நிறுவனங்களின் செய்தியாளர் அனுமதி அட்டைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செப்டம்பர் 18-ம் தேதி ரத்து செய்திருந்தார். இதற்கு எதிராக 3 நிறுவனங்களும் கடந்த திங்கட்கிழமை வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கூட்டாட்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன.
தமது நிர்வாகத்தை பற்றிய இம்மூன்று ஊடகங்களின் செய்திகள் “பொய்யானவை, எதிர்மறையானவை” என்று சமூக ஊடகத்தில் தெரிவித்திருந்த ட்ரம்ப், அதனடிப்படையில் இத்தடையை விதித்திருந்தார். ஆனால் நீதிமன்றத்தில், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகவே இத்தடை விதிக்கப்பட்ட தாக நீதித்துறை அமைச்சக வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இந்நிலையில், அரசு தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதி டிம் கெல்லி, 3 ஊடக நிறுவனங்களின் வெள்ளை மாளிகை தடைக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், அனுமதி அட்டைகள் ரத்து செய்யப்படுவதற்கு முன்னர் முறையான அறிவிப்போ, விளக்கமளிக்க வாய்ப்போ வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார். தேசிய பாதுகாப்பு குறித்த அரசின் வாதத்தில் ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார். நீதிபதி டிம் கெல்லியை ட்ரம்ப் தான் தனது முதல் பதவிக்காலத்தில் 2017-ல் நீதிபதியாக நியமித்திருந்தார்.
மூன்று ஊடக நிறுவனங்களின் அனுமதி அட்டைகளையும் உடனடியாக மீண்டும் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு தொடர்ந்து நடைபெறும் வரை, 14 நாட்களுக்கு இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும். ராய்ட்டர்ஸ், வாஷிங்டன் போஸ்ட், ஃபாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட பல ஊடக நிறுவனங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தன. நவம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் இந்த வழக்கு நடைபெறுகிறது.



