உக்ரைன் நாட்டின் முன்களப் பகுதியில் ரஷ்யாவின் தீவிரமான ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் கண்ணிவெடிகள் காரணமாகத் தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆபத்தான நிலையில் களத்தில் சிக்கிய காயமடைந்த வீரரை மீட்க முடியாத சூழல் நிலவியதை அடுத்து, உக்ரைன் படையினர் வான்வழி மீட்பு முயற்சியில் இறங்கினர். உக்ரைனைச் சேர்ந்த குர்சுஃப் டிஃபென்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கனரக ஹெக்சாகாப்டர் ஆளில்லா விமானம் இந்த மீட்புப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டது.வரலாறு அறிவீர்
நிலப்பரப்பில் வாகனங்கள் செல்ல முடியாத கடினமான சூழலில், வான் வழியாகச் சென்று அந்த வீரரைப் பாதுகாப்பாக மீட்டு வருவதில் இந்தப் புதிய தொழில்நுட்பம் வெற்றிகரமாகச் செயல்பட்டது. மீட்புப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், மீட்கப்பட்ட வீரருக்கு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் உக்ரைன் ராணுவத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. ஆபத்தான இந்தப் போர்க்களச் சூழலில் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி வீரர் ஒருவர் மீட்கப்படுவது உலக வரலாற்றிலேயே இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
இந்த நவீன மீட்பு முறைக்குப் போர் முனைகளில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதோடு, எதிர்காலத்தில் இது போன்ற மீட்புப் பணிகளுக்குப் புதிய வழியை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உயிருக்கு எந்தவித ஆபத்துமில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



