மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- 30-செப். 2026

 

மேஷ ராசி அன்பர்களே! மகிழ்ச்சியான செய்தி தேடி வரும் நாள். அனுகூலமான நன்மைகள் நடக்கும். நீங்கள் எதிர்பார்த்த பலன் வியாபாரத்தில் கிடைக்கும். லாபம் பெருகும். வாகன யோகம் உண்டாகும். சேம லாபங்கள் கூடும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். இடம் வாங்கி விற்கும் தொழிலில் லாபம் கிட்டும். இறைவன் அருளால் மகிழ்ச்சியும் இன்பமும் குடும்பத்தில் நிலவும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றி பயணம் அமையும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்

இன்று உங்கள் பலம்:

உங்கள் முடிவெடுக்கும் திறனால் வியாபாரத்தை வழிநடத்துவீர்கள். வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு உதவி தேடி வரும்.

இன்று உங்கள் பலவீனம்:

மன அழுத்தம் காரணமாக வேலை பாதிப்பு அடைவீர்கள். எதிர்பார்த்த வேலைகளில் சில இடையூறு உண்டாகும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1. வரவுக்கு ஏற்ற செலவு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

2. சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்வது நல்லது.

3. வீட்டு தேவைகளை கவனிக்க தவறக் கூடாது.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல்

வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்

ரிஷப ராசி அன்பர்களே! நல்ல காரியங்கள் தேடி வரும் நாள். மனதில் நினைத்திருந்த காரியங்கள் வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். தொழிலில் மூலதனத்தை அதிகரிப்பீர்கள். உங்கள் வளர்ச்சியை கண்டு உறவினர்கள் வியந்து பார்ப்பார்கள். வடக்கு திசையில் இருந்து ஆதாய அனுகூலங்கள் கிடைக்கும். சேமலாபங்கள் கூடும். மனநிம்மதி ஏற்பட்டு குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலையில் சிறப்பு அடைவார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழிலில் லாபம் பெறுவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உயர்வு உண்டாகும். இன்று உங்கள் பலம்: திட்டமிட்டு துணிவாக காரியம் செய்வது உங்களுடைய பலம். எந்த நேரத்தில் யாரிடம் உதவி பெறுவது என்பதில் சரியாக இருப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: தவறு செய்வது தெரிந்தும் நண்பரை கண்டிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். உறவுகளை இணைப்பதற்கு விட்டுக் கொடுப்பீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வீடு நிலம் வாங்குவதில் பத்திரங்களை சரிபார்க்க வேண்டும். 2 வேலை இடத்தில் சோம்பேறித்தனம் காட்டக்கூடாது. 3 வரவு செலவு கணக்குகளை எழுதி வைக்க மறக்க கூடாது. அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகர் பெருமான்.

மிதுன ராசி அன்பர்களே! மனநிம்மதி கிடைக்கும் நாள் இன்று. வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். ஆதாயம் கூடி வருமானம் பெருகும். தொழில்துறையில் புதிய முறையை கையாண்டதால் வருமானம் பெருகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். தன லாபங்கள் அதிகரிக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு சந்தோஷத்தை கொடுக்கும். அரசாங்க அனுகூலம் வந்து சேரும். ஊரில் செல்வாக்கு அதிகரிக்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை அடைவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய சித்தி பெறுவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையாக உழைப்பார்கள். இன்று உங்கள் பலம்: மன தைரியத்தோடு எந்த காரியத்திலும் இறங்குவீர்கள். எப்படியாவது உதவிகளை கொண்டு வருவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: மனைவியை சமாதானப்படுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். பிள்ளைகளின் போக்கை கண்டிக்க இல்லாமல் தவிப்பீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது நல்லதல்ல. 2 உறவினரிடம் கடுமையான வார்த்தையை பயன்படுத்துவது நல்லதல்ல. 3 யோசிக்காமல் செலவு செய்வதும் நல்லதல்ல. அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.

கடக ராசி அன்பர்களே! ஏற்ற தாழ்வுகள் இருக்கும் நாள். வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பணப்பிரச்சனை இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் சின்ன சிக்கல் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியூர் பயணத்தில் ஒழுங்காக சாப்பிட வேண்டும். புராண இதிகாசங்களில் அதிக ஆர்வம் ஏற்படும். தர்ம சிந்தனைகள் அதிகரித்து கோயிலுக்கு தானம் கொடுப்பீர்கள். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடுமையாக உழைப்பார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கையிருப்பு அதிகரிப்பார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வபெருமை அடைவார்கள். இன்று உங்கள் பலம்: எவ்வளவு இடையூறு வந்தாலும் மன உறுதியோடு இருப்பீர்கள். உங்களின் குலதெய்வ நம்பிக்கை கூடுதல் பலம் தரும். இன்று உங்கள் பலவீனம்: இதை ஏன் செய்தோம் என்று மனம் சங்கட்டப்படுவீர்கள். புதிய நண்பரை நம்புவதா வேண்டாமா என்று திணறுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பண வரவு செலவுகளில் அலட்சியம் கூடாது. 2 நேரம் தவறாமல் வேலைக்கு செல்ல வேண்டும் 3 மற்றவர்கள் உங்கள் பிரச்சினையில் தலையிடுவதை அனுமதிக்க கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.

சிம்ம ராசி அன்பர்களே! இன்று உங்கள் வீட்டில் திருமகள் வாசம் செய்வாள். மனத்திண்மையுடன் காரியம் செய்வீர்கள். எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பீர்கள். தொழிலில் நீங்கள் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் பெருகி செல்வம் குவியும். வாகன யோகமும் உங்களுக்கு உண்டு. விவசாய வருமானமும் கை கொடுக்கும். அரசு வேலையில் நல்ல பெயர் எடுப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மரியாதை அடைவார்கள்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழிலை விருத்தி செய்வார்கள்.

இன்று உங்கள் பலம்:

தொழில் போட்டிகளை அடையாளம் கண்டு அதை சாமர்த்தியமாக நீக்குவீர்கள். எந்த நேரத்திலும் எதையும் சமாளிக்கும் திறன் உண்டு.

இன்று உங்கள் பலவீனம்:

மன சிதைவு காரணமாக வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகும். உறவுகளில் சிலர் உங்களுக்கு எதிராக இருப்பார்கள்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.

2 கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

3 ஆன்லைன் போட்டிகளில் ஈடுபடுவது தவறு.

அதிர்ஷ்ட எண்: 1,6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு.

வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.

கன்னி ராசி அன்பர்களே! இனிப்பான செய்திகள் உங்களுக்கு வரும் நாள். தனலாபங்கள் அதிகரிக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் நடக்கும். மக்கள் பேறு உண்டாகும். தொழிலில் மேன்மை கிடைக்கும். மகிழத்தக்க நாளாக அமையும். சுற்றத்தார் உறவு பலமாக இருக்கும். தீர்த்த யாத்திரை வாய்ப்பு ஏற்படும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன உறுதி அடைவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செல்வம் பெருகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலம் அடைவார்கள். இன்று உங்கள் பலம்: அரசு அதிகாரத்தில் உள்ள நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். நண்பரிடம் இருந்து தக்க சமயத்தில் பண உதவி கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: நல்லது செய்தாலும் உறவினர்கள் உங்களை தவறாக நினைப்பார்கள். மற்றவர்கள் வேலையும் நீங்கள் சேர்த்து பார்ப்பீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 எடுத்த இடத்தில் மீண்டும் பொருளை வைப்பது நல்லது. 2 என்ன செலவாக இருந்தாலும் அதை குறித்து வைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். 3 மனைவி என்ன சொன்னார் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! நல்ல செய்தி வரும் நாள். தன லாபங்கள் அதிகம் உண்டாகும். வியாபாரத்தில் நீங்கள் நினைத்த வெற்றி கிடைக்கும். தொழில் துறைகள் சிறப்பாக இருக்கும். தேக ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும். குடும்பத்தில் உற்சாகம் பெருகும். சிவ பூஜைகள் தான தர்மங்கள் செய்யும் வாய்ப்பு உண்டாகும். அரசு அதிகாரிகளால் பயன் கிடைக்கும். ஞான யோகம் உங்களுக்கு சேரும். திறமையால் புகழும் பெயரும் உண்டாகும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு வேண்டியது கிடைக்கும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு நல்லது நடக்கும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்குப் பெருகும். இன்று உங்கள் பலம்: ஊருக்குள் உங்கள் பலமும் செல்வாக்கு அதிகரிக்கும். பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: சிலருக்கு நீங்கள் பேசினாலே கசப்பாக இருக்கும். வியாபாரத்தை கெடுக்க மறைமுக வேலை செய்வார்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அரசு வேலையில் அலட்சியமாக நடப்பது நல்லதல்ல. 2 தேக ஆரோக்கியத்தில் கவனம் கண்டிப்பாக செலுத்த வேண்டும். 3 இரவு நேர பயணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.

விருச்சிக ராசி அன்பர்களே! சிறப்புகளை அனுபவிக்கும் நாள். தன தானிய லாபங்கள் உண்டாகும். உயர்ந்த பதவிக்கு வரும் வாய்ப்பு ஏற்படும். கட்சியில் புதிய பொறுப்பு கிடைக்கும். சயன யோகம் ஏற்படும். ஆடை ஆபரணங்கள் வாங்குகின்ற யோகம் உண்டாகும். தொழிலில் நீங்கள் நினைத்த இடத்தை அடையும் வாய்ப்பு ஏற்படும். நண்பர்களால் உங்களுக்கு மன மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசுத் துறையில் அனுகூலங்கள் நடக்கும்.

விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்புகள் கூடும்.

அனுஷம் நட்சத்திரக்காரர்கள் சம்பளம் அதிகரிக்கும்.

கேட்டை நட்சத்திரக்காரர்கள் வாகனம் வாங்குவார்கள்.

இன்று உங்கள் பலம்:

எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பாராத வகையில் நடக்கும். உங்களுக்கு உதவி செய்ய நண்பர்களும் உறவினர்களும் விரும்புவார்கள்.

இன்று உங்கள் பலவீனம்:

ஒருவரிடம் ஒன்றை பேச வேண்டும் நினைப்பீர்கள் ஆனால் மறந்து விடுவீர்கள். சில நேரங்களில் நிதானம் தவறுவீர்கள்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 கணக்கு வழக்கு விவகாரங்களில் அலட்சியம் காட்டக்கூடாது.

2 பணம் கொடுக்கல் வாங்கலில் தாட்சண்யம் பார்க்க கூடாது.

3 அரசு ஆவணங்களை முறையாக கையாள வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 8,5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை.

வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன்.

தனுசு ராசி அன்பர்களே! அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும் நாள். புதிய திட்டங்களுக்கு அடி போடுவீர்கள். தொழில் முயற்சிகள் நிறைவேறும். பிள்ளைச் செல்வம் உண்டாகும். துணிவாக தொழிலில் இறங்குவார்கள். தைரியத்தினால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். பொருள் வரவு அதிகரித்து பணம் தாராளமாக கையில் புரளும். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வீர்கள். புத்தி கூர்மையால் காரியம் சாதிப்பீர்கள். அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்பட வாய்ப்புள்ளது. மூல நட்சத்திரக்காரர்களுக்கு காரியம் வெற்றியாகும். பூராட நட்சத்திரக்காரர்கள் நினைத்ததை அடைவார்கள். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் மன நிம்மதி பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: எந்த வேலையிலும் மன உறுதியை கைவிடாமல் இருப்பீர்கள். இறுக்கமான நட்பு உங்களுக்கு துணையாகும். இன்று உங்கள் பலவீனம்: குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் தடங்கல் ஏற்படலாம். மனைவியின் செயலால் சில பிரச்சனைகள் உண்டாகலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 இணையதள ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்யக்கூடாது. 2 அந்நிய பெண்களிடம் ரொம்ப நெருக்கமாக பழகுவது நல்லது அல்ல. 3 வேலை பார்க்கும் இடத்தில் சோம்பேறித்தனம் கூடாது. அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி.
மகர ராசி அன்பர்களே! சிறப்புகள் வந்து உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் நாள். பண வரவு தாராளமாக இருக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். நினைத்த காரியத்தை நடத்துவீர்கள். வாகன யோகம் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். லாபம் அதிகரிக்கும். வங்கி இருப்பு உயரும். தென் திசையில் இருந்து முக்கிய செய்தி வரும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு அதிகரிக்கும். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் அனுகூலம் அடைவார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வாகனம் வாங்குவார்கள். இன்று உங்கள் பலம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து தாராளமாக பண உதவி வரும். தொழில் வளர்ச்சிக்கு சரியான திட்டம் வகுப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: அரசு அலுவலகத்தில் ஒத்துழைப்பு கிடைக்காது. மேலதிகாரிகள் குற்றச்சாட்டு சங்கடப்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வங்கியில் இருந்த பணம் எடுத்து வரும்போது கவனமாக இருக்க வேண்டும். 2 வியாபார கணக்கு வழக்குகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. 3 அடுத்த வீட்டு விஷயத்தில் மூக்கை நீட்டக் கூடாது. அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.

கும்ப ராசி அன்பர்களே! நினைத்ததெல்லாம் நடக்கும் நாள். வாழ்க்கையில் இருந்த சிரமம் விலகும். தொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். பூமியோகம் உண்டாகும். கால்நடை வாங்குகின்ற வாய்ப்பு ஏற்படும். சொத்து வளம் அதிகரிக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குலதெய்வத்தினுடைய அனுக்கிரகம் கிடைக்கும். மேற்கு திசையிலிருந்து நல்ல செய்தி வரும். மற்றவர்கள் பாராட்டுவார்கள் .குடும்ப சுகம் கிட்டும்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றி உண்டாகும்.

சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வாகன யோகம் உண்டாகும்.

இன்று உங்கள் பலம்:

ஊரார் மத்தியில் உங்களுக்கு மரியாதை உண்டு. நினைத்த காரியத்தை நிறைவேற்ற கடுமையாக பாடுபடுவீர்கள் ‌

இன்று உங்கள் பலவீனம்:

மனைவி சில நேரங்களில் ஏட்டிக்கு போட்டியாக நடப்பார். அவசரமாக வரவேண்டிய இடத்தில் இருந்து பணம் தாமதமாகும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 வேலை இடத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது

2 மோக வலை வீசும் பெண்களிடம் எச்சரிக்கை தேவை.

3 வாகனம் ஓட்டும் போது போன் பேச கூடாது.

அதிர்ஷ்ட எண்: 8,3

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள்.

வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.

மீன ராசி அன்பர்களே! மனதிற்கு மகிழ்ச்சி தரும் நாள். கல்வித் திறமையால் புகழ் அடைவீர்கள். பொருளாதார லாபங்கள் அதிகரிக்கும். தீர்த்த யாத்திரைக்கு செல்வீர்கள். இழந்த பொருட்கள் மீண்டும் வந்து சேரும். தொழிலில் வியக்கத்தக்க வகையில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தை புதிய முறையில் நடத்துவதால் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். கண்திருஷ்டி பில்லி சூனியம் போன்ற பாதிப்புகள் விலகும். மற்றவர்கள் உங்களைப் பார்த்து வியந்து நிற்பார்கள்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தன லாபம் அடைவார்கள்.

ரேவதி நட்சத்திரக்காரர்கள் மதிப்பு உயரும்.

இன்று உங்கள் பலம்:

வருமானம் பெருகி மன தைரியம் கூடும். ஊழியர்கள் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும்.

இன்று உங்கள் பலவீனம்:

விருப்பம் இல்லாமலேயே உறவினர் வீட்டு விஷயத்தில் தலையிட வேண்டி வரும். எதிர்பார்த்த நல்ல செய்தி வர தாமதமாகும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 விலை உயர்ந்த பொருட்களை அலட்சியமாக வைக்கக் கூடாது

2 உங்களின் வங்கி பாஸ்வேர்டை யாருக்கும் சொல்ல வேண்டாம்.

3 வியாபார ரகசியங்களை வெளியில் கூற வேண்டாம்.

அதிர்ஷ்ட எண்: 8,5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்.

வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.

இன்றைய பஞ்சாங்கம் தேதி 13 – புரட்டாசி – பராபவ வருடம்

புதன் நாள் புதன் திதி சதுர்த்தி (up to 2:55 pm) பஞ்சமி (up to October 01, 12:35 pm) நட்சத்திரம் பரணி (up to 7:36 am) கார்த்திகை (up to October 01,6:02 am) யோகம் சித்த-அமிர்த யோகம் நல்ல நேரம் 9:15 – 10:15 am / 4:45 – 5:45 pm கௌரி நல்ல நேரம் 10:45 – 11:45 am / 6:30 – 7:30 pm இராகு காலம் மதியம் 12.00 – 1.30 எமகண்டம் காலை 7.30 – 9.00 குளிகை காலை 10.30 – 12.00 சூலம் வடக்கு பரிகாரம் பால் சந்திராஷ்டமம் சித்திரை சூரியோதயம் 6:01 AM சூரிய அஸ்தமனம் 5:56 PM சந்திரோதயம் Sep 30 8:48 PM சந்திர அஸ்தமனம் Oct 01 10:10 AM