அந்த இடத்திற்கு கொண்டு வந்தேன் என்று சகி கலகே தெரிவித்தார் என குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.