மீண்டும் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் ஓட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் அதிரவைக்கும் வகையில் வடகொரியா அதிபயங்கர க்ரூஸ் ஏவுகணை, வெற்றிகரமாக நடத்தியுள்ளது. தென்கொரிய எல்லையில் சமீபத்தில் நிகழ்ந்த கண்ணிவெடி விபத்தில் மூன்று தென்கொரிய வீரர்கள் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து.இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பதற்றம் அடைந்த சூழ்நிலையில் கிம் ஜாங் உன் தலைமையிலான வடகொரிய ராணுவம் இந்த அடுத்தடுத்த அதிரடி சோதனைகளை அரங்கேற்றியுள்ளது.
எதிரிகள் இலக்குகளை குறிபார்த்து நொடி பொழிதில் சாம்பலாக்கும் அதிநவீன ஆயுதங்களை ஏவுகணையில் பொருத்தி வடகோரிய பரிசோதித்து இருப்பது உலக நாடுகளை பாதித்துள்ளது.இந்த க்ரூஸ் ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ள குண்டுகள் சுமார் 5 முதல் 6 ஹெக்டர் பரபளவை ஓட்டுமொத்தமாக சுட்டெரித்து வெறும் சாம்பல் மேடாக மாற்றும் அதிநவீன சக்தி கொண்டவை என்று வடகொரியாவின் அதிகாரப்பூர்வ அரசு ஊடகம் எச்சரித்து உள்ளது.
குறிப்பிட்ட நிலப்பரப்பின் புவியில் அமைப்புகளின் ஈர்க்க பாதையை மாற்றி, வானிலிருந்து செங்குத்தாக பாய்ந்து எதிரிகளின் ராணுவ இலக்குக்களை துல்லியமாக தாக்கும் நவீன தொழில்நுட்பம் இதில்
வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஏவுகணை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு அச்சுறுத்தல்களை அடியோடும் முறியடித்து தங்களது தேசிய பாதுகாப்பை கூட்டணியாக மாற்றவே இத்தகைய அதிபயங்கர ஆயுதங்களை தாங்கள் தொடர்ந்து சோதித்து வருவதாகவும் அந்நாடு வெளிப்படையாகவே நியாயப்படுத்தி உள்ளது.
சமீபகாலமாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், மற்றும் இலக்குகளை தாக்கும் நீர்முழ்கி, டார்பிடோகள் என பல நவீன ஆயுதங்களை வடகொரிய தொடர்ந்து களம் இறக்கிவருகிறது. வழக்கமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் போல க்ரூஸ் ஏவுகணை சோதனைகளுக்கு ஐக்கிய நாடுகளில் சபையின் நேரடி தடைகள் இல்லாத ஓட்டையை வடகொரியா தனக்கு சாதகமாக பயன்ப்படுத்தி வருகிறது.
இந்த ஏவுகணை ஏவுதல் தொடர்பாக தென்கொரிய ராணுவம்,அமெரிக்கா கூட்டுப்படைகளும் தீவிர உளவு தகவல்களை சேகரித்து கால நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர். சர்வதேச அரசியல் சூழல் பதற்றமாக இருக்கும் இந்த வேளையில் அஞ்சமாட்டோம் என்பதே உலகிற்கு மீண்டும் பரிசு அற்றவே வடகொரியா இந்த தீவிர ஏவுகணை பலப்பரீட்சை தீவிரப்படுத்தியுள்ளது.அரசியல் செய்திகள்



