கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில், லொறியுடன் பஸ் மோதிய கோர விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.செய்திகளைப் படி
தான்சானியாவின் டர் எஸ் சலாம் (Dar es Salaam) நகரிலிருந்து எம்பெயா (Mbeya) நகரை நோக்கி இன்று (10) அதிகாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்தப் பஸ்ஸில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
மொரோகொரோ – டர் எஸ் சலாம் தேசிய நெடுஞ்சாலையில், எம்பரானி பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த லொறியுடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தைத் தொடர்ந்து பஸ் தீப்பற்றி எரிந்ததில், அதில் பயணித்த 28 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



