இலங்கையின் நிலப்பரப்போ அல்லது வான்பரப்போ இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க கூறி உள்ளார்.
இலங்கையின் வடமேல் மாகாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் திஸாநாயக்க, தனது தலைமையிலான அரசு நடுநிலை வெளியுறவுக் கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றும். மேலும் எந்தவொரு ராணுவ மோதலிலும் பங்கேற்காது என உறுதிபட தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நடுநிலை வெளியுறவுக் கொள்கையை சுட்டிக்காட்டிய அவர், “நாம் ராணுவ பலம் கொண்ட நாடு அல்ல, எனவே எந்தவொரு ராணுவ மோதலிலும் நாம் ஒரு தரப்ப்புக்கு ஆதரவாக மாற மாட்டோம்” என்று கூறினார். இதற்கு ஒருசில உதாரணங்களை சுட்டிக்காட்டினார். அமெரிக்க – ஈரான் மோதல்களுக்கு மத்தியில், இரு நாடுகளின் கோரிக்கைகளையும் நிராகரித்ததையும், ஈரான் போர்க்கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் நங்கூரமிட விடுத்த கோரிக்கை நிராகரித்ததையும் குறிப்பிட்டார்.
ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, இரு நாடுகளின் கடல்சார் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இலக்கை அதிபர் இவ்வாறு பேசியிருப்பது சர்வதேச நாடுகள் மத்தியில் தனிக்கவனம் பெற்றுள்ளது.அரசுச் செய்திகள்



