தேவியைத் தேடி வந்த தேவர்கள், துயரங்களை துரத்தி துணைநிற்பாள் துர்கை!என்றாகியது.இந்து நூல்

தேவியைத் தேடி வந்த தேவர்கள், துயரங்களை துரத்தி துணைநிற்பாள் துர்கை!என்றாகியது.இந்து நூல்

பூவுலகிற்கு வந்த அன்னை பராசக்தி, வனமாக இருந்த இவ்விடத்தில் தங்கி தவம் செய்தாள். தேவியைத் தேடி வந்த தேவர்கள், இங்கு தவம் செய்யும் தேவியை கண்டு, தாங்களும் வனத்தில் உள்ள மரம், செடி, கொடிகளாக மாறி வழிபட்டு வந்தனர். தேவியின் தவத்தில் மகிழ்ந்த ஈஸ்வரன், ஜடாமுடியுடன் காட்சி தந்து அருள் செய்தார். இந்த வனத்தின் பெருமையை உணர்ந்த தேவலோக காமதேனுவின் கன்றாக பட்டி, ஒரு லிங்க உருவை உருவாக்கி அந்த லிங்கத்திற்கு தினமும் பாலாபிஷேகம் செய்ய, அதனால் மகிழ்ச்சியுற்ற சிவபெருமான் காட்சியளித்த போது, அவர் அவ்விடத்திலேயே தங்கி எல்லோருக்கும் அருள் செய்ய வேண்டுமென்று வேண்ட, ஈசனும் அவ்வாறே ஆசீர்வதித்தார். பட்டி தவமிருந்து ஈசனை வழிபட்ட தலம் என்பதால் ‘பட்டீஸ்வரம்’ என்றாகியது.இந்து நூல் படி

இறைவனும் ‘பட்டீஸ்வரர்’ என்னும் திருநாமம் பெற்றார். காமதேனுவும் சிவபூஜை செய்து பல வரங்களைப் பெற்றாள். அதனால் இத்தலத்து இறைவன் ‘தேனுபுரீஸ்வரர்’ என்னும் திருநாமமும் பெற்றார். இத்தகு பெருமை மிக்க இத்திருத்தலத்தில், அம்பிகையை துர்கா பரமேஸ்வரியாக அஷ்ட புஜங்களுடன், திருக்கோயிலின் வடக்கு வாயிலில் தனிச் சந்நதி கொண்டு அருள்பாலித்துவருகிறாள்.

ராஜராஜ சோழன் முதலான பல சோழ மன்னர்களால் சோழமன்னர்களின் அரண்மனையில் வைத்து ஆத்மார்த்தமாக பூஜிக்கப்பட்டு வந்தவள், இந்த தேவி. அரண்மனையின் மற்ற வாயில்களில் மகாகணபதியும், சண்முகரும், பைரவரும் எழுந்தருளி அருள்பாலித்து வந்தார். இந்த எழுந்தருளியுள்ள துர்கா பரமேஸ்வரி சாந்த சொரூபிணியாக, தன் பக்தர்களுக்கு வேண்டுவதனைத்தும்

கற்பக விருட்சமாக அருள்பாலித்துவருகிறாள். மகிஷன் தலைமீது நின்ற கோலத்தில் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய் தனது எட்டு திருக்கரங்களில் சங்கு, சக்கரம், வாள், அம்பு, சக்தி, கேடயம், அபயஹஸ்தத்துடன் ஊருஹஸ்தத்தில் கிளியைத் தாங்கி காதுகளில் குண்டலங்களோடு புன்னகை சிந்தும் மலர் முகத்துடன் காட்சி அளிக்கிறாள். பொதுவாக துர்கையின் சிம்ம

வாகனம் வலதுபுறம் நோக்கி இருக்கும்.

இங்கு சிம்மம் இடப்புறம் நோக்கி இருப்பது, அன்னை சாந்த சொரூபிணியாக இருப்பதைக் குறிக்கிறது. இவளை விஷ்ணு துர்கை, துர்கா லட்சுமி, நவசக்தி நாயகி, நவரத்தின நாயகி, நவயோக நாயகி, நவகிரக நாயகி, நவராத்திரி நாயகி, நவகோடி நாயகி என்றெல்லாம் பல பெயர்களில் பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயம்

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் ஏழு முக்கியத் தலங்களில் தென்னகத்தில் உள்ள ஒரே தலம். இத்திருத் தலத்தில் பல புகழ்பெற்ற கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமான திருக்கோயில் கச்சபேஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயிலின் உள்ளே சென்றதும் பஞ்சசந்தி என்ற பெரிய முற்றத்தைக் காணலாம். இதில் விநாயகர், துர்கை, சாஸ்தா, சூரியன், பைரவர் ஆகிய ஐவரும் கூடி இருப்பதாலேயே இந்த இடத்தை பஞ்சசந்தி என்றழைக்கின்றனர்.

இங்கு கோயில் கொண்டிருக்கும் துர்கையும், பஞ்சசந்தி துர்கை என்றே அழைக்கப்படுகிறாள். எல்லா ஆலயங்களிலும் பொதுவாக துர்கை வடக்கு பார்த்த நிலையிலேயே அமர்ந்திருப்பாள். ஆனால், இத்திருக்கோயிலில் தெற்கு பார்த்த நிலையில் உயர்த்திக் கட்டப்பட்ட மேடை மீது முகமண்டபம், மகா மண்டபம், கருவறை, உள் மண்டபம் என்னும் அமைப்புக்களுடன் தனிமாடக் கோயிலில் அமர்ந்து அருளாட்சி நடத்தி வருகிறாள். இந்த துர்கை சிற்பம் மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். காஞ்சியில் 800க்கும் மேற்பட்ட துர்கை கோயில்கள் அமைந்திருந்தன.இந்து நூல் படி

திருமணத்தடை, கடன் தொல்லை, பிள்ளைப் பேறு போன்றவை நீங்க சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இங்குள்ள துர்கை, இஷ்டசித்தி தீர்தத்தில் மூழ்கி சிவனை வழிபட்டார் என்று கூறப்படுகிறது. துர்கை திருச்சந்நதிகளில் பெரியதும் புகழ்பெற்றதுமான இவளே காஞ்சிப் புராணம் கூறும் அனைத்து துர்கைகளுக்கும் தலைவியாக விளங்குகிறாள்.

இவளுடைய திருச்சந்நதி பெரிய பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. இந்த திருக்கோயில், துர்கைக்கு ஐந்து வேளை பூஜைகள் நடைபெற்றதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. துர்கை கோயில் முதலால் ராசராசனுடைய ஆறாம் ஆட்சியாண்டில் கட்டப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது. இக்கோயிலில் தீபம் ஏற்றுவதற்கான செலவுக்கு 900 ஆடுகள் வழங்கிய செய்தியையும், இந்த துர்கை சந்தி துர்கை என வழங்கப்பட்டதையும் கல்வெட்டுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

வேதாரண்யம் துர்கை

வேதாரண்யம் சோழ நாட்டு கடற்கரை ஓரத்தில் அமைந்த திருத்தலங்களில் ஒன்றாகும், “திருமறைக்காடு’’. திருமறைகளில் புகழப்பட்ட இத்திருத்தலத்தில் நீண்டகாலமாக திறக்காமல் இருந்த கதவை அப்பர் பெருமான் பாடி திறக்கவும், பின்னர் ஞானசம்பந்தபெருமான் பாடி அக்கதவை மூடினார் என்று வரலாறு கூறுகிறது. சப்த விடத்தலங்களில் ஒன்றாகத் திகழும் இத்திருத்தலத்தில், வேதாரண்யேஸ்வரஸ்வாமி எழுந்தருளியிருக்கும் சந்நதியின் உட்பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் தெற்கு நோக்கி அமைந்த பெரிய சந்நதியில் எட்டுத் திருக்கரங்களுடன் ஸ்ரீ துர்கை எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.செய்திகளைப் படி

ஏராளமான பக்தர்கள் வெள்ளிக் கிழமையிலும், ராகுகால வேளையிலும், துர்கா பரமேஸ்வரியை தரிசிக்க இவ்வாலயத்துக்கு வருகின்றனர்.அம்பிகை பாதத்தில் வைத்து பக்தர்களுக்கு இங்கு காப்புக்கயிறு, முடிக்கயிறு அளிக்கின்றனர். மஞ்சள் குங்குமம் மந்திரித்து கொடுக்கின்றனர். பில்லி, சூனியம், கிரகக் கோளாறுகள் போன்றவை விலகுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். தேவிபாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 64 சக்தி பீடங்களில் ஒன்றான இதற்கு, “சுந்தரீ பீடம்’’ என்று பெயர். எல்லா சக்தி பீடங்களிலும் அன்னையின் பிரபாவம் விளங்குவதுபோல், இவ்வாலயத்திலும் ஸ்ரீ துர்கையின் பிரபாவம் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.

சிதம்பரம் துர்கை

பஞ்ச பூதத் தலங்களில் ஆகாசத் தலமாக விளங்குவது சிதம்பரம். இத்திருத்தலத்தில் சபாநாயகர் ஆலயத்தில் சிவகங்கை தீர்த்தம் அமைந்துள்ளது. இத்தீர்த்தக்கரையில் சிவகாமி சந்நதி கோபுரத்தை ஒட்டி ஸ்ரீ துர்கை தனி ஆலயத்தில் கோயில் கொண்டுள்ளாள். மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தியாக விளங்கும் இந்த தேவியின் மீது பலரும் ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடியுள்ளனர்.

தக்கோலத்து தேவி

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் அருகில் அமைந்துள்ள திருத்தலம் தக்கோலம். இங்குள்ள தட்சிணாமூர்த்தி வேறெங்கும் காணமுடியாத திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அதுபோலவே இங்கு எழுந்தருளியுள்ள துர்கா பரமேஸ்வரியும், ஸ்வதிக நிலையில் கால்களை வைத்துக்கொண்டு குழலூதும் கண்ணனைப் போல் அழகிய திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். இங்குள்ள கல்வெட்டு, இத்திருக்கோயிலில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வர் எழுந்தருளியதையும் அவளுடைய வழிபாட்டிற்காகவும் அவளது திருச்சந்தியில் விளக்கிடவும் நிவந்தமளிக்கப்பட்ட செய்தியையும் தெரிவிக்கின்றன.இந்து நூல் படி

திருவாரூர் விந்தைக் கோட்டம்

திருவாரூரில் புகழ்பெற்ற தியாகராஜ சுவாமி ஆலயத்தில், ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி தனிச்சந்நதியில் எழுந்தருளியுள்ளாள். இது புராணங்களில் விந்தைக் கோட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. மக்களுக்கும், தேவர்களுக்கும் இன்னல்கள் புரிந்த அசுரர்களை மாய்த்த துர்கா தேவி, தன் பாவங்கள் தீர சிவபெருமானை இத்திருத்தலத்தில் பூஜை செய்து ஆராதித்தாள் என்று ஸ்தல வரலாறு கூறப்படுகிறது. இத்திருக்கோயிலில் எட்டு துர்கைகள் அமர்ந்து அருளாட்சி புரிந்து வருகின்றனர்.

குடவாயில்

கும்பகோணத்திற்கு அருகில் அமைந்துள்ள திருத்தலம் குடவாயில். இதனை ‘‘குடவாசல்’’ என்று அழைப்பர். இத்திருத்தலத்தில் உள்ள அம்பிகையை ‘‘பெரிய நாயகி’’ என்று அழைக்கின்றனர். இத்திருக்கோயில் துர்கைக்கென்று தனி சந்நதி அமைக்கப்படவில்லை. ஆனால் தனி சந்நதியில் கோயில் கொண்டுள்ள பெரிய நாயகியையே துர்கையாக வழிபாடு செய்கின்றனர். அவளை ‘‘பிருஹத்துர்கை’’ என்று போற்றுகின்றனர். இதே போலவே, கன்னடம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள சிவாலயங்கள் பலவற்றில் அம்பிகையை துர்கையாகவே வழிபடுகின்றனர். ஆனால், தமிழகத்தில் குடவாயிலில் மட்டும்தான் இவ்வாறு வழிபாடு நடைபெறுகிறது.

நங்கநல்லூர், சென்னைபுவியியல் காண்

சென்னையிலுள்ள நங்கநல்லூரில் பிரசித்து பெற்று விளங்கும் ஆலயம் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம். காஞ்சி மகாபெரியவரின் அருளாணையின்படி அமைக்கப்பட்ட இத்திருக்கோயிலின், பின் பகுதியில் தனிப் பெரும் சந்நதி கொண்டு கொலுவிருக்கிறார். ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி, மாமல்லபுர சிற்பங்களில் ஒன்றான ரதத்தின் வடிவமைப்பைப் போல் இவளது திருச்சந்நதியும் தேர்வடிவில் அமைக்கப்பட்டு நான்கு புறமும் தேர்ச் சக்கரங்களும், இழுத்துச் செல்லும் குதிரைகளும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.தேர்வடிவக் கருவறையில், எட்டுத் திருக்கரங்களுடன் நெடிய வடிவில் சாந்த துர்கையாக எழுந்தருளி பக்தர்களுக்கு கேட்டவர்க்கு கேட்டபடி வரம் தந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் அன்னை பராசக்தி.

உய்யக்கொண்டான் திருமலை விஷ்ணுதுர்கை

திருச்சியை அடுத்த உய்யக்கொண்டான் திருமலையில் உள்ளது ஆளுடையார் கோயில். இங்கு இறைவனின் தேவகோட்டத்தில் வடக்குத் திசையில் அருள்பாலிக்கிறாள், விஷ்ணு துர்கை. திருமணம் வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும் துர்கையை வேண்டும் அன்பர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் எலுமிச்சைப்பழமாலை அணிவித்து மகிழத் தவறுவதில்லை.

மரத்துறை விஷ்ணுதுர்கை

கும்பகோணம் – மணல்மேடு பேருந்து தடத்தில், மரத்துறையில் உள்ள ஹரிஹரபுத்ர சுவாமி ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள் விஷ்ணுதுர்கை. கோயிலின் நுழைவாயிலில் வடக்குத் திசை நோக்கி குனிந்து பார்த்தால்தான் அன்னையின் முழு உருவம் தெரியும். பணிவு என்ற நற்குணத்தை உணர்த்துகிறாள், இந்த துர்கை.இந்து நூல் படி

கோவை அஷ்டபுஜ துர்கை

கோவை உக்கடம் அருகே உஜ்ஜைனி மகாகாளியம்மன் ஆலயத்தில், பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் அருள்பாலிக்கிறாள் அஷ்டபுஜ துர்கை. துர்கையின் தலையில் சிவபெருமானின் திருஉருவம் இருப்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய், வெள்ளி ராகு கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். திருமணத்தடை நீங்கி, திருமணம் ஆனவர்கள், குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் அன்னைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி மகிழ்கின்றனர்.

கோடாலி கருப்பூர் துர்கையம்மன்

கும்பகோணம் அணைக்கரை நெடுஞ்சாலையில் அணைக்கரையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள கோடாலி கருப்பூர் திருத்தலம். இங்குள்ள அங்காளபரமேஸ்வரி ஆலயத்தின் பிராகாரத்தில், கீழ்த்திசையில் மங்கையரின் கண்கண்ட தெய்வமாக இருக்கிறாள், அம்பிகை.

திருச்சி பாலக்கரை துர்கை

இங்கு ஸ்ரீ துர்கையம்மனுக்கு தனி ஆலயம் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான ஆலயம். அன்னை மகிஷத்தின் மேல் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறாள். அம்பிகையின் நான்கு கரங்களில் சங்கு – சக்கரம் இடது மற்றும் வலது மேற்கரத்திலும், கீழ் இடது கரத்தில் பாச முத்திரை, கீழ் வலது கரத்தில் சூலத்தையும் தாங்கி அருள்பாலிக்கிறாள். அம்பிகையின் விமானத்தைச் சுற்றிலும் அஷ்டலட்சுமிகளும், நடுநாயகமாய் மூன்று திசைகளில் கிருஷ்ணரின் திருமேனியும், ஒரு புறம் வக்கிரகாளியம்மன் திருமேனியும் காணப்படுகிறது. ஏழு வாரம், ராகு கால பூஜையில் அன்னை மகிழ்கிறாள். அன்பர்களுக்கு வேண்டும் வரம் அளிக்கிறாள்.

திருச்சி கே.கே.நகர் விஷ்ணு துர்கை

கன்னியரின் கனவுகளை நனவாக்குபவள். மகளிரின் கண் கண்ட தெய்வம். திருச்சியிலுள்ள எஸ்.எம்.ஈ.எஸ்.(SMES) காலனி சித்தி விநாயகர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டு அருள்கின்றாள். செவ்வாய், வெள்ளி ராகு கால பூஜை சிறப்பானது. நவராத்திரி ஒன்பது நாட்கள் பூஜையும், மிகவும் விசேஷம். தினம் ஒரு அலங்காரத்தில் அம்பாள் விஷ்ணுதுர்கை காட்சி தந்து அருள்சுரக்கிறாள் என்றென்றும்!

காட்டுச் செல்லூர்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரிலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டுச் செல்லூர் என்னும் கிராமம். இங்கே உள்ள வேம்பி அம்மன் கோயிலில், சுமார் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த துர்கை அம்மனின் திருமேனி உள்ளது. அம்பாள் நான்கு கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் இரு கரங்களில் சக்கரமும், சங்கும், கீழ் வலக்கரத்தில் ஞான முத்திரையும், கீழ் இடக்கரத்தை இடுப்பில் வைத்து அற்புத தரிசனம் தருகிறாள். இக்கரத்தில் கிளி ஒன்று ஏறிச் செல்வது போல் அமைந்திருப்பது சிறப்பாகும். விஜயதசமியன்று அம்பு போடும் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.இந்து நூல் படி

கதிராமங்கலம் துர்கை

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து வாணாதிராஜபுரம் வில்லியநல்லூர் வழியாக மயிலாடுதுறை செல்லும் பேருந்து வழித்தடத்தில் மாயூரத்திலிருந்து 12 கி.மீ. உள்ள கிராமம்தான் கதிராமங்கலம். இத்திருத்தலத்தில், வனதுர்காதேவியாக எழுந்தருளியுள்ளாள், ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி. ஸ்ரீ துர்கா பரமேஸ்வரிக்கு எதிராக சிம்மம் உள்ளது. இத்திருக்கோயிலில், வேறு எந்த தெய்வச் சிலைகளும் இல்லை. எல்லாமே பராசக்திதான் என்பதை இது குறிக்கிறது. சிலையின் முன்புறம் துர்காரூபமும் பின் புறம் பாம்பு வடிவமும் கொண்டு சிலை வடிக்கப்பட்டுள்ளது. ராகுவின் அதிதேவதையாக இருக்கும் இந்த தேவியை வழிபட்டால், ராகு தோஷங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் விலகும் என்பது நம்பிக்கை.

இத்திருக்கோயிலில், ஸ்ரீ துர்காபரமேஸ்வரிக்கு ஒவ்வொரு அர்ச்சனை செய்யும் போதும் வலது ஹஸ்தத்தில் வியர்வை துளிக்கிறது. இதைக் காண்பது ஒரு மெய் சிலிர்க்கும் அனுபவமாகும். அகஸ்தியமுனிவரும் மிருகண்டு முனிவரும் தேவியை தரிசித்து அவளுடைய பரிபூரண அனுக்கிரகததைப் பெற்றவர்களாவர். அகத்திய முனிவர், தேவியை நேரில் கண்டு ‘வாழ்வித்த அன்னை வனதுர்கை’ என்று பல பாடல் களைப் பாடியுள்ளார்.

தருமபுரம் ஆதீனம் அஷ்டதசபுஜ துர்கா ஆலயம்

தருமபுர ஆதீனத்தில் இரண்டு துர்காதேவி ஆலயங்கள் உள்ளன. அஷ்டதசபுஜ துர்கா ஆலயமும், வனதுர்கா ஆலயமுமே அவை. அஷ்டதசபுஜ துர்கா தேவியின் ஆலயம் 1953ல் கட்டப்பட்டதாகும். கிழக்கு பார்த்த சந்நதியில் பதினெட்டு திருக்கரங்களுடன் மகிஷத்தின் தலை மீதுள்ள தாமரைப் பூவில் நின்றகோலத்தில் அருளாட்சி செய்து வருகிறாள் துர்காதேவி. தனது வலது கரத்தில் ஜபமாலை, தாமரைப்பூ, பாணம், கத்தி, வஜ்ராயுதம், கதை, சக்கரம், திரிசூலம், கோடரி முதலிய ஆயுதங்களையும், இடதுகரத்தில் மேலிருந்து கீழாக சங்கம், மணி, பாசம், சக்தி, தண்டம், கேடயம், வில், பான பாத்ரம், கமண்டலம் ஆகியவைகளையும் தாங்கியுள்ளாள். துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரின் மொத்த வடிவமே அஷ்டதசபுஜ துர்காதேவியின் ரூபமாகும்.

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியின் முன், மகாமேருவும் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் இரண்டு வேளை பூஜையும், உற்சவ காலங்களில் சிறப்பு வழிபாடுகளும், சந்தனக்காப்பு அலங்காரங்களும், புஷ்பாஞ்சலியும் நடத்தப்படுகின்றன. சதசண்டி ஹோமம், சுவாஸினி, வடுக பூஜைகளும் அடிக்கடி நிகழ்த்தப்படுகின்றன. ெசவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பெருந்திரளான பெண்கள் துர்கையை வழிபாடு செய்து வருகிறார்கள்.

திருப்பரங்குன்றத்து துர்கை

புகழ்பெற்ற சைவத் திருத்தலமாக விளங்குவது திருப்பரங்குன்றம். முருகனடியார்கள் அழகன் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகத் திருப்பரங்குன்றத்தைப் போற்றுகின்றனர். திருப்பரங்குன்றத்தில் இப்போது நாம் காணும் ஆலயம் அழகிய குகைக் கோயிலாகும். குகையின் முன்புறத்தை வளர்த்திப் பல மண்டபங்களைக் கட்டிப் பெருங்கோயிலாக ஆக்கியுள்ளனர். துர்கையை மையப்படுத்தியே வடக்குநோக்கி இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குகைக்கோயில், நீண்ட மண்டபத்தைக் கொண்டுள்ளது. வடக்கு நோக்கிய இம்மண்டபத்தின் தெற்குச் சுவரில், வடக்கு நோக்கியவாறு மூன்று சந்நதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நடுவில் கருவறை அமைப்புடன் இருப்பது துர்கைக்கு உரியதாகும். அவளுக்கு வலப்புறம் அமைந்த சுவரில் முருகப் பெருமானும், இடப்புறம் பெரிய கணபதியும் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளனர்.இந்து நூல் படி

மண்டபத்தின் மேற்கு முனையில் கிழக்கு நோக்கியும், கிழக்கு முனையில் மேற்கு நோக்கியும், ஆக இரண்டு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவருக்குப் பரங்கிரிநாதர் என்பது பெயர்.

அவருக்குப் பின்புறம் சோமாஸ்கந்தர் வடிவம் உள்ளது. மேற்கு நோக்கிய கருவறையில் திருமால் பவளக்கனிவாய் பெருமாள் என்ற பெயருடன் காட்சி தருகிறார். இக்கோயில் சிவன், திருமால், துர்கை, விநாயகர், முருகன் ஆகிய ஐவருக்கும் அமைக்கப்பட்டதாக இருந்தாலும், இவர்களில் துர்கைக்கே முதலிடம் கொடுத்து, அவளை மையத்தில் அமைத்துள்ளனர்.

திருத்தணி

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு முருகனை வழிபட்ட இந்திரனால் உருவாக்கப்பட்ட ‘‘கல்ஹார தீர்த்தம்’’ மலையில் இருக்கிறது. வள்ளிமலையிலிருந்து வள்ளியை சிறையெடுத்து வந்து திருமணம் செய்து கொண்ட தலம். 365 படிக்கட்டுகள் கொண்ட மலைமீது அமைந்துள்ள அழகிய முருகன் தலம். எத்தலத்திலும் காணமுடியாத வழக்கமாக இத்தலத்து ஆபத்சகாய விநாயகரை கடைசியாகத்தான் வணங்குதல் வேண்டுமாம். இத்தலத்தில் வேறெங்கும் காணமுடியாத விஷ்ணு துர்கை ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான முருகன் திருத்தலம் இது. இங்கு மூலவர் சந்நதியில் மேல் உள்ள விமானம் ஆறு தளங்களைக் கொண்டது. இத்தலத்திற்கு குன்றுதோ றாடல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

கங்கை கொண்ட சோழபுரம் பாலதுர்கை

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள துர்கை அம்மன், சிறுமியைப் போன்று காட்சி அளிக்கிறாள். 20 கைகள் கொண்ட இவள், மகிஷாஸுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தந்தாலும், முகத்தில் சாந்தம் தெரிகிறது. எனவே இந்த அம்பிகையை மங்கள சண்டி என்று சொல்கிறார்கள். செவ்வாய்க் கிழமைகளில் மங்கள சண்டிகை ஸ்லோகம் சொல்லி வழிபட்டால், இளம் பெண்களுக்கு திருமணத்தடை நீங்கும். பணி உயர்வு, இடமாற்றம் பெறுவதற்கும் இந்த அம்பாள் அருள்பாலிக்கிறாள்.

 

துர்கையம்மன் என்றாலே சிம்மவாகன ேதவிதான். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகிலுள்ள பெரும்பேர் கண்டிகை தான்தோன்றீஸ்வரர் கோயிலில், அம்பிகையை மான் வாகனத்துடன் தரிசிக்கலாம். கோயில் வளாகத்தில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பமாக இவள் இருக்கிறாள். இவளுக்குப் பின்புறத்தில் மான் நின்று கொண்டு இருக்கிறது. இந்த துர்கையின் இடுப்பில் இருந்து செல்லும் சூலாயுதம் காலுக்குக் கீழ் உள்ள எருமைத்தலையின் மீது (மகிஷாசுரன்) குத்தியபடி இருக்கிறது. சாமுண்டீஸ்வரியும் தனிச் சந்நதி கொண்டு அருள்பாலிக்கிறாள்.

 

பொதுவாக சிவன் கோயில்களில் துர்கை சந்நதி மட்டுமே இருக்கும். ஆனால், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சிவதுர்கை, விஷ்ணுதுர்கை இருவருக்கும் தனித் தனி சந்நதிகள் அமைந்துள்ளன. சிவன் சந்நதியில் விஷ்ணு துர்கையும், காந்திமதி அம்பாள் சந்நதியில் சிவதுர்கையும் அருள்கின்றனர். சிவன் சந்நதி துர்கை அருகில் தோழிப் பெண் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறாள். அம்பாள் சந்நதி துர்கை பண்டாசுரனை வதம்செய்யும் கோலத்தில் காட்சியளிக்கிறாள். இவள் வடக்கு நோக்கி அருள்பாலிப்பது ஒரு சிறப்பம்சம்.

இவளுக்கு மஞ்சள் மாலைகள் சார்த்தி விசேஷமாக வணங்குகின்றனர். இவளை மஞ்சள் வடிவாம்பிகை என்று அழைக்கிறார்கள். பத்து கரங்களுடன் இவள் உக்கிரமாக காளி அம்சத்துடன் அருள்கிறாள்.

வித்தியாசமான வடிவாம்பிகை

தஞ்சையை ஆட்சி செய்த ராஜேந்திர சோழன், ஒரு சமயம் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி வாகை சூடிய தன் நினைவுச் சின்னமாக பெரிய துர்கை சிலை ஒன்றை கொண்டு வந்தார். தென்னகத்திலுள்ள பெரிய பதினெட்டு கரங்களையுடைய துர்கை, கங்கை கொண்ட சோழபுரத்தில் நிறுவப்பட்டது. பக்தர்கள் தற்போதும் வழிபட்டு வருகின்றனர்.

சென்னையை அடுத்த படப்பை என்ற இடத்தில் ஸ்ரீ ஜெயதுர்காதேவியின் ஆலயம் அமைந்துள்ளது. சமீபகால திருக்கோயிலாகும். இதில் துர்காதேவி சிம்மத்தின் மீது அமர்ந்த நிலையில் உள்ளாள். இந்த திருக்கோயிலை ஸ்ரீ துர்கை சித்தர் கட்டியுள்ளார். அவரது பிருந்தாவனமும் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. தன்னை வழிபடுவோர்க்கு மன சந்தோஷமும், வாழ்க்கையில் அமைதியும் தருபவள், ஸ்ரீ ஜெயதுர்கா.

ஜெயந்தயா மலை சக்திபீட வனதுர்கை

மகாசக்தி பீடங்களில் 35வது பீடநாயகியான ஜெயந்தேஸ்வரன் கோயிலில், வனதுர்கையாகக் காட்சி தருகிறாள், ஜெயந்தயா மலை, கோயில் நதிக்கரையை ஒட்டியுள்ளது. நூர்டியாங் கிராமம் மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கிலிருந்து 65 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில்தான் ஜெயந்தியாமலை இருக்கிறது. இந்த மலைப் பிரதேசத்தை ஆண்ட அரசர்கள் ஜெயந்தியா வம்சத்தினர்.

கூச்பிஹார் மன்னன் லட்சுமி நாராயணன் மகளை, ஜெயந்தியா நாட்டு ராஜகுமாரன் ஜஸ்ஸோமானிக்கல் திருமணம் செய்து கொண்டபோது, அவளுக்கு வந்த சீர்வரிசையில் துர்கை சிலையும் இருந்ததாம். அந்த சிலையே ஜெயந்தேஸ்வரி என்பது சிலரது அபிப்பிராயம். இங்குள்ள வனதுர்கா ஆலயம் மிகவும் பிரசித்தம். இவள் சிவனுக்குப் பிரியமானவள். நம் வாழ்வு வளம்பெற ஜெயந்தீஸ்வரியைப் பணிவோம்.

திருப்புறம்பியம் துர்காம்பிகை

கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் சுவாமிமலை வழித்தடத்தில் அமைந்துள்ளது. அருள்மிகு கரும்படு சொல்லியம்மை உடனுறை சாட்சி நாதர் திருக்கோயில். இந்த திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள துர்காம்பிகை அஷ்ட புஜங்களுடன் பேரழகு கொண்டு காட்சி தருபவள். வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்பவள். தடைப் பட்டு நிற்கும் திருமணங்கள் இனிதே நடந்திடவும், கருவுற்ற தாய்மார்கள் சுகப்பிரசவமாய் குழந்தையை பெற்றெடுக்கவும், பிள்ளையற்ற தம்பதியர் குழந்தைச் செல்வம் பெற்றிடவும் அருள்பவள் இத்தலத்தில் தனிக் கோயிலில் காட்சி தரும் அஷ்டபுஜ துர்காம்பிகை.