U;S_ ல் வசிக்​கும் இந்துக்கள் விநாயகர் சதுர்த்தியைபொது இடங்களில் கொண்​டாட வேண்​டாம்அறிவுரை

 

அமெரிக்கா​​வில் வசிக்​கும் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்​டாட வேண்​டாம். அவர​வர் வீடு​களில் விநாயகர் சதுர்த்தியை கொண்​டாடுங்​கள் என்று பல்​வேறு இந்து அமைப்​பு​கள் அறி​வுறுத்தி உள்​ளன.

அமெரிக்கா​வில் சுமார் 55 லட்​சம் இந்​தி​யர்​கள் வசிக்​கின்​றனர். கலி​போர்​னி​யா, டெக்​சாஸ், நியூஜெர்​ஸி, நியூ​யார்க், புளோரிடா உள்​ளிட்ட பல்​வேறு மாகாணங்​களில் இந்​தி​யர்​கள் மீதான இனவெறி தாக்​குதல் அதி​கரித்து வரு​கிறது.

ஒவ்​வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்​தி​யின்​போது அமெரிக்காவில் வசிக்​கும் இந்​துக்​கள் பொது இடங்​களில் ஒன்றுகூடி பிரம்மாண்​ட​மாக விழாவை கொண்​டாடு​வது வழக்​கம்.

ஆனால் அமெரிக்​கா​வின் தற்​போதைய சூழலைக் கருத்​தில் கொண்டு பல்வேறு இந்து அமைப்​பு​கள் சமூக வலை​தளங்​கள் வாயி​லாக இந்துக்​களுக்கு முக்​கிய அறி​வுரைகளை வழங்கி வருகின்​றன.

அந்த அமைப்​பு​கள் வெளி​யிட்ட சமூக வலைதள பதி​வில் கூறியிருப்​ப​தாவது: அமெரிக்​கா​வில் வசிக்​கும் இந்​துக்​கள் அனை​வரும் அவர​வர் வீடு​களில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்​டு​கிறோம். குடி​யிருப்​பு​கள், காலனிகள், சாலைகள், தெருக்​கள், பொது இடங்​களில் விழாவைக் கொண்டாட வேண்டாம். இவ்​வாறு இந்து அமைப்​பு​கள் அறிவுறுத்தி உள்​ளன.