மேஷ ராசி அன்பர்களே! நினைத்த காரியங்கள் நடக்கும் நாள். பழக்கவழக்கங்களில் சில ஏற்றங்கள் ஏற்படும். தொழில்துறையில் வளர்ச்சி உண்டாகும். காப்பீட்டு துறையில் கவனம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண வரவு சிறப்பாக இருக்கும். நண்பர்களின் உதவி சற்று தாமதமாகும். கிழக்கு திசையில் இருந்து ஒரு நல்ல செய்தி வரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவு கிடைக்கும். பண வரவுகளில் பிரச்சனை இருக்காது. யோக பலன் சிறப்பாக இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கவனமாக வேலை செய்ய வேண்டும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன்கள் நடைபெறும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: நீங்கள் போடுகின்ற திட்டங்கள் வெற்றியாகும். வியாபார முன்னேற்றத்திற்கு புதிய பாதை அமைப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: உங்களை குறை சொன்னால் மனம் சோர்ந்து விடுவீர்கள். வீட்டு பிரச்சனையை சிந்திப்பீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வரவு செலவு விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 2 உறவினர்களின் எண்ணத்தைப் புரிந்து நடக்க வேண்டும். 3 மேலதிகாரிகளின் மனதிற்கு பிடித்த மாதிரி நடக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்
ரிஷப ராசி அன்பர்களே! மிதமான பலன் நடக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் மாறும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை உண்டாகும். இழுபறியாக இருந்த விற்பனையில் மாற்றம் ஏற்படும். சில யோகமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழி பண வரவு வருவதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். தொழில்துறையிலிருந்து தடைகள் விலகும். தன வரவு அதிகரிக்கும். சீட்டு போடுவதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்ப்புகளை முறியடிப்பார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றி பெறுவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பதவி மேன்மை அடைவார்கள். இன்று உங்கள் பலம்: கூட இருந்தே தொந்தரவு செய்யும் நண்பர்களை அடையாளம் காண்பீர்கள். தொழிலை மேம்படுத்த திட்டம் போடுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: அடுத்தவர் பேச்சை அதிகமாக கேட்பீர்கள். அதிகமாக சிந்தித்து தூக்கத்தை இழப்பீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வரவுக்கு ஏற்ற வகையில் செலவு செய்வது முக்கியம். 2 பைனான்ஸ் விஷயத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது. 3 வேலை இடத்தில் கவனம் சிதறாமல் வேலையை பார்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.
மிதுன ராசி அன்பர்களே! சிறப்பான பலன்கள் அதிகரிக்கும் நாள். வேலை உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வீட்டிற்கு தேவையான காரியங்கள் நடக்கும். வருமானம் கை கூடி வரும். சேமிப்புகளை பக்குவமாக செய்வீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். சுப காரியம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். குழந்தைகளின் எதிர்கால விஷயங்களில் கவனம் அதிகரிக்கும். பண வரவு தக்க சமயத்தில் வந்து சேரும். வியாபாரத்தில் அதிக லாபம் உண்டாகும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலம் அடைவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்தியோக நன்மை பெறுவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு அடைவார்கள். இன்று உங்கள் பலம்: வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கு முக்கியமான செய்தி கிடைக்கும். வேலை காரணமாக இடம் மாற்றம் ஏற்படும். இன்று உங்கள் பலவீனம்: இனம் தெரியாத குழப்பம் உங்களை சங்கடப்படுத்தும். அவசரப்பட்டு பேசும் நிலை உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 இணையதள வர்த்தகத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2 அடுத்த வீட்டுக்காரரின் பிரச்சினையில் அதிகம் தலையிட வேண்டாம். 3 உடல் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.
கடக ராசி அன்பர்களே! எதிர்பார்த்த காரியம் நடக்கும் நாள் இன்று. வியாபாரத்தில் நல்ல லாபம் அதிகரிக்கும். தொழிலில் திடீர் மாற்றம் உண்டாகி வருமானம் பெருகும். வியாபார எதிர்ப்புகள் விலகிப் போகும். வங்கியில் செல்வநிலை உயரும். வேலை இடத்தில் உங்கள் தேவை அதிகரிக்கும். அரசு வேலையில் எதிர்பார்த்த நன்மை வந்து சேரும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளியூர் பயணங்கள் வெற்றி தரும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பான பலனை அடைவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருமான உயர்வு பெறுவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீட்டு தேவைகளை நிறைவேற்றுவார்கள். இன்று உங்கள் பலம்: தொழிலில் நீங்கள் நினைத்ததை செயல்படுத்துவீர்கள். பணவரவுக்கு தேவையான வழிகளை ஏற்படுத்துவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: சகோதரர்கள் வகையில் ஏதாவது ஒரு தொந்தரவு ஏற்படும். காரியம் உடனே நடக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அடுத்தவருக்கு உத்தரவாதம் கொடுப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2 குழந்தைகள் வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டும். 3 மோட்டார் சைக்கிள், கார் ஓட்டும்போது நிதானமாக செல்ல வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.
சிம்மராசி அன்பர்களே! யோகமான நிகழ்ச்சிகள் நடக்கும் நாள் இன்று. உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உயர்வு வந்து சேரும். பதவி மாற்றம் உண்டாகும். சம்பள அதிகரிப்பு ஏற்படும். வியாபாரத்தில் மிகச்சிறந்த லாபம் வந்து சேரும். வியாபாரத்திலிருந்து எதிர்ப்புகள் காணாமல் போகும். கண் திருஷ்டி சம்பந்தப்பட்ட பாதிப்பு விலகும். குலதெய்வத்தினுடைய அருள் கிட்டும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். கணவன் மனைவி உறவு கலகலப்பாக இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன வரவு உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலைப்பளு குறையும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கிய மேம்படும். இன்று உங்கள் பலம்: தொழிலை மேம்படுத்த நண்பரின் உதவி கிடைக்கும். பெரியோரின் ஆதரவு பக்க பலமாக இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: மனைவியின் அலட்சியத்தால் சங்கடம் உண்டாகும். அரசாங்க வகை செய்தி தாமதமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பணியாளர்களிடம் கோபத்தை வெளி காட்ட வேண்டாம். 2 திடீரென்று வரும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். 3 உறவினர்கள் விஷயத்தில் சற்று தள்ளியே இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
கன்னி ராசி அன்பர்களே! உயர்வான செய்திகள் கிடைக்கும் நாள். சொந்த ஊரில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய தொழில்நுட்ப செயல்களால் வியாபாரத்தை அதிகரிப்பீர்கள். முதலாளியிடம் ஏற்பட்ட மனக்கசப்பு மறைந்து போகும். வியாபாரத்திற்கான எதிர்ப்புகள் குறையும். பண வரவு போதுமான அளவுக்கு இருக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ப வருமானம் இருக்கும். நண்பர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனலாபம் பெறுவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சம்பள உயர்வு அடைவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர் பயணம் செல்வார்கள். இன்று உங்கள் பலம்: உங்கள் மீது வெறுப்பு காட்டியவர்கள் நண்பர்களாவார்கள். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: ஏதோ ஒரு காரணத்தால் மறதி அதிகமாகும். வெளியூர் பயணம் தாமதமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வங்கி நடவடிக்கையில் கவனமாக இருக்க வேண்டும். 2 அலுவலகத்தில் அலட்சியமாக நடந்து கொள்ளக் கூடாது. 3 பிள்ளைகளின் நடவடிக்கையை சற்று கண்காணிக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும் நாள். மனதளவில் புதிய சிந்தனைகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் தொழிலுக்கு பயனை கொண்டு வரும். தொழிலில் சிறப்பான லாபம் உண்டாகும். வியாபாரத்தில் வருமான உயர்வு கிடைக்கும். பண வரவு அதிகரித்து கையிருப்பு கூடும். வேலை இடத்தில் தேவையான பலனை அடைவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். இறைவன் அருளால் நல்லது நடக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு புதிய செய்திகள் கிடைக்கும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் தன தானிய சேர்க்கை உண்டாகும். இன்று உங்கள் பலம்: மன உறுதியோடு காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்திற்கு வேண்டிய பண உதவி கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: வேலை செய்யும் இடத்தில் உங்களை குறை கூறுவார்கள். மனச்சங்கடத்தால் இரவு தூக்கம் கெடும் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானமாக நடக்க வேண்டும். 2 ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். 3 கோபப்படாமல் அடுத்தவர் கருத்தை கேட்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
விருச்சிக ராசி அன்பர்களே! வியாபாரம் ஏற்ற இறக்கமாக நடக்கும். தொழில்துறையில் சில சிக்கல்கள் தோன்றும். வெளியிலிருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வியாபாரத்திற்கு சில தடைகள் இருக்கும். யோக பலன்கள் மிதமாக கிடைக்கும். தன தானிய சேர்க்கை உண்டாகும். வேலை இடத்தில் சில சிரமங்கள் வந்து பின்னர் தீரும். மேலதிகாரிகள் கோபமாக பேசுவது சங்கடத்தை தரும். குலதெய்வத்தின் அருளால் குறைகள் தீரும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு மிதமான பலன் ஏற்படும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் அவசர செலவுகள் கூடும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் அரசு காரியங்கள் தாமதமாகும். இன்று உங்கள் பலம்: தொழிலை எப்படி செய்ய வேண்டும் என்று திட்டம் போடுவீர்கள். வருமானத்தைப் பெருக்க சந்தர்ப்பம் கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை களைய வேண்டும். அதிக நேரம் வெளியில் செலவழிக்க கூடாது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 தன்னம்பிக்கையோடு தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும். 2 குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. 3 மனைவியின் பேச்சை காது கொடுத்து கேட்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன்.
தனுசு ராசி அன்பர்களே! சிறப்புகள் தேடி வரும் நாள். புதிய முயற்சிகளால் தொழிலில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் சில சாதகமான நன்மைகள் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பூர்வீக சொத்து தக்க சமயத்தில் வந்து சேரும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். கிழக்கு திசையில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு பொருள் வரவு அதிகரிக்கும். பூராட நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்புகள் வந்து சேரும். உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகள் நடக்கும். இன்று உங்கள் பலம்: சிந்தனைத் தெளிவோடு அலுவலகத்தில் வேலை பார்ப்பீர்கள். அரசு அதிகாரிகள் ஆதரவு உண்டு. இன்று உங்கள் பலவீனம்: தொழிலாளர் பிரச்சினை மனதை சங்கடப்படுத்தும். முக்கிய நபரை சந்திக்க முடியாத நிலை ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக இருக்க வேண்டும். 2 இணைய மோசடிகளில் சிக்கி விடக்கூடாது. 3 தேவையில்லாத செலவுகளை குறைக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி
மகர ராசி அன்பர்களே! அரசு வேலைகள் உடனே நடக்கும் நாள். தொழிலில் அதிகமான லாபம் கிட்டும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் குவியும். வெளிவட்டார மதிப்பு உயரும். குலதெய்வத்தில் அருள் பரிபூரணமாக இருக்கும். பதவி மாற்றம் உண்டாகும். சம்பளம் அதிகரிக்க சந்தர்ப்பம் உண்டாகும். இடம் மாறுதலும் ஏற்படலாம். தனலாப விருத்தி உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் பொருள் வரவு அதிகரிக்கும். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் வாகன யோகம் அடைவார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வியாபார வெற்றி பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களின் உதவி தாராளமாக கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: திடீர் செலவுகள் ஏற்பட்டு கையை கடிக்கும். நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 உறவினர்கள் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2 வியாபாரத்தில் கவனக்குறைவாக நடக்கக்கூடாது. 3 மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்
கும்ப ராசி அன்பர்களே! வெற்றிகரமான தகவல்கள் கிடைக்கும் நாள். வெளியூர் பயணங்களுக்கு வாய்ப்பு உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் வருமானம் அதிகரிக்கும். தாராளமான பண வரவு உண்டாகும். வேலை இடத்தில் பிரச்சனைகள் மறையும். விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். கிழக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு பொருள் வரவு அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு தன தானிய சேர்க்கை ஏற்படும். இன்று உங்கள் பலம்: உழைப்பை போடுவோம் வருவது வரட்டும் என்ற உறுதியான மனம். உறவினர்களின் அனுசரணையான போக்கு. இன்று உங்கள் பலவீனம்: உணர்ச்சிவசப்பட்டு நிதானம் இழந்து பேசுகின்ற குணம். அடுத்தவரின் எண்ணத்தை புரிந்து கொள்ளாமல் நடப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 மேலதிகாரிகளின் பேச்சுக்கு எதிராக நடக்கக்கூடாது. 2 குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிட வேண்டும். 3 பணத்தை கையாளுவதில் நிதானம் தேவை. அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.
மீன ராசி அன்பர்களே! சிறப்பான காரியங்கள் நடக்கும் நாள். திடீர் செலவுகள் வந்து சேரும். குடும்பச் செலவுக்கு நண்பரின் உதவியை நாடும் நிலை உண்டாகும். தொழில் மேன்மையாக நடக்கும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் சமூகமாக நடக்கும். வீட்டில் மனைவியின் போக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் சம்பந்தப்பட்ட வெளியூர் பயணம் ஏற்படும் . உறவினர்களின் ஆதரவு சாதகமாக அமையும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு காரியத்தடை அகலும் . உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வருமானம் அதிகரிக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உதவிகள் வந்து சேரும். இன்று உங்கள் பலம்: எதிர்ப்புகளைத் தாண்டி தொழிலில் வெற்றி பெறும் உறுதி. எந்த காரியத்தையும் திட்டமிட்டு செய்வீர்கள். இன்று உங்கள் பலவீனம்: உறவுகளால் ஏற்படும் சில பிரச்சனைகள். எதிர்பார்த்த காரியம் தள்ளிப் போவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பங்குச்சந்தையில் அலட்சியம் காட்டக்கூடாது. 2 வேலை இடத்தில் தேவையில்லாததை பேசக்கூடாது. 3 வெளியூர் பயணங்களில் அவசரம் கூடாது . அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.
இன்றைய பஞ்சாங்கம் தேதி 24 – புரட்டாசி – பராபவ வருடம் ஞாயிறு நாள் ஞாயிறு திதி பிரதமை (up to 9:31 pm) துவிதியை (up to October 12, 10:13 pm) நட்சத்திரம் சித்திரை (up to 10:32 pm) ஸ்வாதி (up to October 12,11:52 pm) யோகம் சித்த யோகம் நல்ல நேரம் 10:45 – 11:45 am / 3:15 – 4:15 pm கௌரி நல்ல நேரம் 10:45 – 11.45 am / 1:30 – 2:30 am இராகு காலம் மதியம்ா 4.30 – 6.00 எமகண்டம் மதியம் 12.00 – 1.30 குளிகை மதியம் 3.00 – 4.30 சூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் சந்திராஷ்டமம் பூரட்டாதி, உத்திரட்டாதி சூரியோதயம் 6:02 AM சூரிய அஸ்தமனம் 5:48 PM சந்திரோதயம் Oct 11 6:18 AM சந்திர அஸ்தமனம் Oct 11 6:13 PM



