இஸ்ரேல் லெபனானில் குண்டுமழை 9 பேர் பலி

 

தெற்கு லெபனானில் உள்ள கஃபார் ரும்மான் கிராமத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை நேற்று அதிகாலை குண்டு மழை பொழிந்தது. ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலில், ஒரு குழந்தை மற்றும் இரு பெண்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து,

அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த ஒரு காரின் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் மருத்துவப் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா ஆயுதக் குழுவினருக்கு இடையே எல்லையில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.