நெல்லையில் 12-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு சிறை தண்டனையும் விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யார் மாவட்டச் செயலாளராக வந்தாலும் சரி..
நாங்கள் வந்து உங்களுக்காக நிற்போம்.. அன்பில் மகேஷ் உறுதி! ஸ்டாலின், உதயநிதி திமுகவை விட்டு வெளியேற வேண்டும்.. அமைச்சர் நிர்மல்குமார் இறங்கி வந்துட்டாரு எடப்பாடி.. ஒன்று சேரும் ரத்தத்தின் ரத்தங்கள்! மீண்டும் பலம் பெறும் அதிமுக! பரபர! 2022-ம் ஆண்டு நெல்லையில் உள்ள பள்ளியில் பெயிண்டிங் வேலைக்காக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த முனீஸ்வரன் சென்றுள்ளார். அப்போது அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பிக் பாஸ் 10 நிகழ்ச்சிக்கு தேர்வான 19 போட்டியாளர்கள் இவர்கள்தான்! காமன்மேன் முதல் செலிபிரட்டீஸ் வரை முழு லிஸ்ட் எடப்பாடி கூட்டத்திற்கு ஆப்சென்ட்.. ஈரோட்டில் அதிமுக நிர்வாகி நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்பி வேலுமணி! வங்கி கணக்கில் வரப்போகும் ரூ.3,000.. விஜய் அனுப்பும் மாத தொகை.. யாருக்கெல்லாம் வரும் தெரியுமா?
அப்போது அங்கு சென்ற கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்த சின்னகுட்டி மற்றும் முருகேசன் ஆகிய 2 பேரும் மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முனீஸ்வரன், சின்னகுட்டி, முருகேசன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி சுரேஷ்குமார் அறிவித்தார். இதையடுத்து தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. வழக்கில் கைதான சின்னகுட்டிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார். மேலும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சின்னகுட்டி மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் வெவ்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் 10 பேருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளதாகவும் குறிப்பிடத்தக்கது.



