காரமல் கேக்
13 Jun,2019
கோதுமை மாவு - 175 கிராம்,
வெண்ணெய் - 100 கிராம்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
ஜாம் - 30 கிராம்,
பால் - 1 டீஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - 120 கிராம்,
முட்டை - 2.
காரமல் செய்வதற்குத் தேவையானவை
தண்ணீர் 50 மி.லி,
சர்க்கரை - 50 கிராம்.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை 50 கிராம் போட்டு அடுப்பில் சூடாக்கவும். சர்க்கரை கரைந்து பழுப்பு நிறமாகும்போது தண்ணீரை விட்டு 5 நிமிடம் வரை கொதிக்க விடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.
கேக் செய்முறை
முட்டையின் வெள்ளையையும், மஞ்சள் கருவையும் தனித்தனியாகப் பிரிக்கவும். இரண்டையும் தனித்தனியாக நன்றாக பீட் செய்துகொள்ளவும். சர்க்கரையும், வெண்ணெயும் லேசாக ஆகும் வரை நன்றாக பீட் செய்துகொள்ளவும். இத்துடன் மஞ்சள் கருவை சேர்த்து பீட் செய்துகொள்ளவும். காரமல் சேர்த்து பிறகு சலித்த மாவை சேர்க்கவும். அதனுடன் அடித்த முட்டையின் வெள்ளைக்கருவை போட்டு மெதுவாக கலக்கவும். தேவையானால் பால் விடவும். 7 இஞ்ச் பேக்கிங் பேனில் வெண்ணெய் தடவி மாவு தூவி அதில் க.மாவு கலவையை போடவும். பிறகு 300C- 40 நிமிடம் பேக் செய்யவும். பேக் ஆனவுடன் எடுத்து ஆற வைக்கவும். கேக்கின் மேல் 30 கிராம் ஜாம் தடவி மற்றொரு கேக்கை அதன்மேல் வைத்து பரிமாறலாம்