14ம் போப் லியோவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை

 

போப் 14ம் லியோ நவம்பர் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பெரு ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் நேற்று ஞாயிறு பிரார்த்தனையின்போது பேசிய போப் 14ம் லியோ, “எனக்கு அண்மையில் நடந்த மருத்துவ பரிசோதனையின்போது, நுரையீரலில் சிறிய கட்டி இருப்பது கண்றியப்பட்டது.

இது மிகவும் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சை அளிப்பதே சிறந்தது என மருத்துவர்கள் கருதுகின்றனர். எனவே அவர்களின் ஆலோசனையின்படி, அதை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்தார்.