பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற விமான விபத்தில் 4 ராணுவ விமானிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் விமானப்படைக்குச் சொந்தமான இரு பயிற்சி விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்ட விபத்தில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவுக்கு தெற்கே உள்ள லிபா நகரில் அமைந்துள்ள பெர்னாண்டோ விமானப்படை தளத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 4 விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிகாரிகள், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, நடுவானில் இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதாக குறிப்பிட்டனர்.
விபத்தில் சிக்கியது பிலிப்பைன்ஸ் விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு எஸ்எப்-260 (SF-260) ரக பயிற்சி விமானங்கள் என்பதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக பிலிப்பைன்ஸ் விமானப்படையின் அனைத்து எஸ்எப்-260 ரக விமானங்களின் இயக்கமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குறைந்த உயரத்தில் பிறந்து கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், பிலிப்பைன்ஸ் விமானப்படை தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.



