மாகாண சபைகளில்லாத ஜே.வி.பி.அரசாங்கத்தின் புதிய முறைமை ?

 

இலங்கையின் அரசியல் கட்சிகள், குறிப்பாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மட்டுமன்றி, ஞாயிறு பத்திரிகைகள் உள்ளிட்ட பிரதான ஊடகங்களும், வெளிநாட்டுத் தாக்கங்களைக் கொண்ட மிக முக்கியமான, நீண்டகால முக்கியத்துவம் வாய்ந்த செய்தியைத் தவறவிட்டுள்ளன.

இது தமிழ் தேசியப் பிரச்சினை தொடர்பில் ஜேவிபி-என்.பி.பி அரசாங்கத்தின் நிலைப்பாடு, மாகாண சபைகள் குறித்த அதன் முடிவு மற்றும் அதன் பொதுவான அரசியல் திட்டங்கள் பற்றியதாகும்.

1971ஏப்ரல் கிளர்ச்சியின் வீரன், 1970களின் பிற்பகுதியிலும் 1980களின் முற்பகுதியிலும் தமிழ் தேசியப் பிரச்சினை குறித்த கட்சியின் முதன்மை தத்துவார்த்தவாதியும், ஜே.வி.பியின் முதல் பொதுச்செயலாளருமான லயனல் போபகே, கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளரும்—நாட்டின் முதலாவது நபரா இல்லையெனில் இரண்டாவது சக்திவாய்ந்த நபருமான—ரில்வின் சில்வாவுடன் தான் நடத்திய உரையாடலை பதிவு செய்துள்ளார்.

அதன்முக்கியமான பகுதி இதோ:

“ஆனால் அதே நேரத்தில், அது 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.தோழர் ரில்வின் சில்வாவுடனான கலந்துரையாடலின் போது, அரசியலமைப்பு மாற்றம் மற்றும் 13ஆவது திருத்தம் குறித்து நான் கேட்டேன்.

அரசாங்கம் இன்னுமொரு புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதை ஏற்றுக்கொள்ள உழைத்து வருகிறது என்பதே அவரது பதிலாக இருந்தது. அது 13ஆவது திருத்தத்தை எதிர்மறையான ஒன்றாகப் பார்க்கிறது.

அதற்கு மாற்றீடொன்றைக் கண்டறிய முயற்சிக்கிறது. நான் சுருக்கமாகக் கூறினால், தமிழ் மக்களின் குறைகள் உள்ளன என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது, மேலும் இலங்கை-இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாண சபைகள் மூலமாக அல்லாமல் அவற்றை நிவர்த்தி செய்ய விரும்புகிறது. அது சொந்த வழிமுறைகளை உருவாக்கி வருகிறது. அனைத்து சமூகங்களும் கண்ணியத்துடன் வாழ்வதற்கு சம வாய்ப்புகளை வழங்க முடிந்தவரை நல்லதென்றால், நான் மகிழ்ச்சியடைவேன்”

இதன் முக்கிய பகுதிகளை உன்னிப்பாகக் கவனிக்கும்போது, நமக்கு கிடைக்கும் தெளிவு இதுதான்:

• தமிழ் மக்களுக்கு குறைகள் உள்ளன என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது, ஆனால் இலங்கை-இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாண சபைகள் மூலமாக அல்லாமல் அவற்றை நிவர்த்தி செய்ய விரும்புகிறது.

1980களின் பிற்பகுதியில் தனது வன்முறைப் பிரசாரத்தின் போது இருந்தது போலவே, ஜேவிபி அரசாங்கம் சித்தாந்த ரீதியாக இலங்கை-இலங்கை ஒப்பந்தத்திற்கும் 13ஆவது திருத்தத்திற்கும் எதிராகவே உள்ளது. இந்த எதிர்ப்பு இந்தியாவின் வற்புறுத்தல் இராஜதந்திரத்திற்கு மட்டும் வரம்பிற்குட்பட்டது அல்ல. ஏனெனில் அப்படி இருந்திருந்தால், அது இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு மட்டுமான எதிர்ப்பாக இருந்திருக்க வேண்டும், 13ஆவது திருத்தத்திற்கான எதிர்ப்பு அல்ல.

ஜே.வி.பியின் பார்வையில் 13ஆவது திருத்தம் குறைபாடுள்ளது மட்டுமே என்றால், அதை எதிர்மறையானது என்று முற்றாக நிராகரித்து மாற்றீட்டைத் தேடுவதற்குப் பதிலாக, அதைச் திருத்தியமைத்திருக்க முடியும். 13ஆவது திருத்தத்தில் உள்ள பிரச்சினை என்ன என்றும், அதை பாராளுமன்ற இணக்கப்பாட்டின் மூலம் கட்டமைப்பு ரீதியான திருத்தம் செய்து ஏன் தீர்க்க முடியாது என்றும் ஜே.வி.பி இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

அநுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகத்திற்கு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக வந்த தற்போதைய 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபை தேர்தல்களை நடத்தும் எண்ணம் இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேர்தல் முறையில் மட்டும் மாற்றங்களுடன் 13ஆவது திருத்தத்தின் கீழ் நிறுவப்பட்ட மாகாண சபைகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட மாட்டாது.

லயனல் போபகே ஜேவிபி இரகசியங்களை அறிந்தவர்—தற்போதுள்ள மாகாண சபை முறைமை முற்றிலும் மாற்றப்படும். மாகாண சபை முறைமை என்றொன்று இருந்தால், அது புதிய ஒன்றாக இருக்கும். தற்போதைய மாகாண சபைகளின் முறைமை இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

13ஆவது திருத்தம் என்பது இந்தியா மற்றும் இலங்கைக்கும் இடையே மற்றும் இலங்கை அரசியல் கட்சிகளுக்கு இடையே (1986) பல ஆண்டுகள் (1984 முதல்) நடந்த பேச்சுவார்த்தைகளின் பலனாகும்.

ஜே.வி.பி. அதைச் சீர்திருத்துவதை விடுத்து நிராகரிப்பதால், அதன் ‘சொந்த வழிமுறை’ முடிவில்லாத ஆலோசனைகளுக்கும் தாமதங்களுக்கும் வழிவகுக்கும் அல்லது ஆலோசனைகள் மற்றும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் அமையாமல் தன்னிச்சையான விரைவான ஒன்றாக இருக்குமென நாம் எதிர்பார்க்கலாம்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் தேர்தல் அறிக்கையில் ஒரு வருடத்திற்குள் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுமென வாக்குறுதியளிக்கப்பட்டதே தவிர, 13ஆவது திருத்தம் மற்றும் தற்போதைய முறைமைக்கு வெளியே அதன் சொந்த புதிய வழிமுறை கொண்டுவரப்படுமென வாக்குறுதியளிக்கப்படவில்லை.

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தையும் 13ஆவது திருத்தத்தையும் தன்னிச்சையாக புறக்கணித்து, மீறி, இரத்து செய்வதன் மூலம், ஜே.வி.பி. அரசாங்கம் ஏதேனுமொரு நாளில் இந்தியாவுடன் மீண்டுமொரு சிக்கலில் ஈடுபடப்போகிறது. இப்போது தமிழ்நாட்டில் ஒரு துடிப்பான இளம் முதலமைச்சர் இருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதேநேரம் இந்தச் சிறிய தீவில் இன்னும் அதிகமான மூலோபாய நிலங்களை இந்தியாவுக்கு விற்று அதன் அழுத்தத்தை ஈடுசெய்யும்.

‘அனைத்து சமூகங்களுக்கும் சம வாய்ப்புகள்’ என்ற லயனல் போபகேயின் சமிக்ஞையிலிருந்து, ஜே.வி.பியின் ‘சொந்த வழிமுறைகள்’ என்பது அதிகாரப்பகிர்வு அல்லது பிராந்திய சுயாட்சி அல்லது அரைச் சுயாட்சி அடிப்படையில் அமையாது என்பதை நாம் ஊகிக்க முடியும்.

சாத்தியமான வகையில், ஜே.வி.பி. தன்னை ஆட்சியில் தக்க வைத்துக் கொள்ளவும், தேசிய தேர்தல்களை பிற்போடவும் சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல இலக்கு வைக்கலாம். ஏனெனில் இந்த விவகாரத்தில் சிங்கள தீவிர தேசியவாத வாக்குகளைப் அதனால் பெற முடியும் என்று அது கணக்கிடுகிறது. இந்த சூதாட்டம் இலங்கையை இரண்டு காரணங்களால் ஆபத்தான பாதைக்குக் கொண்டு செல்லும்:

1.மாகாண அளவிலான அலகுகளுக்கு அரசியல்-பிராந்திய சுயாட்சி அல்லது அதிகாரப்பகிர்வை வழங்காத 13ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாட்டுத்தரப்பிடமிருந்து எதிர்புக்கள் வெளிப்படாது என்பது நிச்சயம்.

2. ‘அனைத்து சமூகங்களுக்கும் சம வாய்ப்புகள்’ என்பதை எதிர்க்கும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களிடமிருந்தும் எதிர்மறையான எதிர்வினை வர வாய்ப்புள்ளது.

ஏனெனில், லோர்ட் சோல்பரி கூறியது போல், ஒரு சிறுபான்மையினரைப் பெரும்பான்மையினராகவோ அல்லது பெரும்பான்மையினரைச் சிறுபான்மையினராகவோ மாற்ற முடியாது.

பாகுபாடற்ற நிலை சாத்தியமானது மற்றும் விரும்பத்தக்கது என்றாலும், அரசியல் ரீதியாக ‘அனைத்து சமூகங்களுக்கும் சம வாய்ப்புகள்’ என்பது போட்டியிடும் ஜனநாயக முறைமை மற்றும் சமமற்ற அளவிலான சமூகங்களைக் கருத்தில் கொள்ளும்போது சாத்தியமற்றது. மேலும், ‘அனைத்து சமூகங்களுக்கும் சம வாய்ப்புகள்’ என்பது பௌத்த மதத்தின் அரசியலமைப்புச் சலுகை பெற்ற அந்தஸ்துடன் பொருந்தாதது என்றும், தமிழ் தரப்பில் அதுவொரு மதச்சார்பற்ற அரசைத் தேவையாக்குகிறது என்றும் இரு தரப்பாலும் நிரூபணம் செய்யப்படலாம்.

இவ்வாறிருக்கையில், லயனல் போபகேயின் கூற்றுப்படி, ரில்வின் சில்வா ‘அரசாங்கம் தான் ஏற்றுக்கொள்ளப் போகும் புதிய அரசியலமைப்பை நோக்கி இன்னும் உழைத்து வருகிறது’ என்று கூறுகிறார். அப்படியென்றால், அதற்கான பரந்த ஆலோசனை செயன்முறையின் அடையாளம்கூட ஏன் இல்லை?

இந்த செயல்முறை தன்னிச்சையானதாக இருக்குமா? அல்லது அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பைத் தவிர்த்து, 22ஆவது திருத்தத்திற்குப் பிந்தைய இறப்பர் முத்திரையை எதிர்நோக்குகிறதா? அல்லது ஆலோசனைகள் இன்னும் தொடங்கவில்லையா? அல்லது மாகாண சபைகள் அவற்றின் வாரிசு அமைப்புகளுக்கான மாவட்ட சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்ந்து காலவரையின்றி தாமதப்படுத்தப்படுமா?

தமிழ் தேசியவாதத்தின் தீவிரக்கரையை நான் பார்க்கவில்லை என்பதல்ல. திலீபனின் நினைவேந்தலே அதற்கு சான்றாகும். சிங்கள அல்லது இந்திய சிப்பாய்களால் தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக திலீபன் உண்ணாநோன்பிருந்து இறக்கவில்லை.

பிரபாகரனின் கட்டளையின் பேரிலேயே, இலங்கை பெற்ற அமைதிக்கான முதல் உண்மையான வாய்ப்பையும், தமிழ் மக்கள் பெற்ற சுயயாட்சி அளவிலான முதல் உண்மையான வாய்ப்பையும் (இந்திய-இலங்கை ஒப்பந்தம்) சீர்குலைப்பதற்காகவே அவர் அவ்வாறு செய்தார்.

தேசிய விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில், சண்டை நிறுத்தப்பட்டு, பரிவுணர்வு கொண்ட வெளிநாட்டுச் சக்தியின் மத்தியஸ்தத்துடன் முன்னேற்றத்திற்கான உண்மையான வாய்ப்பு இருக்கும் போது போராட்டங்கள் வெடித்தமை அரிதாகும்.

ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் அவ்விதமான சூழல்களை சீர்குலைத்தது. பிரபாகரனின் உத்தரவின் பேரில் திலீபன் நடத்திய இந்த அமைதிக்கு எதிரான, போருக்கு ஆதரவான உண்ணாநோன்பைத்தான் வடக்கு மாகாணத்திலும் புலம்பெயர் தேசத்திலும் உள்ள தமிழ் தீவிர தேசியவாதிகள் நினைவுகூருகிறார்கள். இது தமிழ் தேசியவாதத்தின் அடிப்படைவாத, பிரிவினைவாத அம்சத்திற்கு மீண்டும் சான்றாகும்.

அப்படியிருந்தும், ஒரு நாட்டில் ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினராக இருந்தாலும், குறிப்பிட்ட பிரதேசத்தில் செறிவாக வாழ்ந்து பெரும்பான்மையினராக இருக்கும் ஒவ்வொரு இனத்துவ-தேசிய சமூகமும் அப்பிரதேசத்தில் குறிப்பிட்ட அளவிலான அதிகாரப்பகிர்விற்கும் சுய நிர்வாகத்திற்கும் தகுதியுடையது. அது இலங்கையின் தமிழர்களுக்கும் பொருந்தும், அதைத்தான் இலங்கை-இந்திய ஒப்பந்தம், 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகளின் முறைமையும் உறுதிசெய்தன.

அத்துணை அமைப்பைச் சிதைத்து, மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு இல்லாத ஒன்றைக்கொண்டு அதை மாற்ற முயல்வது பொருத்தமற்றது. ‘அனைத்து சமூகங்களுக்கும் சம வாய்ப்புகள்’ என்ற தெளிவற்ற முயற்சியை மாற்றீடு செய்வால், பிரிவினைவாத தூண்டுதலைக் கட்டுப்படுத்தும் திறன் நீக்கப்பட்டு, அருகிலுள்ள தமிழ்நாட்டில் தொடங்கி இலங்கை மீதான வெளிநாட்டு அழுத்தத்தை மீண்டும் தூண்டுவதற்கு அனுமதிக்கிறது.

சமகால வரலாறு நமக்குக் கற்பிப்பது என்னவென்றால், ஒரு அரசு பிராந்திய சிறுபான்மையினர் ஏற்கனவே அனுபவித்து வந்த சுயாட்சி அலகுகளை ஒருபோதும் இரத்து செய்யவோஅல்லது திரும்பப் பெறவோ கூடாது.

உண்மை தான், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்தது, ஆனால் இந்தியாவின் அரை-கூட்டாட்சி முறைமைக்குள் அது தொடர்கிறது. மிலோசெவிக் பாராளுமன்ற பெரும்பான்மை மூலம் கொசோவோவின் சுயாட்சி அந்தஸ்தை இரத்து செய்தார், இது யூகோஸ்லாவியாவை ஒரு நாடாக கொண்டுவந்த செயன்முறையைத் தொடங்கியது.

இலங்கையில் மாகாண சபை முறமை இல்லையென்றால்:

• தமிழர்கள் இப்போது மீண்டும் அதிகளவான மத்தியமயமாக்கப்பட்ட ஒற்றையாட்சி முறைமைக்குள் தொடர்ந்து இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதிகாரப்பகிர்வு அல்லது அரைச் சுயாட்சி கொண்ட ஒற்றையாட்சி முறைமைக்குள்ளும் தான்.

• சிங்கள பெரும்பான்மை உட்பட முழு நாட்டின் இறையாண்மை கொண்ட மக்களும், அதன் அரசான ஒரு ஜனநாயகக் குடியரசின் இடைநிலை (மாகாண) தேர்ந்தெடுக்கப்பட்ட அடுக்கு இல்லாமல் இருக்கும் நிலைமையே ஏற்படும்.