பனிக்குடம் உடைவதற்கான 7 முக்கிய காரணங்கள்
22 May,2019
பனிக்குடம் உடைவதற்கான காரணங்களை, பின்னர் பார்ப்போம். முதலில் இந்த பனிக்குடம் என்றால் என்ன என்பதை இங்கு பார்ப்போம். பனிக்குடம் என்பது நீர் நிறைந்து இருக்கும் ஒரு பை. இந்த பனிக்குடத்தில் தான் தாயின் வயிற்றில் கருப்பை எனும் உறை இருக்கும். அந்த உறையில் நிறைந்துள்ள நீரில் தான் கரு உருவாகி வளரும். இந்த பனிக்குடத்தில் நிறைந்திருக்கும் நீரைத் தான் பனிக்குட நீர் (அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid) என்கிறோம்!
பனிக்குடம் உடைவதற்கு முக்கிய காரணங்கள்
கர்ப்பிணிகள் குறைந்த உடல் எடை கொண்டு இருந்தால்
கர்ப்பிணியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மாத கால கட்டத்தில் இரத்தக்கசிவு ஏற்பட்டாடிருந்தால்
பெண்களுக்கு முந்தைய பிரசவத்தில் குறை பிரசவம் நிகழ்ந்து இருந்தால்,
கர்ப்பிணிக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால்
கர்ப்பிணிக்கு சிறிய பிறப்புறுப்பு இருப்பது
கர்ப்பிணி உடலில் சத்துக்குறைவு
கருப்பையின் உட்சுவர்களில் எரிச்சல் ஏற்படுவது
போன்ற பிரச்சனைகள் தான் பனிக்குடம் உடைந்து நீர் வெளியேறுவதற்கான முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.