அறிமுகம் காற்றில் பறக்கும் டெஸ்லா கார்- எலான் மஸ்க்கின் புதிய சாதனை!

 

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான ‘Roadster’ என்ற பறக்கும் காரை அறிமுகம் செய்து அனைவரையும் வாயைப் பிளக்க வைத்துள்ளது. நேற்று டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) சோதனை மையத்தில் நடந்த பிரம்மாண்ட நிகழ்வில், எலான் மஸ்க் இந்த காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். இதன் போது டெஸ்லா நிறுவனம் தனது புதிய தலைமுறை Roadster கார், காற்றில் பறக்கும் அதிரடி செயல் விளக்கத்தையும் காட்டியது.

டெஸ்லாவின் இந்த ரோட்ஸ்டர் கார் ஒரு ராட்சத வளைந்த மேம்பாலம் போன்ற அமைப்பில் செங்குத்தாக ஏறி, தலைகீழாக (Upside-down) பயணித்தது. பின்னர் பாலத்திலிருந்து காற்றில் பாய்ந்து, காற்றில் ஒரு சுழற்சி அதாவது Flip அடித்து மீண்டும் தரையில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இந்த செயல் விளக்கத்தை நேரில் பார்த்தவர்களும், வீடியோவில் பார்த்தவர்களும் ஆச்சரியத்தில் வாய் பிளந்தனர்.

காரில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட கோல்ட்-கேஸ் த்ரஸ்டர்ஸ் மற்றும் கம்ப்ரஸ்ட் ஏர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே கார் காற்றில் பறக்கவும், காற்றில் சுழன்று பேலன்ஸ் பெற்று தரையில் சரியாக இறங்கவும் உதவியது. மேலும் இந்த பறக்கும் கார் வெறும் 0.81 வினாடிகளிலேயே 0 முதல் 60mph வேகத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.
‘
விண்வெளி மற்றும் கார் உலக தொழில்நுட்பங்களை இணைக்கும் ஒரு புரட்சிகரமான தயாரிப்பாக இது பார்க்கப்படுகிறது. இந்த காரின் தயாரிப்புப் பணிகள் 2028-ஆம் ஆண்டில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பறக்கும் கார் மாடலுக்கு, பொதுச் சாலைகளில் ஓட்டுவதற்கான சட்டப்பூர்வ அனுமதிகள் இன்னும் கிடைக்கவில்லை.