சுவிசில் ஓவ்வூதியம் எடுத்துக் கொண்டு இலங்கை போனவர்களுக்கு

 

இலங்கை போனவர்களுக்கு அரைவாசி பணமே கிடைப்பதாக சொல்கிறார்கள்.

இவ்வளவு காலமும் வெளிவராமல் இருந்த பிரச்சனை

இப்போதாவது வெளிவந்தது சந்தோசம்.

நீங்களும் இலங்கைப் புத்தகமா?

ஆம் என்றால் நீங்களும் பாதிக்கப்பட்டிருப்பீர்கள்.

வெகுவிலைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு வரும் என்கிறார்கள்.

இதுபற்றி நீங்கள் அறிந்தது என்ன?

இவற்றை கொஞ்சம் விளக்கமாக எழுத முடியுமா?

வெகுவிரைவில் மற்றைய நாட்டவர்கள் போல இவர்களுக்கும்

முழு ஓய்வூதிய பணம் கிடைக்க வேண்டுகிறேன்.

இவ்வளவு காலமும் இப்படி அரைகுறையாக ஓய்வூதியம் எடுத்தவர்கள்

ஏன் இதைப் பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார்கள்.

அவர்களுக்கு சேர வேண்டிய பணம்

அரைகுறையாக கிடைத்திருப்பது வேதனையாக உள்ளது.

இப்போதாவது இவர்கள் கண்டு கொண்டது சந்தோசமே.

இவ்வளவு காலமும் இப்படி அரைகுறையாக ஓய்வூதியம் எடுத்தவர்கள்

ஏன் இதைப் பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார்கள்.

அவர்களுக்கு சேர வேண்டிய பணம்

அரைகுறையாக கிடைத்திருப்பது வேதனையாக உள்ளது.

இப்போதாவது இவர்கள் கண்டு கொண்டது சந்தோசமே.

யூகே பற்றிய புரிதலின் அடிப்படையில்.

இங்கே ஓய்வூதியம் இரெண்டு வகை.

2ம் வகை ஒரு ஒப்பந்தம் வழி வரும் ஓய்வூதியம் அது நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் தர வேண்டும். இன்னொரு நாட்டுக்கு அனுப்ப ஆகும் செலவை எடுக்கலாம்.

1ம் வகை

யூகே சில நாடுகளோடு ஒய்வூதிய ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் உள்ள நாடுகளுக்கு போனால் – உங்கள் state pension தொடர்ந்து வரும், அத்தோடு வருடாவருடம் பணவீக்கதோடு கூட்டும் வருடாந்த அதிகரிப்பும் தொடர்ந்து வரும்.

யூகே யோடு ஒப்பந்தம் போடாத நாடுகளுக்கு போனால் – நீங்கள் நாடு மாறிய ஆண்டு என்ன ஸ்டேட் பென்சன் எடுதீர்களோ அது தொடர்ந்து வரும். ஆனால் வருடாந்த அதிகரிப்பு இராது.

உதாராணமாக நீங்கள் யூகேயில் இருந்து 2015 இல் யூ எஸ் சில் ரிட்டையர் ஆனால், உங்களுக்கு 2015 வருடம் எடுத்த பென்சன், மேலதிகமாக 2015-2026 வரையான அதிகரிப்புகளும் கூட்டி கிடைக்கும்.

ஆனால் இதையே கனடா அல்லது இலங்கையில் செட்டில் ஆனால் – 2015 இல் என்ன பென்சன் எடுத்தீர்களோ அதுவே 2026 இலும் கிடைக்கும்.

சுவிஸ்சிலும் இப்படியாக இருக்கலாம்.