மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்-அக்டோபர்- 22-2026

 

மேஷ ராசி அன்பர்களே! நினைத்த காரியங்கள் தாமதமாக நடக்கும் நாள். வியாபாரம் சற்று மந்தமாகவே நடக்கலாம். தொழிலுக்கு சில எதிர்ப்புகள் தோன்றலாம். திடீர் செலவுகள் வந்து சிரமப்படுத்தும். உங்களின் பொறுப்பு அலுவலகத்தில் அதிகரிக்கும். தேவையில்லாத சில சம்பவங்கள் வேலை இடத்தில் நடக்கலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புரிந்து கொள்ளாத உறவுகளால் மனச்சங்கடம் ஏற்படலாம். வெளியூர் பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய தாமதம் அடைவார்கள்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுப்புகள் அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை சுமை கூடும்.

இன்று உங்கள் பலம்:

திட்டம் போட்டு வேலை முடிக்கும் திறனை அதிகரிப்பது. அவசியமான நேரத்தில் அரசு அதிகாரி உதவி கிடைப்பது.

இன்று உங்கள் பலவீனம்:

குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை வரும். வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 பண விஷயங்களில் நிதானம் தவற கூடாது.

2 முக்கியமான காரியங்களை தள்ளிப் போடக்கூடாது.

3 அலட்சியமாக வரவு செலவு கணக்கு எழுதக்கூடாது.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல்

வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்

ரிஷப ராசி அன்பர்களே! அதிரடியான செய்திகள் வந்து சேரும் நாள். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் இடையூறுகள் விலகும். தொழில்துறைகளில் விறுவிறுப்பு அதிகரிக்கும். எதிர்பாராத லாபம் கிடைக்கும். கையில் தாராளமாக பணம் புழங்கும். நினைத்த காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். உங்களின் செல்வாக்கு வேலை இடத்தில் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டு உற்சாகத்தை கொடுக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு பெறுவார்கள். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை அடைவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: தொழிலுக்கு தேவையான உதவிகள் உடனுக்குடன் கிடைக்கும். அரசியல்வாதியின் ஆதரவு ஊக்கம் தரும். இன்று உங்கள் பலவீனம்: உங்கள் எண்ணத்திற்கு உரிய மரியாதை கிடைக்காமல் போகலாம். குழந்தைகளின் போக்கு மன சஞ்சலம் தரும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஆடம்பரச் செலவுகளில் மனம் ஆசைப்படக்கூடாது. 2 பண வரவை சேமிப்பாக மாற்ற வேண்டும். 3 உரிய நேரத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.

மிதுன ராசி அன்பர்களே! எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும் நாள். செய்யும் வேலையில் திருப்தி உண்டாகும். விருப்பப்பட்ட இடமாறுதல் ஏற்படலாம். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. மேல் அதிகாரி ஆதரவால் சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் துறையில் இருந்த இடையூறுகள் நீங்கி வியாபாரம் பெருகும். தகவல் தொழில்நுட்பத் துறையில் மேன்மை உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் அதிகரிக்கும். முக்கிய கடன்கள் அடைபடும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லாபம் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றிக்கோட்டை தொடுவது. சலிப்பில்லாமல் வேலை பார்ப்பது. இன்று உங்கள் பலவீனம்: இனம் தெரியாத சோகம் மனதை பிசைவது. நேரத்திற்கு தூங்க முடியாத நிலை உண்டாவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 மனைவியின் பேச்சை காது கொடுத்து கேட்க வேண்டும். 2 வயது வந்த நடவடிக்கை கண்காணிக்க வேண்டும். 3 அன்றன்று கணக்கு வழக்குகளை சரி பார்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.

கடக ராசி அன்பர்களே! மக்கள் செல்வம் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் அதிகமான லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்த எதிர்ப்புகள் மாறும். வேலை இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். கையிருப்பு கூடும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். அரசு வேலையில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடு நடக்கும். யோக பலன்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மையான பலன் பெறுவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் அடைவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றி பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: தொழிலிருந்த போட்டிகளை சாமர்த்தியமாக விலக்குவீர்கள் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: அடுத்தவரை நம்பி காரியம் பார்க்க நினைப்பது. உறவினர்களின் போக்கை கண்டுகொள்ளாமல் இருப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 தொலைபேசியில் வரும் ஆசை வார்த்தைகளில் மயங்க கூடாது. 2 அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணம் கொடுக்கக் கூடாது. 3 பங்கு பரிவர்த்தனையில் அலட்சியமாக இருக்கக் கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.

சிம்மராசி அன்பர்களே! ஏற்ற தாழ்வான பலன்கள் நடக்கும் நாள் இன்று. நீங்கள் எதிர்பார்த்த செய்தி தாமதமாக வரக்கூடும் உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் தோன்றலாம் வீட்டில் மருத்துவ செலவு வரலாம் வியாபாரத்தில் மந்தமான பலன்கள் கிடைக்கும் தொழில்துறையில் சில இடையூறுகள் ஏற்படலாம் நெருங்கிய நண்பரே எதிர்ப்பாக நடக்கும் நிலை உருவாகலாம் பணிச்சுமையால் வேலையில் கவனம் சிதறலாம் மேலதிகாரிகளின் அழுத்தம் அதிகரிக்கலாம். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன அழுத்தம் அடைவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செலவுகள் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனப் பழுது உண்டாகும். இன்று உங்கள் பலம்: நேர்மையாக நடப்பதில் உறுதியாக இருப்பீர்கள் தொழிலை நடத்த பண இருப்பை சரி செய்வீர்கள். இன்று உங்கள் பலவீனம்: சந்திராஷ்டமம் என்பதால் தேவையில்லாத பிரச்சினைகள் வரலாம். சில காரியத்தடைகள் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 மோட்டார் சைக்கிளில் கவனமுடன் பயணம் செய்ய வேண்டும். 2 சரியாக வீட்டை பூட்டினோமா என்று சோதிக்க வேண்டும். 3 பணம் நகைகளை பத்திரமாக வைக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.

கன்னி ராசி அன்பர்களே! சுப செய்திகள் வந்து சேரும் நாள். உங்கள் சொல்லுக்கு மரியாதை ஏற்படும். தொழிலில் நேர்மையும் திறமையும் வருமானத்தை பெருக்கும். வேலை இடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வருமான உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் பெருகி கையில் பணம் புரளும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு பெறுவார்கள்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு பெறுவார்கள்.

இன்று உங்கள் பலம்:

எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியை உறுதி செய்வீர்கள். அரசியல்வாதி ஒருவர் பக்கபலமாக இருப்பார்.

இன்று உங்கள் பலவீனம்:

வேலை இடத்தில் கவனக்குறைவாக நடந்து கொள்வது. திடீரென குழப்பம் அடைவது.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 கொடுக்கல் வாங்கலில் நிதானம் தவறக்கூடாது.

2 வங்கிக் கணக்கின் ரகசிய எண்ணெய் சொல்லக்கூடாது.

3 வாட்ஸ் அப்பில் வரும் தேவையில்லாத லிங்கை திறக்க கூடாது.

அதிர்ஷ்ட எண்: 1,9

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு.

வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.

துலாம் ராசி அன்பர்களே! உயர்வு தாழ்வான பலன்கள் நடக்கும் நாள். சில சிரமமான நிலைகளை தொழிலில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் சுணக்கமான நிலை காணப்படும். மற்றவரின் தவறை சுமக்க வேண்டிய கட்டாயம் வேலை இடத்தில் ஏற்படும். அலுவலகத்தில் வருமான பாதிப்பு ஏற்படலாம். வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த நன்மை தடைபடலாம். குலதெய்வத்தின் அருளால் நன்மைகள் நடக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு மிதமான பலன் உண்டாகும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் திடீர் செலவுகள் உண்டா . இன்று உங்கள் பலம்: தடைகள் தாண்டி வெற்றி பெற கடுமையாக உழைப்பீர்கள் அரசாங்க உதவி பக்கபலமாக அமையும். இன்று உங்கள் பலவீனம்: உறவினர்கள் எதிர்ப்பு மனச்சங்கடத்தை ஏற்படுத்தும். வீட்டிலும் குழப்பமான சூழ்நிலை நிலவு கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஆன்லைன் சூதாட்டங்களில் ஆசை வைக்கக் கூடாது 2 அந்நிய பெண்களிடம் தள்ளி இருக்க வேண்டும். 3 நண்பர்களோடு தேவையில்லா இடங்களுக்கு செல்லக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்

விருச்சிக ராசி அன்பர்களே! நினைத்த காரியம் நிறைவேறும் நாள். வியாபாரம் சிறப்பாக நடக்கும். வருமானம் பெருகும். தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலை இடத்தில் உங்களின் திறமை வெளிப்படும். அரசு அலுவலகங்களில் வேலை நடக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். பொருள் வரவு தாராளமாக இருக்கும். வீட்டில் நல்ல காரியம் நடக்கும். கடன் சுமை குறையும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். குலதெய்வத்தின் அருளால் குறைகள் தீரும்.

விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரக்காரர்கள் பண வரவு அதிகரிக்கும்.

கேட்டை நட்சத்திரக்காரர்கள் பூமி லாபம் கிட்டும்.

இன்று உங்கள் பலம்:

புதிய முதலீடுகளை செய்வதற்காக தனித்துவமான திட்டம் போடுவீர்கள். எதையும் நிதானமாக யோசித்து செயல்படுவீர்கள்.

இன்று உங்கள் பலவீனம்:

சில நேரங்களில் தேவையற்ற இடையூறுகள் சிரமப்படுத்தும். தூக்கமின்மை பலவீனப்படுத்தும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 குறை சொல்லும் உறவினர்களை கவனமாக அணுக வேண்டும்.

2 கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானமாக இருக்க வேண்டும்.

3 பிள்ளைகளின் விஷயத்தில் அன்போடு அணுக வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 8,5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை

வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்.

தனுசு ராசி அன்பர்களே! சிறப்பான வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். தொழில்நுட்பத்தோடு தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வருமானம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நடக்குமா? என்று இருந்த ஒரு காரியம் நடந்து உங்களை உற்சாகப்படுத்தும். மளமளவென வியாபார வாய்ப்புகள் பெருகும். உறவினர்களின் ஆதரவு ஊக்கத்தை கொடுக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.

மூல நட்சத்திரக்காரர்களுக்கு தன லாபம் உண்டாகும்.

பூராட நட்சத்திரக்காரர்கள் நல்லது நடக்கும்.

உத்திரம் நட்சத்திரக்காரர்கள் மதிப்பு உயரும்.

இன்று உங்கள் பலம்:

கேட்ட உதவிகள் தடையில்லாமல் வந்து சேரும். அரசியல்வாதியின் நட்பு வியாபார பலத்தை அதிகரிக்கும்.

இன்று உங்கள் பலவீனம்:

சில நேரங்களில் கோபத்தை அடக்க முடியாத நிலை உண்டாகும். உறவினர்கள் எதிர்ப்பு மனதை காயப்படுத்தும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 அடுத்தவர் வீட்டு விஷயத்தில் தலையிட வேண்டாம்.

2 நேரம் தவறாமல் வேலைக்கு செல்ல வேண்டும்.

3 வேண்டா வெறுப்பாக வேலை செய்யக்கூடாது.

அதிர்ஷ்ட எண்: 3,6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம்

வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி

மகர ராசி அன்பர்களே! எதிர்ப்புகளை தாண்டி வரும் நாள். தொழிலில் மறைமுக எதிர்ப்பு இருந்தாலும் அது விலகும் .அலுவலகத்தில் பொறாமை உணர்ச்சி கூடும். ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடக்கும். வேலை மாறுதலுக்கு வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் சில சறுக்கல்கள் உண்டாகலாம். ஆனால் அதுவும் உடனே சரி ஆகும். சுபச் செலவுகள் வரும். எதிர்ப்புகளை அடையாளம் கண்டு விலகும் நிலை உருவாகும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படலாம். இறைவன் அருளால் நல்லது நடக்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு வருமானம் பெருகும். திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு பதவி மாற்றம் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு பொருள் சேர்க்கை அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: வியாபார எதிர்ப்புகளை முறியடிக்கும் மனத்தின்மை ஏற்படும். பொருளாதார சேமிப்பு கை கொடுக்கும். இன்று உங்கள் பலவீனம்: மனைவி மக்களின் புரிந்து கொள்ளாத நிலை மனதை சங்கடப்படுத்தும். அரசு வேலை சற்று தாமதமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பற்று வரவு கணக்கில் அலட்சியம் வேண்டாம். 2 அவசரப்பட்டு யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. 3 அடுத்தவரை நம்பி பெரிய தொகையை கொடுக்கக் கூடாது. அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.

கும்ப ராசி அன்பர்களே! நல்ல காரியங்கள் நடக்கும் நாள். விறுவிறுப்பாக வியாபாரம் நடக்கும். பண வரவு அதிகரிக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வெளியூர் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகப் பணிகளில் திருப்தி ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உற்சாகப்படுத்தும். வீட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்படும். குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிக்கும் வாய்ப்பு உண்டாகும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு நினைத்தது நடக்கும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு செல்வாக்கு உண்டாகும். இன்று உங்கள் பலம்: சலிப்பு இல்லாமல் உழைக்கும் மன உறுதியோடு செயல்படுவது. லாபத்தை அதிகரிக்கும் திட்டங்கள் தீட்டுவது. இன்று உங்கள் பலவீனம்: உங்களின் பேச்சை வீட்டில் உள்ளவர்கள் தவறாக புரிந்து கொள்வது. எதற்கெடுத்தாலும் உறவினர்கள் குற்றம் கூறுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 நல்ல பொழுதை தூங்கி கெடுக்கக் கூடாது. 2 சரியான நேரத்தில் அலுவலகம் செல்ல வேண்டும். 3 நாளை பார்க்கலாம் என்று வேலையை தள்ளிப் போடக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.

மீன ராசி அன்பர்களே! எதிர்பார்த்த பலன்கள் நடக்கும் நாள். தொழில்நுட்பத்தோடு நீங்கள் செய்யும் வியாபாரத்திற்கு வெற்றி கிடைக்கும். பங்கு பரிவர்த்தனையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக லாபம் வரும். தகவல் தொழில்நுட்பத்தில் மேன்மை ஏற்படும். அலுவலகத்தில் உங்களின் திறமை பாராட்டுக்குள்ளாகும். வேலை இடத்தில் நுட்பமான வேலை திறன் வெளிப்படும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பார்த்த காரியம் நடக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தன லாபம் அதிகரிக்கும்.

ரேவதி நட்சத்திரக்காரர்கள் வருமான உயர்வு உண்டாகும்.

இன்று உங்கள் பலம்:

வருமானத்தைப் பெருக்க புதிய வகையில் திட்டமிட்டு செயல்படுவது. நண்பரின் உதவியை பயன்படுத்திக் கொள்வது.

இன்று உங்கள் பலவீனம்:

உணர்ச்சிவசப்பட்டு தடுமாற்றம் அடைவது. அடிக்கடி கோபப்பட்டு பேசுவது.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 பங்கு பரிவர்த்தனையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

2 வரவு செலவு கணக்கு அலட்சியம் கூடாது.

3 வாடிக்கையாளர்களிடம் கோபப்படக்கூடாது.

அதிர்ஷ்ட எண்: 8,5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்.

வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.

இன்றைய பஞ்சாங்கம் தேதி 5 – ஐப்பசி – பராபவ வருடம் வியாழன் நாள் வியாழன் திதி ஏகாதசி (up to 2:48 pm) துவாதசி (up to October 23, 2:36 pm) நட்சத்திரம் சதயம் (up to 8:49 pm) பூரட்டாதி (up to October 23,9:03 pm) யோகம் மரண-சித்த யோகம் நல்ல நேரம் 10:45 – 11:45 am / 12:15 – 1:15 pm கௌரி நல்ல நேரம் 6:30 – 7:30 pm இராகு காலம் மதியம் 1.30 – 3.00 எமகண்டம் காலை 6.00 – 7.30 குளிகை காலை 9.00 – 10.30 சூலம் தெற்கு பரிகாரம் தைலம் சந்திராஷ்டமம் ஆயில்யம், மகம் சூரியோதயம் 6:03 AM சூரிய அஸ்தமனம் 5:42 PM சந்திரோதயம் Oct 22 3:00 PM சந்திர அஸ்தமனம் Oct 23 3:12 AM