7 எண்ணெய் மீது ஈரான் தாக்குதல் ஹோர்முஸ் நீரிணையில் ஒரே நாளில்

 

ஹோர்முஸ் நீரிணையில் ஒரே நாளில் 7 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. இதில் எண்ணெயை ஏற்றிச் சென்று கொண்டிருந்த நான்கு கப்பல்கள் நேரடியாகத் தாக்கப்பட்டு தீப்பிடித்ததாகவும், மற்ற மூன்று கப்பல்கள் கடல்சார் கண்ணிவெடிகளில் (naval mines) சிக்கி சேதமடைந்ததாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல்களில் சேதமடைந்தவை எந்த நாட்டு கப்பல்கள், உயிரிழப்புகள் எத்தனை என்பன குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் முழு அளவிலான போர் மீண்டும் தொடங்குமோ என்ற கவலைகளால் ஒருபக்கம் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது தகால்க் நடத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து ஹோர்முஸ் நீரிணையின் மற்ற பகுதிகள் வழியாக எண்ணெய்க் கப்பல்கள் கடந்து செல்ல அமெரிக்கா உதவினால், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் IRGC எச்சரித்துள்ளது.