மேஷ ராசி அன்பர்களே! உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. குடும்ப பிரச்சனைகளால் மனநிம்மதி பாதிக்கப்படலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். சந்தை நிலவரங்கள் உங்களுக்கு எதிராக இருக்கும். பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பார்க்க முடியாது. ஏற்றுமதித் துறையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் ஒரு சமூகமான முடிவுக்கு வரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் வரலாம். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். இன்று உங்கள் பலம்: மன உறுதியோடு தொழிலுக்கு தேவையான முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளும் பிரியமாக இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். பணப்பிரச்சனை உண்டாகும். தொழில் ரீதியான அலைச்சல் அதிகமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. எந்த வேலையும் சுலபமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 2. தொய்வு இல்லாமல் வேலையை முடிக்க முயற்சி செய்யுங்கள். 3. மனைவி கோபமாக இருந்தால் சமாதானப்படுத்துங்கள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்
ரிஷப ராசி அன்பர்களே! வீண் செலவுகள் வந்து உங்களை அதிகமாக சிரமப்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாமல் அக்கறை கொள்ள வேண்டும். திருமண வாய்ப்புகள் கைகூடி வரலாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து விடுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அரசியல்வாதி ஒருவரின் நட்பு பக்கபலமாக அமையும். பிள்ளைகளின் நடவடிக்கை நிம்மதியை கொடுக்கும். தொழிலுக்கு உதவியாக இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலையில் அவசரம் காட்ட வேண்டாம். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழிலில் லாபம் குறையும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிதமான நன்மை உண்டாகும். இன்று உங்கள் பலம்: எதையும் துணிவோடு செய்வீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். கையிருப்பு உங்களுக்கு பக்க துணையாக இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: கொடுத்த கடன் திரும்பி வர தாமதமாகும். வேலை இடத்தில் அழுத்தம் அதிகமாகும். உறவினர்களால் தொல்லை உண்டு. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 புதிய நண்பர்களின் பேச்சை நம்ப வேண்டாம். 2 அவசரப்பட்டு கடன் கொடுக்க வேண்டாம். 3 உறவுகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகர் பெருமான்.
மிதுன ராசி அன்பர்களே! மாறி வரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப உற்பத்தியை பெருக்க வேண்டும். சிறு வியாபாரத்திலும் லாபம் அதிகமாகும். தொழில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பாராத இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வருமானம் பெருகும். வங்கியில் இருந்து சுலபமாக கடன் கைக்கு வந்து சேரும். வெளியூர் பயணங்களில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்தவர்கள் தனலாபம் அடைவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றி பெறுவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடினமாக உழைப்பார்கள். இன்று உங்கள் பலம்: முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் சாதகமான நிலை இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: மனைவி எதற்கெடுத்தாலும் கோபப்படுவார். திடீர் செலவுகள் வந்து சிரமப்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வீட்டு விஷயங்களை வெளியில் சொல்லக்கூடாது. 2 பிள்ளைகளிடம் கோபமாக பேசக்கூடாது. 3 அடுத்த ஒரு விஷயத்தில் தலையிடக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.
கடக ராசி அன்பர்களே! நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு கட்ட பெயர் எடுக்க வேண்டாம். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. வியாபாரம் சிறப்பாக நடக்கும். அந்த வகையில் வருமானம் அதிகரிக்கும். பேச்சுவார்த்தையில் நிதானம் விளக்க வேண்டாம். நண்பர்கள் மூலமாக நல்ல வாய்ப்பு உருவாகும். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கையாக செயல்படுங்கள். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்தவர்கள் நினைத்ததை முடிப்பீர்கள் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லாபம் அடைவார்கள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: கேட்ட இடத்தில் பண உதவி வந்து சேரும். வியாபாரத்தில் நீங்கள் நினைத்தது நடக்கும். இன்று உங்கள் பலவீனம்: சட்டென்று கோபம் வந்துவிடும். உடனே வேலையை முடிக்க வேண்டும் என்று சிந்தனை இருக்காது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வாகனத்தை கவனமாக ஓட்ட வேண்டும். 2 மனைவியிடத்தில் கோபத்தை காட்டக்கூடாது. 3 வியாபாரத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரம் பெருமான்.
சிம்ம ராசி நண்பர்களே!வியாபாரத்திற்கு நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். கேட்ட இடத்தில் பணம் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும். கொடுத்த கடன் உரிய நேரத்தில் திரும்ப கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த காரியம் நடக்கும். சந்திராஷ்டமம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லாபம் அடைவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நினைத்ததை முடிப்பார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில் உதவி பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: வியாபாரத்துக்கு தேவையான உதவி கிடைக்கும். நீங்கள் நினைத்தது தடங்கல் இல்லாமல் நடக்கும். இன்று உங்கள் பலவீனம்: ஞாபக மறதி உங்களை சிரமப்படுத்தும். குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியாத நிலை உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். 2 சொந்தக்காரர் விஷயத்தில் தள்ளி இருக்க வேண்டும். 3 குடும்பத்தில் குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
கன்னி ராசி அன்பர்களே! தொழிலில் போட்டியும் பொறாமையும் இருக்கும். வியாபாரத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பணம் காலதாமதமாக வந்து சேரும். நண்பர்கள் வகையில் சாதகமான நிலை இல்லை. வருமானம் சற்று மந்தமாகவே காணப்படும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த நன்மையில் சிறிது இடையூறு ஏற்படலாம். ஏதோ ஒரு வகையில் மனவழுத்தம் அதிகரிக்கும். வேலை அதிகமாக இருப்பதால் தூக்கம் கெடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மன பலம் குறையும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணச் சிரமம் அடைவார்கள். இன்று உங்கள் பலம்: நீங்கள் சொன்ன காரியத்தை நண்பர்கள் தட்டாமல் செய்வார்கள். மன உறுதியோடு காரியம் செய்வீர்கள். இன்று உங்கள் பலவீனம்: வாக்கு கொடுத்து அதை நிறைவேற்ற முடியாமல் தடுமாறுவீர்கள். கெடுதல் செய்யும் உறவினர்களை ஒதுக்க முடியாமல் இருப்பீர்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 தொழில் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2 மனைவி புரியாமல் நடந்து கொண்டால் சரி செய்ய வேண்டும். 3 பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! வேலை இடத்தில் பணிச்சுமை கூடுதலாக இருக்கும். உங்களின் திறமைக்கேற்ப ஊதிய உயர்வும் பதவி மாற்றமும் ஏற்படும். நீங்கள் நினைக்கின்ற காரியத்தை செய்து முடிக்கின்ற வழி அமையும். உறவினர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு உண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரம் அதிகரித்து கையில் பணம் தாராளமாக புரளும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு காரியம் விருத்தியாகும் சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு நினைத்தது நடக்கும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கடைவார்கள். இன்று உங்கள் பலம்: எந்த காரியத்தை எடுத்தாலும் வெற்றி பெறுவீர்கள். பண வரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: செலவுகள் அதிகமாகி சிரமப்படுத்தலாம். கணக்கு வழக்குகளை சரி செய்யாததால் சின்ன சிரமம் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கடன் கொடுப்பதில் அவசரப்பட வேண்டாம். 2 மனைவியிடம் பேசும் போது கோபத்தை குறைக்க வேண்டும். 3 அன்புத் தொல்லைகள் அதிகமாகும். அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
விருச்சிக ராசி அன்பர்களே! அவசியமில்லாத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய நிலை வரலாம். பணத்தின் மதிப்பை உணரும் நேரம். இது சேமிப்பு அதிகரிக்க வழிகள் கிடைக்கும். தொழில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். பூர்வீக சொத்து பிரச்சனை பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனைவியின் ஒத்துழைப்பு உங்களுக்கு உற்சாகம் தரும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு தடங்கல் விலகும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் ஊக்கத்துடன் வேலை பார்ப்பார்கள். கேட்டை நட்சத்திரக்காரர்கள் தன லாபம் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: தொழிலில் வருமானம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: உறவினர்களிடம் இருந்து தொல்லைகள் வரலாம். வேலை இடத்தில் பணிச்சுமை கூடும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வாகனங்கள் ஓட்டும் போதும் சாலையை கடக்கும் போதும் கவனம். 2 பிள்ளைகளிடம் அதிக நேரத்தை செலவிட வேண்டும். 3 தொல்லை தரும் நண்பர்களிடம் ஒதுங்கி இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கரு நீலம். வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி.
தனுசு ராசி அன்பர்களே! உங்கள் புத்திசாலித்தனத்தால் வியாபாரம் பெருகும். நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் நீங்கள் நினைத்தது நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் மறைந்து மன நிம்மதி கிடைக்கும். உறவினர்கள் உதவி தக்க சமயத்தில் உங்களுக்கு வந்து சேரும். நண்பர்களால் நன்மை உண்டாகும். தொட்ட காரியத்தில் தடங்கல் இல்லாமல் வெற்றி பெறும் நிலை உருவாகும். அரசாங்க உதவிகள் தாராளமாக வந்து சேரும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு காரியம் வெற்றியாகும். பூராட நட்சத்திரக்காரர்கள் நினைத்ததை அடைவார்கள். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் மன நிம்மதி பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: வருமானம் கூடி பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். இன்று உங்கள் பலவீனம்: நண்பர்களின் பேச்சை தட்ட முடியாத நிலை உண்டாகும். வேலை காரணமாக வீட்டிற்கு வர தாமதமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பஸ்ஸில் போகும்போது பரிசை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். 2 குடும்பத்தில் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 3 ஆடம்பரமாக செலவு செய்யக் கூடாது. அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன்.
மகர ராசி அன்பர்களே! வியாபாரத்தில் அதிக முன்னேற்றம் காணப்படும் தொழில் துறைகளில் இருந்த போட்டி விளக்கும் வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும் நன்கள் நண்பர்கள் மூலமாக வர வேண்டிய உதவி தாமதமில்லாமல் கிடைக்கும் வேலை இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் நீண்ட நாட்களாக தொந்தரவு செய்த நோய் விலகும் தாய் தந்தையரின் ஆசி உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் நினைத்ததை முடிப்பார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வருமானத்தை அதிகரிப்பார்கள். இன்று உங்கள் பலம்: எடுத்த காரியத்தை முடிக்கின்ற மன பலம் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்தாசை உதவியாக இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: அவசியமில்லாத செலவுகள் வந்து தொந்தரவு செய்யும். மனைவிக்கு சிறு உடல் கோளாறு ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வியாபாரத்தில் சின்ன விஷயத்தில் கூட அலட்சியம் கூடாது. 2 வேலை அதிகம் இருந்தாலும் பிள்ளைகளிடம் நெருக்கமாக இருக்க வேண்டும். 3 பக்கத்து வீட்டு விவகாரத்தில் தலையிடக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.
கும்ப ராசி அன்பர்களே! வீட்டிலும் வெளியிலும் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் பெருகும். தொழிலில் நீங்கள் நினைத்தபடி மேன்மை கிடைக்கும். வெளியூர் பயணங்கள் வெற்றியாகும். நண்பர்களின் உதவி தக்க நேரத்தில் வந்து சேரும். வேலை இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு வருமானம் பெருகும். வெளியூர் பயணங்கள் செல்லும் நிலை உருவாகும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்லது நடக்கும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் பலம்: தேடிப் போகாமலேயே தானாக உதவி வந்து சேரும். உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் தகுந்த மரியாதை கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: நீண்ட நாட்களாக ஒரு பிரச்சனை உங்கள் மனதை குடையும். குடும்பத்தில் சிறு சலசலப்பு தோன்றும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கடன் கொடுப்பதில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் 2 நெருக்கம் இல்லாத நபர்களிடம் குடும்ப விஷயங்களை சொல்ல வேண்டாம். 3 இரவு நேரத்தில் தனியாக வாகனம் ஓட்டிச் செல்ல வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.
மீன ராசி அன்பர்களே! திருமணம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியம் இன்று நடக்கும் வேலை இடத்தில் உங்களின் பொறுப்பு கூடும் மன தைரியத்தோடு எதையும் சந்திப்பீர்கள் கவர்ச்சியான பேச்சு எதிரிகளையும் நண்பர்களுக்கும் தொழிலில் லாபம் பெருகும் வியாபாரத்தில் நீங்கள் நினைத்தபடி வருமானம் அதிகரிக்கும் கடன் சுமை குறைந்து மன நிம்மதி உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்புகள் சேரும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பண வரவு பெறுவார்கள். ரேவதி நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: நினைத்ததெல்லாம் தடங்கல் இல்லாமல் நடக்கும். வருமானம் பெருகி கையில் காசு புரளும். இன்று உங்கள் பலவீனம்: நீங்கள் சும்மா இருந்தாலும் வீடு தேடி வில்லங்கம் வரும். வெளியூர் பயணத்தில் சின்ன தடங்கல் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கண்ட இடத்தில் விளைவு உயர்ந்த பொருட்களை வைக்கக்கூடாது. 2 அந்நிய பெண்களிடம் நெருக்கமாக பழக வேண்டாம். 3 வெளியூர் செல்லும் போது உணவு கட்டுப்பாடு வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.
இன்றைய பஞ்சாங்கம் தேதி 12 – ஐப்பசி – பராபவ வருடம் வியாழன் நாள் வியாழன் திதி சதுர்த்தி (up to 10:10 pm) பஞ்சமி (up to October 30, 7:25 pm) நட்சத்திரம் ரோஹிணி (up to 11:11 am) மிருகசீரிடம் (up to October 30,9:04 am) யோகம் மரண யோகம் நல்ல நேரம் 10:45 – 11:45 am / 12:15 – 1:15 pm கௌரி நல்ல நேரம் 6:30 – 7:30 pm இராகு காலம் மதியம் 1.30 – 3.00 எமகண்டம் காலை 6.00 – 7.30 குளிகை காலை 9.00 – 10.30 சூலம் தெற்கு பரிகாரம் தைலம் சந்திராஷ்டமம் விசாகம், அனுஷம் சூரியோதயம் 6:05 AM சூரிய அஸ்தமனம் 5:39 PM சந்திரோதயம் Oct 29 8:39 PM சந்திர அஸ்தமனம் Oct 30 10:09 AM



