அணு ஆயுதம் தயாரிக்க கூடாது என கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் நாட்டை தாக்க துவங்கியது. அந்தப் போர் ஒரு மாதத்திற்கு மேல் நீடித்த நிலையில் இரண்டு வாரங்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஒருபக்கம் பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்காவுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.. ஆனால் அணு ஆயுதம் உற்பத்தி செய்யக்கூடாது என்கிற அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்காததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால் அந்த வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது அமெரிக்காவுக்கு நெருக்கடியை கொடுத்தது.
எனவே, ஹார்மூஸ் நீரினையை ஈரான் திறக்காவிட்டால் அந்த நாட்டின் முக்கிய பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என அவர் தொடர்ந்து மிரட்டி வருகிறார். தற்போது இரண்டு வார கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் ஈரானின் கடற்பகுதியை முற்றுகையிடும் வேலையில் அமெரிக்கா இறங்கியிருக்கிறது.. அதோடு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் ஈரானின் பல பகுதிகளை தாக்குவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்திருக்கிறார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த ஈரான் ‘அமெரிக்கா மீண்டும் போரை தொடங்கினால் மிகவும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்’ என எச்சரித்துள்ளது. வெறும் பெயரளவிலான இந்த போர் நிறுத்த காலத்தில் எதிரிகளின் நகர்வுகளை உன்னிப்பாக நாங்கள் கவனித்து வருகிறோம்.. ஏதேனும் அத்துமீறல் நடந்தால் அமெரிக்காவின் எஞ்சியுள்ள சொத்துக்கள் மீது பேரழிவுகளை உண்டாக்குவோம்’ எனவும் ஈரான் எச்சரித்திருக்கிறது. துவக்கம் முதலே அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் அடிபணிய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் ஹார்மூஸ் நீரினையை திறக்க சர்வதேச ராணுவ திட்டமிடல் மாநாட்டை நடத்தும் வேலைகள் நடந்து வருகிறது. 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டிற்கு இங்கிலாந்தும், பிரான்சும் தலைமை தாங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
என்ன சப்பன்னு நினைச்சியா!.. ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடி அமெரிக்காவுக்கு டஃப் கொடுக்கும் ஈரான்!..
ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்யக் கூடாது எனக்கூறி இஸ்ரேலும், அமெரிக்காவும் அந்த நாட்டின் மீது தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற்று வந்தது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதனால் கோபமடைந்த ஈரான் வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் கப்பல்கள் செல்லும் கடல் வழி பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடிவிட்டது. இதனால் இந்தியாவிலுள்ள பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் வராமல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.. பல மாநிலங்களிலும் ஹோட்டல்கள் மூடப்பட்டது.
இது அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கவே ஈரான் ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் அந்த நாட்டின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார். ஆனாலும் ஈரான் அடிபணியவில்லை. அதோடு, திருப்பி தாக்கவும் துவங்கியது. அமெரிக்காவின் அதிக விலை மதிப்பு கொண்டு பல விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது. ஒருவழியாக, சமீபத்தில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இரண்டு வருடம் போர் நிறுத்தம் என முடிவு செய்யப்பட்டது.. இதையடுத்து நேற்று ஹார்மூஸ் நீரிணையை ஈரான் திறந்து வைத்தது. இதை அமெரிக்காவும் வரவேற்றது.
ஆனால், ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளை முற்றுகையிடும் வகையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் போர் விமானங்களுடன் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பியிருக்கிறது அமெரிக்கா.
இது ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தவே ஹார்மூஸ் நீரிணையை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதாக ஈரான் ராணுவம் அறிவித்திருக்கிறது. அமெரிக்கா தனது முற்றுகை நடவடிக்கை கைவிடும் வரை ஹார்மூஸ் மூடப்பட்டிருக்கும் எனவும் ஈரான் தெரிவித்துவிட்டது. இப்படி எல்லா வகையிலும் அமெரிக்காவுக்கு ஈரான் டஃப் கொடுத்த வருவது குறிப்பிடத்தக்கது.




