நடிகைராதிகா வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகன் வெட்டிக்கொலை

..

நடிகை ராதிகாவின் வீட்டில் எழில் செல்வி என்பவர் பல வருடங்களாகவே பணிபுரிந்து வருகிறார். இவர் பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் என்கிற கிராமத்தை சேர்ந்தவர். இவரின் மகன் பிரசாத். இவருக்கு வயது 19.

இந்நிலையில் தாய் எழில் செல்வியை பார்ப்பதற்காக சென்னை செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து பிரசாத் புறப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் தனது தாயையும் சந்திக்கவில்லை.. அதோடு வீடும் திரும்பவில்லை.

விசாரணையில் பிரசாத்தை அவரின் நண்பர்கள் தேவராசு, தினேஷ் ஆகியோர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பொன்னேரி கடற்கரையில் பிரசாந்த்தின் உடலை அவர்களை புதைத்துள்ளனர். தகராறு காரணமாக பிரசாத்தை கொலை செய்துவிட்டதாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அவர்களுக்கிடையே என்ன தகராறு? எதனால் கொலை நடந்தது? என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்..