மருத்துவத்திற்கான நோபல் பரிசினை (2026) காரல் டைசெரோத், பீட்டர் ஹெகமன், ஜார்ஜ் நாகல் ஆகிய மூவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூளை ஆராய்ச்சித் துறையின் ஒளியியல் மரபணுவியல் கண்டுபிடிப்புக்காக 54 வயதுடைய அமெரிக்கரான காரல் டைசெரோத் மற்றும் 71 வயது ஜெர்மனியரான பீட்டர் ஹெகேமேன், 73 வயதுடைய ஜெர்மனியரான ஜோர்ஜ் நாகல் ஆகியோர் ஸ்வீடனின் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோபல் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
துறையின் ஒளியியல் மரபணுவியல் என்பது வாழும் மூளையில் உள்ள தனிப்பட்ட நரம்பு செல்களின் செயற்பாட்டை இயக்க அல்லது முடக்க சாத்தியமாக்குகிறது. இக்கண்டுபிடிப்பினால் உலகெங்கிலும் உள்ள ஆய்வகங்களில் மூளையின் இரகசியங்களை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருவதாக விருது வழங்குபவர்கள் தெரிவித்துள்ளனர்.
நோபல் பரிசு என்பது உலகளவில் அறிவியலாளர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளியல் ஆகிய 6 துறைகளில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை ஒவ்வொரு துறைக்குமான வெற்றியாளர்களின் பெயரை வெளியிடவுள்ளன.
மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று திங்கட்கிழமை (5) அறிவிக்கப்பட்ட நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளையும், வேதியியலுக்கான நோபல் பரிசு நாளை மறுநாளும் அதேபோல ஒக்டோபர் 8ஆம் திகதி இலக்கியத்துக்கும், ஒக்டோபர் 9ஆம் திகதி அமைதிக்கும், ஒக்டோபர் 12ஆம் திகதி பொருளாதாரத்துக்கும் என நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ளன.



