கர்ப்பிணிப் பெண்ணும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழப்பு -கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு

 

புத்தளம் – கற்பிட்டி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாலக்குடா பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் நேற்று முன்தினம்(03) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலக்குடாவை வசிப்பிடமாகக் கொண்ட பாதிக்கப்பட்ட பெண், தாக்குதலில் பலத்த காயமடைந்து கற்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தனது வயிற்றில் இருந்த சிசுவுடன் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழப்பு
குறித்த பெண் தனது கணவரைப் பிரிந்து சந்தேகநபருடன் வசித்து வந்ததாகவும், நீண்டகாலமாக குடும்பத்தில் ஏற்பட்ட முறுகலே இந்த தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் நடந்து 45 நிமிடங்களுக்குள் 36 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஐஸ் (ICE) போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கற்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.