நுரையீரல் பாதிப்புகளில் மிக மோசமான நோய் காச நோய். உண்மையில் இதுவரை காசநோய்க்கு நிரந்தரமாக குணமளிக்கிற மருந்துகளோ சிகிச்சையோ கிடையாது. ஆனால், பாதிப்பில்லாமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. காச நோய்க்கு என்புருக்கி நோய் என்று ஒரு பெயரும் உண்டு. எவ்வளவு பெரிய ஆஜானுபாகு தோற்றத்தில் இருந்தாலும் காச நோய் வந்தவர்களை இவ்வியாதி கூனி குறுக வைத்துவிடும்.
காச நோயாளிகள் சில கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் அவர்கள் நோயின் பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுடன் மற்றவர்களுக்கும் அவர்களின் பாதிப்பு வராமல் செய்து கொள்ளலாம். காசநோயாளிகள் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெறுதல் அவசியம். மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்க, சளியை கண்ட இடத்தில் துப்பாமல் ஒரு குவளையில் பிடித்து எரித்து விட வேண்டும். எப்போது இருமினாலும் வாயை ஒரு துணியால் பொத்திக்கொண்டு இரும வேண்டும்.
குழந்தைகளுக்கு கட்டாயமாக பி.ஸி.ஜி. தடுப்பூசி போடுவது அவசியம். ஏனெனில் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் வராமல் இருக்க இந்த பி.ஸி.ஜி. தடுப்பூசி பயன்படும்.
காசநோயைப் போன்றே நுரையீரல் பாதிப்புகளில் மிக முக்கியமானது ஆஸ்துமா. இந்த பாதிப்பு பரம்பரை காரணமாகவும், சுற்றுப்புற சூழ்நிலை பாதிப்பினாலும், ஒவ்வாமை எனப்படுகிற அலர்ஜியினாலும் ஏற்படும்.
இந்த நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்க சரியான ஆலோசனை
துஷ்ட்டரை கண்டால் தூர விலகு என்பது போல் ஆஸ்துமா அலர்ஜியை ஏற்படுத்தும் பூவின் மகரந்தங்கள், முடி அதிகம் உள்ள செல்லப்பிராணிகளை வளர்ப்பது, ஒற்றடை அடிப்பது. வாசனை திரவியங்களை (சென்ட்) பயன்படுத்துவது, அனைத்து விதமான புகைகள், தூசி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஆஸ்துமா வந்தவர்களுக்கு அவர்களது பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சிறந்த மருந்துகள் உள்ளன. அவற்றை அவர்கள் விடாமல் சாப்பிட்டு வரவேண்டும். ஆனால் ஆஸ்துமாவை நிரந்தரமாக குணப்படுத்தும் மருந்துகள் இல்லை. எனவே ஆஸ்துமா நோயாளிகள் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.
ஆஸ்துமாவிற்கு உணவு முறையே சிகிச்சை
ஆஸ்துமா என்பது ஒவ்வாமையால் ஏற்படும் நோய் என்பது அனைவரும் அறிந்ததே. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் போதிலும் கூட ஆஸ்துமா தொல்லைக்கு பலர் ஆட்பட்டு வருகின்றனர்.
சிலருக்கு சுற்றுச்சூழல் நிலைமைகளாலும், சிலருக்கு கோதுமை, முட்டைகள், பால், சொக்லேட்டுகள், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்ற உணவுகளாலும் கூட ஆஸ்துமா ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
மேலும் சிலருக்கு மனச்சிக்கல்கள் காரணமாக ஆஸ்துமா ஏற்படுகிறது. இளம் வயதில் ஆஸ்துமா ஏற்படும் 25 சதவீதத்தினருக்கு உணர்வுபூர்வ பாதுகாப்பின்மை, பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் இன்மை ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் பரம்பரையில் யாருக்கேனும் சரும ஒவ்வாமை, ஆஸ்துமா இருந்தால் அது பின்வரும் தலைமுறையினரையும் பாதிக்கிறது. ஊட்டச் சத்து குறைபாடுகளாலும் அட்ரினலின் போதாமையாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள் .
உணவு பழக்க வழக்கமே சிகிச்சை நவீன மருத்துவத்தில் ஆஸ்துமாவை ஒழிக்க முடியவில்லை. தற்காலிக சிகிச்சைகளே உள்ளன. மேலும் ஆஸ்துமாவிற்கு கொடுக்கப்படும் மருந்துகள் நோயாளிகளை மருந்தடிமைகளாக மாற்றி விடுகிறது.
மேலும் இவைகள் ஆஸ்துமாவை நிரந்தரமாக்கி விடுகின்றன. ஆஸ்துமாவிற்கு பிரதான காரணமாக கூறப்படும் அலர்ஜியும் கூட தவறான வாழ்முறை, குறையும் தடுப்புசக்தி, உணவுப் பழக்க வழக்க தவறுகளால் குலையும் உடல் ஒத்திசைவு போன்றவற்றின் அறிகுறியே.
எனவே ஆஸ்துமாவிற்கு உண்மையான சிகிச்சை என்பது கழிவகற்ற உறுப்புகளின் பழுதை நீக்கி அதை நல்ல முறையில் செயலாற்றத் தூண்டுவது மற்றும் முறையான உணவுப் பழக்க வழக்கங்களால் தேவையற்ற மற்றும் நச்சுப் பொருட்களை உடலிலிருந்து அகற்றுவதுமாகும். முதலில் எலுமிச்சைசாறு, தேன் ஆகியவை மட்டுமே உட்கொண்டு 3 முதல் 5 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இந்த உண்ணா நோன்பு காலகட்டத்தில் வெந்நீர் கொண்டு குடலை சுத்தம் செய்ய வேண்டும்.
உண்ணா நோன்பிற்கு பிறகு உடல் நச்சுச் பொருளை அகற்ற வெறும் பழங்களை மட்டுமே 5 அல்லது 7 நாட்களுக்கு உட்கொள்வது நலம். பிறகு சிறிது, சிறிதாக பிற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம். நோய் குணமடைவதில் முன்னேற்றம் தெரியும் காலக்கட்டத்தில் சீரான இடைவெளிகளில் சிறு உண்ணா நோன்புகள் அவ்வப்போது தேவைப்பட்டால் மேற்கொள்வது நலம். ஆஸ்துமாவிற்கு காய்கறி உணவு முறைகளே சிறந்தது. மாச்சத்துகள், கொழுப்புச்சத்துகள் மற்றும் புரத உணவு வகைகளை குறைவாக உட்கொள்ள வேண்டும். பழங்கள், பச்சைக்காய்கறிகள், பழுத்த விதைகள் மற்றும் தானியங்களை அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
காலை உணவு: - உலர் கொடிமுந்திரியுடன் சிலவகை உலர் பழ வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
மதிய உணவு: - வேக வைத்த காய்கறிகளுடன் கோதுமை ரொட்டி அல்லது சப்பாத்திகள்.
இரவு உணவு-: சமைக்கப்படாத காய்கறிகளால் ஆன சாலட்.
இரவு உணவை உறங்கச் செல்வதற்கு 2மணி நேத்திற்கு முன்பு எடுத்துக் கொள்ளவும். கபம் சேரும் உணவு வகைகளான அரிசி, சீனி, அவரை விதைகள் மற்றும் தயிர், வறுக்கப்பட்ட ஜீரணிக்க சிரமம் ஏற்படுத்தும் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தேநீர், கோப்பி, மது, ஊறுகாய்கள், பதப்படுத்தப்பட்ட போத்தலில் அடைக்கப்பட்ட உணவுகளை கை விடுவது நல்லது.
முதல் சில தினங்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிறிது குணம் தெரிந்த பிறகு சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆஸ்துமா நோயாளிகள் தாங்கள் சாப்பிடும் திறனுக்குக் கீழே சிறிய அளவில் உணவு உட்கொள்ள வேண்டும்.
மேலும் உணவை நன்றாக அரைத்து மென்று விழுங்க வேண்டும். தினமும் 8 முதல் 10 டம்ளர் குடிநீர் அருந்த வேண்டும், சாப்பிடும் போது நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். கடுமையாக ஆஸ்துமா தாக்கும் போது, பசியின்மை ஏற்படும். அப்போது அவர்களை சாப்பிடச்சொல்லி வற்புறுத்தக்கூடாது. 2 மணிக்கொரு தரம் வெந்நீர் கொடுத்து வந்தால் போதுமானது.
ஆஸ்துமா சிகிச்சையில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. மூச்சுத் திணறல் இருக்கும் போது ஒரு பாத்திரத்தில் தேனை நிரப்பி அதை மூக்கின் அருகே வைத்து மூச்சை இழுத்தால் மூச்சு விடுதலில் உள்ள சிரமம் நீங்கும். இது ஒரு மணி நேரம் வரை தாங்கும். தேனின் வாசனையை உள் இழுத்தாலும், தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து அருந்தினாலும் நல்ல பலனை கொடுக்கும். ஆஸ்துமா சிகிச்சையில் தேன் ஒரு அற்புத மருந்தாக பரிணமிக்கிறது. மூச்சுக்குழல் நோய்களுக்கு ஓராண்டு பழைய தேன் உதவுவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க வேளாண்துறையில் ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் ரொபர்ட்டி ரெய் னால்ட்ஸ், ஆஸ்துமாவில் விட்டமின் பி-6 குறைபாடு பங்களிப்பு இருந்தால், நாளொன்றுக்கு இரு முறை விட்டமின் பி-6 ஐ 50 மி.கி. எடுத்துக்கொண்டால் மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்தும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார். தினமும் பி-6 விட்டமின் சத்துக்களை சேர்ப்பது மூச்சுத் திணறலை ஒரு வாரத்தில் குணப்படுத்தி விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
காற்று, சூரியன், தண்ணீர் இவை மூன்றும் மிகச் சிறந்த இயற்கை நிவாரணிகளாகும். வாரம் ஒரு முறை உண்ணா நோன்பு, எப்போதாவது குடல் சுத்தம், மூச்சுப் பயிற்சிகள், புதிய காற்று, உலர்ந்த தட்பவெப்பம், இலகுவான தேக பயிற்சிகள் ஆகியவைகளும் ஆஸ்துமாவின் நீண்ட நாளைய சிகிச்சைக்கு பங்களிக்கும்.