மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்-அக்டோபர்- 15-2026

 

மேஷ ராசி அன்பர்களே! யோக பலன் அதிக அளவில் நடக்கும் நாள். பழக்கவழக்கங்களின் மூலம் தொழில் முன்னேற்றம் காணும். வியாபாரத்தில் உயர்வான பலன் உண்டாகும். பங்குச்சந்தை மூலம் பண வரவு உண்டாகும். மனைவியின் உடல்நிலை முன்னேற்றம் காணும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். அவசியமான நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். தெற்கு திசையில் இருந்து ஒரு நல்ல செய்தி வரும். உடன் பிறந்தவர்கள் உதவி கிடைக்கும். பண வரவுகளில் தடை ஏற்படாது. நல்ல பலன்கள் உண்டாகும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன் பெறுவார்கள்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன வெற்றி அடைவார்கள்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில் மேன்மை பெறுவார்கள்.

இன்று உங்கள் பலம்:

பங்குச்சந்தையில் போட்ட பணம் பல மடங்கு அதிகரிக்கும். உறவினர்களின் ஒத்தாசை பக்கபலமாக இருக்கும்.

இன்று உங்கள் பலவீனம்:

சில நேரங்களில் அலட்சியமாக வாகனம் ஓட்டுவது. பண விஷயத்தில் கவனக்குறைவாக நடக்கக்கூடாது.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 அலுவலகத்தில் நல்ல பெயர் எடுக்க கடின உழைப்பு வேண்டும்.

2 நல்லது செய்தாலும் கெட்ட பெயர் வந்து சேரலாம்.

3 காலையில் நேரம் கழித்து எழுந்திருப்பது.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல்

வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்

ரிஷப ராசி அன்பர்களே… முன்னேற்றகரமான செய்திகள் வந்து சேரும் நாள். தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டாகும். பூர்வீக சொத்து மீது இருந்த வில்லங்கம் விலகி உங்களுக்கு வந்து சேரும். வியாபாரம் சூடு பிடிக்கும். சில தொழில் சம்பந்தப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும். தாய் தந்தையர் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் விறுவிறுப்பாக நடக்கும். தொழில்துறையிலிருந்து பிரச்சனைகள் நீங்கும். வேலை இடத்தில் மரியாதையும் அந்தஸ்தும் உயரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண வரவு அதிகரிக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை பெறுவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு அடைவார்கள். இன்று உங்கள் பலம்: மிக நுணுக்கமாக திட்டம் போட்டு வியாபாரத்தில் ஈடுபடுவது. கையிருப்பை உயர்த்தி வைத்திருப்பது. இன்று உங்கள் பலவீனம்: எடுத்தோம் கவிழ்த்தோம் என்று சில விஷயங்களில் ஈடுபடுவது. காரணம் இல்லாமல் உடன் இருப்பவர்களை கோபிப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஆன்லைன் வர்த்தகங்களில் கவனமாக இருக்க வேண்டும். 2 அரசு வேலையில் அலட்சியமாக இருக்கக் கூடாது. 3 மனைவியின் ஆசைக்கு எதிராக இருப்பது. அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.

மிதுன ராசி அன்பர்களே! ராஜ யோகம் தேடி வரும் நாள். வேலை உயர்வு கிடைத்து சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டு செலவுகளை சமாளிப்பீர்கள். வருமானம் உயர்வு ஏற்பட்டு கையில் பணம் புரளும். வியாபாரத்தில் லாபம் கிடைத்து முக்கிய கடன் அடைபடும். நீண்ட நாள் வராத பணம் வசூலாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். உறவினர் உங்களுக்கு தக்க துணையாக இருப்பார் . பண வரவு அதிகரித்து செல்வாக்கு பெருகும். வியாபாரத்தில் உயர்வு உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை அடைவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: உறுதியான மனத்தோடு தொழிலை விரிவுபடுத்த திட்டமிடுதல். நெருங்கிய உறவினர் ஆதரவு தருவது. இன்று உங்கள் பலவீனம்: இரவு நேரத்தில் அதிக நேரம் வெளியில் தங்குவது. பிள்ளைகளைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வேலை இடத்தில் வார்த்தைகளில் எச்சரிக்கை தேவை. 2 அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பது தவறு. 3 காரணம் இல்லாமல் விடுமுறை எடுப்பது சிக்கல். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.

கடக ராசி அன்பர்களே! நன்மைகள் அதிகமாக வந்து சேரும் நாள். இன்று தொழில் சிறப்பான முறையில் நடக்கும். வியாபாரத்தில் விறுவிறுப்பு கூடி வருமானம் அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலைத் திறன் வெளிப்பட்டு மதிப்பு அதிகரிக்கும். வங்கியில் பண இருப்பு உயரும். மேலதிகாரிகளின் அனுசரணையான போக்கு வெளிப்படும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளியூர் பயணங்களின் மூலம் தொழில் லாபம் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன் அடைவார்கள்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தானிய விருத்தி பெறுவார்கள்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புகழ் அடைவார்கள்.

இன்று உங்கள் பலம்:

கேட்ட இடத்தில் தவறாமல் பணம் கிடைப்பது. எந்த வேலையையும் முடிக்க கூடிய ஆற்றல் இருப்பது.

இன்று உங்கள் பலவீனம்:

மற்றவர் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுவது. நண்பருக்கு கடன் வாங்கி கடன் கொடுப்பது.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 வேலை செய்யும் இடத்தில் தவறு நடக்காமல் இருக்க வேண்டும்.

2 அரசு அதிகாரிகளின் கோபத்தை கிளறக் கூடாது.

3 சேமிப்பு பழக்கத்தை கோட்டை விடக்கூடாது.

அதிர்ஷ்ட எண்: 8,5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள்.

வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.

சிம்மராசி அன்பர்களே! எதிர்பாராத பலன்கள் நடக்கும் நாள் இன்று. உங்களின் மதிப்பும் மரியாதையும் உயர்ந்து நிற்கும். வேலை பார்க்கும் இடத்தில் சிறப்பு கிடைக்கும். பதவி மாற்றம் உண்டாகும். சம்பள அதிகரித்து மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் அதிக லாபம் வந்து சேரும். தொழில்துறையில் இருந்த போட்டிகள் மறைந்து போகும். பழைய நேர்த்திக்கடன் நிறைவேறும். குலதெய்வத்தினுடைய அருள் கிடைக்கும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல பலன் அடைவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை உயர்வு பெறுவார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணிகலன் சேர்க்கை அடைவார்கள். இன்று உங்கள் பலம்: புதிய திட்டத்தின் மூலம் வியாபாரத்தை செயல்படுத்துவீர்கள். சரியான இடத்தில் முதலீடு செய்வீர்கள். இன்று உங்கள் பலவீனம்: மனைவி என்ன சொல்கிறார் என்பதை காது கொடுத்து கேட்க வேண்டும். பிள்ளைகளின் நலன் மீது அக்கறை காட்ட வேண்டும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 இணையதள மோசடிகளில் சிக்க வேண்டாம். 2 வரவு செலவு கணக்கு சரியாக எழுதப்பட வேண்டும். 3 வெளியூர் பயணங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.

கன்னி ராசி அன்பர்களே! திருப்திகரமான செய்திகள் கிடைக்கும் நாள். அலுவலகத்தில் திறமை வெளிப்பட்டு பாராட்டு கிடைக்கும். புதிய முயற்சியில் வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். வேலை இடத்தில் உங்கள் திறமை அதிகமாக வெளிப்படும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட வியாபார நெருக்கடி விலகும். பொருளாதார உயர்வு வங்கி இருப்பை அதிகரிக்கும். கடன் சுமைகள் கட்டுக்குள் வரும். செலவுகள் குறைந்து வருமானம் பெருகும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குலதெய்வத்தின் அருள் பூரணமாக இருக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை அடைவார்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி பெறுவார்கள்.

இன்று உங்கள் பலம்:

பார்ட்னர்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து பண உதவி தேடி வரும்.

இன்று உங்கள் பலவீனம்:

வாகனப் பழுது ஏற்பட்டு சிரமப்படுத்தும். உங்களின் நல்ல மனதை உறவினர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 பங்குச்சந்தை வியாபாரத்தில் நிதானமாக ஈடுபட வேண்டும்.

2 கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் இருக்கக் கூடாது.

3 பிள்ளைகளின் நடவடிக்கையை அணுக்கமாக கண்காணிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 1,9

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு.

வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.

துலாம் ராசி அன்பர்களே! நல்ல காரியங்கள் நடக்கும் நாள். மனதளவில் திட்டம் போட்டு தொழிலை நடத்துவீர்கள். நீண்ட தூர பயணங்கள் லாபத்தை கொண்டு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத உயர்வு உண்டாகும். ஆன்லைன் வர்த்தகத்தில் சிறப்பான வருமானம் கிடைக்கும். வியாபாரம் அதிகரித்து கையிருப்பு கூடும். வேலை இடத்தில் அதிக கவனத்தோடு செயல்பட வேண்டும். உங்கள் உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு செல்வம் பெருகும்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி வாய்ப்பு குவியும்.

விசாகம் நட்சத்திரக்காரர்கள் அந்தஸ்து உயரும்.

இன்று உங்கள் பலம்:

செயல் திறனும் தொழில் அறிவும் வியாபாரத்திற்கு பலம் சேர்க்கும். அரசு உதவிகள் வந்து சேரும்.

இன்று உங்கள் பலவீனம்:

நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பது நல்லதல்ல. மனைவியின் வேண்டுகோளை தள்ளிப் போடாதீர்கள்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 அன்றாட கணக்கு வழக்கில் அலட்சியம் காட்டக்கூடாது.

2 அலுவலகத்தில் மனச்சுமையோடு வேலை பார்க்கக் கூடாது.

3 சக ஊழியரின் விஷயத்தில் தலையிடக்கூடாது.

அதிர்ஷ்ட எண்: 6,3

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு.

வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்

விருச்சிக ராசி அன்பர்களே! உயர்வான நன்மைகள் வந்து சேரும் நாள். தொழில்துறையில் மிகுந்த முன்னேற்றமான பலன் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். தன லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். வேலை இடத்தில் சில நல்ல பலன் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பு ஊக்கம் தரும். குலதெய்வத்தின் அருளால் உடல்நலம் மேம்படும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு உயர்வான நன்மை ஏற்படும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் வருமானம் அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு பண உதவி வந்து சேரும். இன்று உங்கள் பலம்: தொழில்துறையில் புதிய நுட்பங்களை புகுத்துவது. பார்ட்னர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வது. இன்று உங்கள் பலவீனம்: வேலைப்பளுவால் நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது. குடும்பப் பிரச்சினையால் கவனக்குறைவாக நடப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 இணையதள ஆசை வார்த்தைகளில் மயங்க கூடாது. 2 பிள்ளைகளுக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும். 3 மறைமுகமான எதிர்ப்புகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன்

தனுசு ராசி அன்பர்களே! உயர்வான செய்தி கிடைக்கும் நாள். உழைப்பும் சுறுசுறுப்பும் தொழிலில் வருமானத்தை குவிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் லாபத்தை கொண்டு வரும். வேலையில் உள்ளவர்களுக்கு வேலை உயர்வு கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சனை சாதகமாக முடியும். எதிர்பாராத சில நல்ல காரியங்கள் நடக்கும். தொழிலுக்கு இருந்த எதிர்ப்புகள் மறையும். தெற்கு திசையில் இருந்து முக்கிய செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு மனை இடம் வாய்க்கும். பூராடம் நட்சத்திரக்காரர்கள் பண வரவு கூடும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வாகன யோகம் உண்டாகும். இன்று உங்கள் பலம்: திட்டமிடும் ஆற்றலும் செயல்படுத்தும் திறமையும் தொழிலை மேம்படுத்தும். பெரியோர்களின் ஆசி பக்கபலமாக இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: ஏதாவது மனச்சுமை இதயத்தை அழுத்தும். இரவில் தூக்கம் வராத நிலை உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வயிற்றுப் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 2 அலுவலகத்தில் மனக்குறையோடு வேலை செய்யக்கூடாது. 3 குழந்தைகளின் ஆரோக்கியத்தை பார்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி

மகர ராசி அன்பர்களே! நன்மைகள் வந்து சேரும் நாள். தொழிலில் அபிரிமிதமான லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வருமானம் கூடி பணப்புழக்கம் ஏற்படும். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். குலதெய்வத்தில் அருள் பரிபூரணமாக இருக்கும். பதவி உயர்வு உண்டாகும். சம்பளம் அதிகரித்து பண தேவை பூர்த்தியாகும். வேலையிட மாறுதலும் ஏற்படலாம். பொருளாதார உயர்வு உண்டாகும். வீட்டுமனை வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு பெருகும். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் சம்பளம் அதிகரிக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வெற்றி கிடைக்கும். இன்று உங்கள் பலம்: தொழிலுக்கு தேவையான உதவிகள் வந்து சேரும். வெளியூரிலிருந்து முக்கிய செய்தி கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: அடுத்தவரின் பேச்சை அப்படியே நம்புவீர்கள். மனக்குழப்பத்தோடு காரியங்களில் இறங்குவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கவனம் தேவை. 2 வாகனங்கள் ஓட்டும்போது மன பாதிப்பு அடையக் கூடாது. 3 அன்றைய வேலையை அன்றே முடிக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.

கும்ப ராசி அன்பர்களே! எதிர்பார்த்த செய்திகள் வரும் நாள். தொழில் வெற்றி உண்டாகும். வருமான அதிகரிப்பு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். செல்வ பெருக்கு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் தக்க சமயத்தில் வந்து சேரும். தொழிலில் பெரிய முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். வேலை இடத்தில் உங்கள் பேச்சுக்கு தனித்தன்மை உண்டாகும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பு வந்து சேரும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு கையில் பணம் புரளும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வங்கியிருப்பு கூடும். இன்று உங்கள் பலம்: பங்குச் சந்தை முதலீடுகள் பக்கபலமாக இருக்கும். அரசியல் நண்பரின் உதவி தொழிலை உயர்த்தும். இன்று உங்கள் பலவீனம்: அரசு வேலையில் சற்று அலட்சியமாக நடந்து கொள்வது. திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு பேசி விடுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல கூடாது. 2 நினைத்த பொருளையெல்லாம் வாங்கும் எண்ணம் கூடாது. 3 அவசியமில்லாமல் எந்த காரணம் கொண்டும் கடன் வாங்க கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.

மீன ராசி அன்பர்களே! சிறப்பான பலன் நடக்கும் நாள். எதிர்பாராத லாபம் வியாபாரத்தில் கிடைக்கும். தொழிலில் புதிய வேகம் பிறக்கும். மறைமுகமான எதிர்ப்புகள் மறைந்து போகும். அலுவலகத்தில் உங்கள் வேலைத் திறன் வெளிப்படும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சுமூகமான நிலை உண்டாகும். வீட்டில் மனைவியின் அன்பு குதூகலத்தை ஏற்படும். வருமானம் பெருகி கடன்கள் அடைபடும். உறவினர்களின் உதவி கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல காரியம் நடக்கும் . உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் செல்வப் பெருக்கு உண்டாகும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் வெளிநாட்டு உதவி பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: தொழிலை உயர்த்துவதற்கு மிக நேர்த்தியாக திட்டம் போடுவீர்கள். முதலீடுகளை சிறப்பாக பெருக்குவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: சில நேரம் வேலையில் அக்கறையில்லாமல் இருப்பது. குறைகளை சொல்லும் போது கோபப்படுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வியாபார கணக்குகளை சரியாக எழுத வேண்டும். 2 பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. 3 வேலை இடத்தில் வெறுப்புணர்ச்சி கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.

இன்றைய பஞ்சாங்கம் தேதி 28 – புரட்டாசி – பராபவ வருடம் வியாழன் நாள் வியாழன் திதி பஞ்சமி (up to October 16, 3:25 am) சஷ்டி (up to October 17, 5:54 am) நட்சத்திரம் அனுஷம் (up to 4:03 am) கேட்டை (up to October 16,6:47 am) யோகம் சித்த யோகம் நல்ல நேரம் 10:30 – 11:00 am / 1:00 – 1:30 pm கௌரி நல்ல நேரம் 6:30 – 7:30 pm இராகு காலம் மதியம் 1.30 – 3.00 எமகண்டம் காலை 6.00 – 7.30 குளிகை காலை 9.00 – 10.30 சூலம் தெற்கு பரிகாரம் தைலம் சந்திராஷ்டமம் கார்த்திகை சூரியோதயம் 6:02 AM சூரிய அஸ்தமனம் 5:46 PM சந்திரோதயம் Oct 15 9:48 AM சந்திர அஸ்தமனம் Oct 15 9:16 PM