மேஷ ராசி அன்பர்களே! சிறப்பான பலன்கள் நடக்கும் நாள். அலுவலகத்தில் உங்களின் திறமை பாராட்டை கொண்டு வரும். சம்பள உயர்வு கிடைக்கலாம். விருப்பப்பட்ட இடங்களுக்கு பணி மாறுதலும் வரலாம். வியாபாரத்தில் சிறப்பான வருமானம் வரும். தொழில்துறையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஊற்றெடுக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குலதெய்வத்தின் அருளால் நல்லது நடக்கும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி அடைவார்கள்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை பெறுவார்கள்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள்.
இன்று உங்கள் பலம்:
அரசாங்க வேலையில் தடை எதுவும் இருக்காது. பெரிய மனிதனின் ஆதரவு பக்க பலமாக இருக்கும்.
இன்று உங்கள் பலவீனம்:
வாகனப் பொழுது ஏற்பட்டு சிரமப்படுத்தும். மன அழுத்தம் கூடி தூக்கம் கெடும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 அலுவலக வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.
2 அவசரப்பட்டு யாருக்கும் ஜாமீன் கொடுக்கக் கூடாது.
3 வீட்டு ரகசியங்களை வெளியில் பேசக்கூடாது.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல்
வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்
ரிஷப ராசி அன்பர்களே! எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும் நாள். உங்களின் புதிய தொழில்நுட்பம் வியாபாரத்தில் பெரிய வெற்றியை கொடுக்கும். லாபம் அதிகரிக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். மின்சார, மின்னணு பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் போகவேண்டிய கட்டாயம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு அனுசரணையாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் பெறுவார்கள். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆபரண யோகம் அடைவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன யோகம் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: புத்திசாலித்தனத்தால் மறைமுக எதிரிகளை சமாளிப்பீர்கள். வெளிநாட்டு நண்பரின் உதவி கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: உங்களிடம் உதவி பெற்ற உறவினர் நன்றி மறந்து நடப்பது. வேலை இடத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்படுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வாகனங்களில் போகும் போது எச்சரிக்கை தேவை. 2 பிள்ளைகளின் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். 3 அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசாதீர்கள். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.
மிதுன ராசி அன்பர்களே! மிக முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் உங்களின் சிந்தனை திறன் வெளிப்படும். புதிய முதலீடுகள் செய்ய வாய்ப்பு ஏற்படும். பார்ட்னர்களின் ஒத்துழைப்பு நல்ல விதமாக இருக்கும். பெரிய மனிதரின் ஆதரவு கிடைக்கும். அலுவலகங்களில் வேலை சுமை குறையும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட ஏற்பாடு நடக்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல பலன் பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பதவி உயர்வு அடைவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணி மாறுதல் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: உங்களின் எதிர்பார்ப்பு உடனுக்குடன் நடக்கும். அரசு அலுவலக வேலைகள் சாதகமாக முடியும். இன்று உங்கள் பலவீனம்: குடும்பப் பிரச்சினையால் சிலருக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். உறவினர்களின் இடர்பாடுகள் மனக்காயம் ஏற்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அலட்சியம் கூடாது. 2 வரவு செலவு கணக்குகளை சரியாக எழுத வேண்டும். 3 தவணை தொகையை உரிய நேரத்தில் கட்ட வேண்டும். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.
கடக ராசி அன்பர்களே! சற்று மிதமான பலன்கள் நடக்கும் நாள். நீங்கள் நல்லதே நினைத்தாலும் கெட்ட பெயர் வந்து சேரும். தொழில் துறையில் மறைமுக எதிர்ப்புகள் பாதிப்பை ஏற்படுத்தும். வியாபாரம் மந்தமாக நடக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளும் வரலாம். வேலை இடத்தில் கவனக்குறைவால் மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாகலாம். வெளியூரில் இருந்து வர வேண்டிய செய்தி தாமதமாகும். சந்திராஷ்டமம். எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிதமான பலன் பெறுவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய தாமதம் அடைவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை சுமை அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: அரசாங்கத்திலிருந்து வரவேண்டிய உதவிகள் அனுசரணையாக இருக்கும். விவேகத்தோடு செயல்படும் மனத்திடம் நன்மை தரும். இன்று உங்கள் பலவீனம்: மனைவியின் கோபம் மன சஞ்சலத்தை கொடுக்கும். பிள்ளைகளும் பொறுப்பின்றி நடக்கும் நிலை ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஆன்லைன் வர்த்தகங்களில் ஈடுபட வேண்டாம். 2 பங்குச்சந்தையில் கவனமாக இருக்க வேண்டும். 3 கடன் கொடுக்கும் விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.
சிம்மராசி அன்பர்களே! மனதுக்குப் பிடித்த காரியங்கள் நடக்கும் நாள் இன்று. வீட்டில் மங்கல நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடக்கும். நெருங்கிய உறவினரின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்கள் மூலம் தொழிலுக்கு தேவையான உதவி கிடைக்கும். வேலை இடத்தில் இருந்த பணிச்சுமை குறையும். மன அழுத்தம் தீரும். மேலதிகாரியின் பாராட்டு ஊக்கத்தை தரும். வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும். அதிக வருமானத்தை கொண்டு வரும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பான பலன் அடைவார்கள்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருமானம் அதிகரிக்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன யோகம் உண்டாகும்.
இன்று உங்கள் பலம்:
நினைத்த காரியத்தை நடத்தும் வேகத்தோடு செயல்படுவீர்கள். தொழிலுக்கான ஆதரவைத் திரட்டுவீர்கள்.
இன்று உங்கள் பலவீனம்:
ஏதாவது ஒரு சிந்தனை வேலையை பாதிக்கும். ஒன்றுவிட்ட சொந்தங்களால் பிரச்சனை உண்டாகலாம்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 பற்று வரவு கணக்குகள் முறையாக இருக்க வேண்டும்.
2 ஆன்லைன் வர்த்தகங்களில் எச்சரிக்கை தேவை.
3 அடுத்த வரி ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம்.
அதிர்ஷ்ட எண்: 1,6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு.
வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
சிம்மராசி அன்பர்களே! மனதுக்குப் பிடித்த காரியங்கள் நடக்கும் நாள் இன்று. வீட்டில் மங்கல நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடக்கும். நெருங்கிய உறவினரின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்கள் மூலம் தொழிலுக்கு தேவையான உதவி கிடைக்கும். வேலை இடத்தில் இருந்த பணிச்சுமை குறையும். மன அழுத்தம் தீரும். மேலதிகாரியின் பாராட்டு ஊக்கத்தை தரும். வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும். அதிக வருமானத்தை கொண்டு வரும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பான பலன் அடைவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருமானம் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன யோகம் உண்டாகும். இன்று உங்கள் பலம்: நினைத்த காரியத்தை நடத்தும் வேகத்தோடு செயல்படுவீர்கள். தொழிலுக்கான ஆதரவைத் திரட்டுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: ஏதாவது ஒரு சிந்தனை வேலையை பாதிக்கும். ஒன்றுவிட்ட சொந்தங்களால் பிரச்சனை உண்டாகலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பற்று வரவு கணக்குகள் முறையாக இருக்க வேண்டும். 2 ஆன்லைன் வர்த்தகங்களில் எச்சரிக்கை தேவை. 3 அடுத்த வரி ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
கன்னி ராசி அன்பர்களே! ஏற்ற இறக்கமான பலன் தரும் நாள். வேலை இடத்தில் சில சிரமங்களை எதிர் நோக்கலாம். வேலையை முடிக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகலாம். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றலாம். தொழிலில் மந்தமான நிலையே காணப்படும். திடீர் செலவுகள் ஏற்பட்டு சிரமப்படுத்தும். பொருள் வரவு மந்தமாக இருக்கும். எதிர்பார்த்த வேலை நடப்பதில் தாமதமாகும். குலதெய்வத்தின் அருளால் நல்லது நடக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை மாறுதல் பெறுவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணி அழுத்தம் அடைவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனச்சோர்வு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: அரசாங்க அதிகாரியின் உதவி பக்க பலமாக இருக்கும். வெளிநாட்டிலிருந்து கேட்ட உதவி வந்து சேரும். இன்று உங்கள் பலவீனம்: நெருங்கிய உறவினரின் அழுத்தத்தால் மன குழப்பம் உண்டாகும். உடனே காரியங்கள் முடிய வேண்டும் என நினைப்பீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. 2 அந்நிய பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 3 நிறுத்துமிடத்தில் வாகனங்களை கவனமாக பூட்ட வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! அதிர்ஷ்டமான காரியங்கள் நடக்கும் நாள். மன உறுதி தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்கள் மூலம் தொழிலுக்கு தேவையான உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். பங்குப் பரிவர்த்தனையில் சிறப்பான உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரித்து கையிருப்பு கூடும். அலுவலகத்தில் பதவி உயர்வு ஏற்படும். உங்கள் வார்த்தைக்கு மரியாதை இருக்கும். இறைவன் அருளால் நல்லது நடக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகள் உண்டாகும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி யோகபலன் வந்து சேரும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் பூமி லாபம் கிடைக்கும் . இன்று உங்கள் பலம்: வெளிநாட்டில் இருக்கும் நண்பர் நீங்கள் கேட்ட உதவியை செய்வார். அரசு வேலைகள் உடனே நடக்கும். இன்று உங்கள் பலவீனம்: உங்களின் அவசரங்களை வீட்டில் புரிந்து கொள்ள மாட்டார்கள். உறவினர்களின் தொல்லையும் சிரமப்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அடுத்தவர்களின் பேச்சை காதில் வாங்க கூடாது 2 ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக் கூடாது. 3 தேவையில்லாமல் செலவுகள் செய்யக் கூடாது. அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
விருச்சிக ராசி அன்பர்களே! வியாபாரம் சிறப்பாக நடக்கும். வருமானம் பெருகும். தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலை இடத்தில் உங்களின் திறமை வெளிப்படும். அரசு அலுவலக வேலைகள் தாமதம் இன்றி நடக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பொருள் வரவு தாராளமாக இருக்கும். வீட்டில் நல்ல காரியம் நடக்கும். கடன் சுமை குறையும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். குலதெய்வ நேர்த்திக்கடன் நிறைவேறும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் பண வரவு அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் பூமி லாபம் கிட்டும். இன்று உங்கள் பலம்: புதிய முதலீடுகளை செய்வதற்காக தனித்துவமான திட்டம் போடுவீர்கள். எதையும் நிதானமாக யோசித்து செயல்படுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: சில நேரங்களில் தேவையற்ற இடையூறுகள் சிரமப்படுத்தும். தூக்கமின்மை பலவீனப்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 குறை சொல்லும் உறவினர்களை கவனமாக அணுக வேண்டும். 2 கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானமாக இருக்க வேண்டும். 3 பிள்ளைகளின் விஷயத்தில் அன்போடு அணுக வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்.
தனுசு ராசி அன்பர்களே! நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். பார்ட்னர்களின் உதவியோடு தொழிலை விரிவுபடுத்தும் திட்டம் நிறைவேறும். வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். கையில் தாராளமாக பணம் புரளும். வங்கி இருப்பு அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கும் நிலை உருவாகும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலை இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். நண்பரின் ஆதரவு ஒத்தாசையாக இருக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு மிகுந்த நன்மை உண்டாகும். பூராட நட்சத்திரக்காரர்கள் நினைத்த காரியங்கள் நடக்கும் உத்திரம் நட்சத்திரக்காரர்கள் ஆடை ஆபரண சேர்க்கை பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: திட்டமிட்டு செய்யும் காரியத்தில் வெற்றி கிடைக்கும். எதையும் விவேகத்தோடு அணுகும் பக்குவம் இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: நெருங்கிய நண்பரே எதிராக பேசும் நிலை உருவாகும். சகோதரரின் சச்சரவும் வேதனையை உண்டாக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வரவு செலவு கணக்குகளை சரியாக எழுத வேண்டும். 2 குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல வேண்டும். 3 அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி
மகர ராசி அன்பர்களே! உயர்ந்த பலன்கள் வந்து சேரும் நாள். நினைத்த காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் மறையும். தொழில்துறையில் மிகுந்த முன்னேற்றம் காணப்படும். வேலை இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு ஊக்கப்படுத்தும். சம்பள உயர்வு கிடைக்கும். பதவி மாற்றத்திற்கான வாய்ப்பு உண்டாகும். வருமானத்தடை எதுவும் இருக்காது. அவசியமான பொருட்களை வாங்கும் நிலை ஏற்படும்.
உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு வாகன யோகம் உண்டாகும்.
திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு தன தானிய யோகம் ஏற்படும்.
அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு பூமி லாபம் கிடைக்கும்.
இன்று உங்கள் பலம்:
பொறாமைக்காரர்களின் சூழ்ச்சியை முறியடிக்கும் திறன். இரவு பகல் பாராமல் உழைக்கும் ஆற்றல்.
இன்று உங்கள் பலவீனம்:
சின்ன சின்ன விஷயங்களுக்கு மனச்சோர்வு அடைவது. தேவையற்ற விஷயங்களில் மனம் அலை பாய்வது.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 அவசரப்பட்டு ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.
2 வங்கி வரவு செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
3 ஆடம்பர செலவுகள் பணவிரயத்தை கொண்டு வரும்.
அதிர்ஷ்ட எண்: 9,2
அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு.
வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.
கும்ப ராசி அன்பர்களே! வெற்றிகரமாக காரியங்கள் நடக்கும் நாள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி எதிர்பார்க்கலாம். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வருமானப் பெருக்கம் அதிகரிக்கும். வேலை இடத்தில் பிரச்சனைகள் குறையும். உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அரசு வேலைகள் தாமதம் இல்லாமல் நடக்கும். ஆடை ஆபரண யோகம் உண்டாகும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு பொருள் வரவு அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு கடன் சுமை தீரும். இன்று உங்கள் பலம்: வியாபாரத்தில் மூலதனத்தை அதிகரிப்பீர்கள். நினைத்த காரியத்தை முடிக்க தேவையான உதவியை பெறுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: வெளியூரிலிருந்து முக்கிய தகவல் வர தாமதமாகும். அரசு காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்படுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 சாலைகளில் கார் ஓட்டும்போது கவனம் சிதற கூடாது. 2 அலுவலகத்தில் வீட்டு பிரச்சனையை நினைக்க கூடாது. 3 வரவு செலவு கணக்குகளில் அலட்சியம் காட்டக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.
மீன ராசி அன்பர்களே! நன்மை தீமை கலந்து செயல்கள் நடக்கும் நாள். தேக ஆரோக்கியத்தில் சின்ன குறைபாடு ஏற்படலாம். பண விஷயங்களில் அலட்சியமாக இருக்காதீர்கள். வியாபாரம் சற்று மிதமாகவே நடக்கும். தொழில்துறையில் தேவையில்லாமல் அலைச்சல் உண்டாகும். வெளிநாட்டிலிருந்து வரவேண்டிய செய்தி தாமதமாகும். அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். உறவினர் வருகையால் திடீர் செலவு உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு திடீர் செலவுகள் சிரமப்படுத்தும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வருமான குறைவு ஏற்படும். ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உதவி தாமதமாக கிடைக்கும். இன்று உங்கள் பலம்: வருவது வரட்டும் என்ற சிந்தனையோடு வேலை செய்வது. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருப்பது. இன்று உங்கள் பலவீனம்: குடும்பத்தில் அதிக நேரம் செலவிட முடியாத நிலை. புரிந்து கொள்ளாத உறவினர்களால் ஏற்படும் சிக்கல். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஆன்லைன் சூதாட்டங்களில் இறங்கக்கூடாது. 2 கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அலட்சியம் கூடாது. 3 இணையதள ஆசை வார்த்தைகளை நம்பக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்
இன்றைய பஞ்சாங்கம் தேதி 4 – ஐப்பசி – பராபவ வருடம் புதன் நாள் புதன் திதி தசமி (up to 2:12 pm) ஏகாதசி (up to October 22, 2:48 pm) நட்சத்திரம் அவிட்டம் (up to 7:47 pm) சதயம் (up to October 22,8:49 pm) யோகம் மரண-சித்த யோகம் நல்ல நேரம் 9:15 – 10:15 am / 4:45 – 5:45 pm கௌரி நல்ல நேரம் 10:45 – 11:45 am / 6:30 – 7:30 pm இராகு காலம் மதியம் 12.00 – 1.30 எமகண்டம் காலை 7.30 – 9.00 குளிகை காலை 10.30 – 12.00 சூலம் வடக்கு பரிகாரம் பால் சந்திராஷ்டமம் பூசம், ஆயில்யம் சூரியோதயம் 6:03 AM சூரிய அஸ்தமனம் 5:43 PM சந்திரோதயம் Oct 21 2:22 PM சந்திர அஸ்தமனம் Oct 22 2:22 AM



