யாழ் செம்மணி புதைகுழியில் இதுவரை 481 எலும்புக்கூடுகள் மீட்பு

 

செம்மணி புதைகுழியில் நேற்று (04) 43 ஆம் நாள் அகழ்வுப் பணியின் போது, புதிதாக 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 2 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மேலும் ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதியும் கண்டறியப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரையில் மொத்தம் 97 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இக்காலகட்டத்தில் மொத்தம் 483 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 481 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.