நிலநடுக்கம்: திபெத்தில்  7 ரிக்டர் அளவில் பதிவு  ; 16 பேர் பலி! 

 

திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவில் 7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் 300க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமானது. தொடர்ந்து அப்பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக, சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 10.33 மணியளவில், நாக்சு நகரத்தின் பாக்கன் கவுன்டியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. திபெத்திய பீடபூமி பகுதி, யுரேசியா மற்றும் இந்திய டெக்டோனிக் தட்டுகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.