ஈரான் 2,500 கண்டெய்னர்களுடன் சென்ற சரக்கு கப்பலை கண்ணிவெடி மூலம் மூழ்கடித்த ஈரான்…!

 

 

ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி அருகே கண்ணிவெடி, ஏவுகணை தாக்குதலில் அடுத்தடுத்து 2 சரக்கு கப்பல்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டது. இதனால் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதலை தொடங்கியது. ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போர் தொடங்கியதில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த ஜலசந்தியை நிர்வகிப்பதில் ஈரான்-அமெரிக்கா இடையே போட்டி உள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை தோற்க வேண்டும் என ஈரான் விரும்புகிறது. இதனால் ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக மூடி உள்ளது. இதன்மூலம் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் சப்ளையை நிறுத்த முடியும். அதோடு பெட்ரோல், டீசல் விலையை ஏற்ற முடியும். ஏற்கனவே அமெரிக்காவில் டீசல் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் ஈரானின் இந்த செயல் கூடுதலாக விலையை உயர்த்த வாய்ப்புள்ளது.

இது அமெரிக்காவின் இடைக்கால தேர்தலில் எதிரொலிக்கலாம் என்று ஈரான் நினைக்கிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக ஈரான் மூடியுள்ளது. அதேபோல் ஹார்முஸ் ஜலசந்தியில் மாற்று பாதை ஒன்றிலும் கப்பல் போக்குவரத்தை தடை செய்ய ஈரான் கண்ணிவெடிகளை வைத்துள்ளது.இந்நிலையில்தான் கடந்த 24 மணி நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே 2 சரக்கு கப்பல்கள் அடுத்தடுத்து மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அதாவது, சிங்கப்பூர் நாட்டு கொடியுடன் சென்ற ஜிஎஃப்எஸ் பிரைட் என்ற பெயர் கொண்ட கன்டெய்னர் கப்பல் தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியுள்ளது. இந்த கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானால் தடை செய்யப்பட்ட கடல்வழி பாதையில் பயணித்துள்ளது. அங்கிருந்த கண்ணிவெடி வெடித்ததில் கப்பல் தீப்பிடித்து கடலில் மூழ்கியுள்ளது.
இந்த கப்பல் 2,500 கன்டெய்னர்களுடன் பயணித்த நிலையில் தண்ணீரில் மூழ்கியது. கப்பலில் இருந்த 21 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனை சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் உறுதி செய்துள்ளது. அதேபோல் இன்னொரு சம்பவத்தில் ஆண்டிகுவா – பார்புடா நாட்டு கொடியுடன் சென்ற கேப் டாவ் கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தி அருகில் மூழ்கியது. இதில் ஒரு பணியாளர் உயிரிழந்தார். மற்றவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். கடந்த மாதம் 23ம் தேதி இந்த கப்பல் ஏவுகணையால் தாக்கப்பட்டிருந்தது. அதில் தப்பிய இந்த கப்பல் தற்போது நீரில் மூழ்கியுள்ளது. இதனால் தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.