சுதந்திர தினத்தை ஒட்டி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர் மோடி 80வது

 

நாட்டின் 80வது சுதந்திர தினத்தை ஒட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றினார். 13வது முறையாக செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றியுள்ளார். 21 குண்டு முழங்க மரியாதையுடன் தேசிய கொடியேற்றப்பட்டது. கடமைப் பாதையில் முப்படை மற்றும் டெல்லி காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி பின் உரையாற்றினர். இன்று நாம் 80வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். எண்ணற்ற சுதந்திர தின வீரர்களை நாடு நினைவு கூர்கிறது. வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டை கொண்டாடுகிறோம். இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக சென்று கொண்டிருக்கிறது.இந்திய தேர்தல்

12 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டி உள்ளது. நமது வாழ்வில் பெரிதாக சாதிக்க வேண்டும் எனில் ஒவ்வொரு இந்தியரும் கனவு காண வேண்டும். நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி 7 மடங்கு உயர்ந்துள்ளது.தேசத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர்.

கனவுகள் உயர்வாக இருக்கும்போது தான் திறன்களும் உயர்ந்ததாக இருக்கும். நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் தான் தற்போது நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது. நாட்டின் விடுதலைக்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.