கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களால் உருவான ராஜதந்திரப் முரண்பாட்டை தொடர்ந்து, கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவும் டென்மார்க்கும் அறிவித்துள்ளன.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு “பாதுகாப்பு மற்றும் அனைத்துத் தேவைகள் மீதும் நிரந்தரக் கட்டுப்பாட்டை” வழங்கும் என்று டிரம்ப் கூறினார்.
டென்மார்க் பிரதமர் கூறுகையில், இந்த ஒப்பந்தம் ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
இருப்பினும், டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட விவரங்கள் குறித்து அவர் எதுவும் பேசவில்லை



