இந்தியா டெல்லியில் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூன்று பேர் சிறுவர்கள் என கூறப்படுகின்றமை மேலும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,
செப்டம்பர் 13-ஆம் தேதி வடமேற்கு தில்லி ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றவாளிகளும் முன்பே அறிமுகமானவர்கள் என்பதும், அவர்கள் ஒரு டெம்போவில் பயணித்தபோது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி மது அருந்த செய்து வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கத்திகளால் குத்திக் கொல்லப்பட்ட பிறகு உடல் அங்கு வீசப்பட்டுள்ளது. நாய்கள் உடலை சேதப்படுத்தியிருந்ததால் ஆரம்பத்தில் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.
குடும்பத்தினர் புகாரளிக்காத நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து நூதன முறையில் துப்பு துலக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆராய்ந்து டெம்போவை கண்டறிந்த காவல் துறையினர், தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு முக்கியக் குற்றவாளி மற்றும் மூன்று சிறார்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொலை செய்யப்பட்டு வீசி எறிந்த உடலை நாய்கள் தின்ற கொடூர சம்பவம் நடுங்க்க வைத்துள்ளது.



