பசிபிக் தீவு நாடான நவுரு தனது பாரம்பரிய பெயரான நவோரோ குடியரசு என அதிகாரப்பூர்வமாக பெயரை மாற்றி உள்ளது. 12,000 மக்கள் வசிக்கும் நவுரு, மக்கள் தொகை அடிப்படையில் துலாலு மற்றும் வாடிகன் நகரத்துக்கு அடுத்தபடியாக உலகின் 3வது மிகச்சிறிய நாடாகும். பவளப்பாறைகள் மற்றும் சுண்ணாம்புக்கற்கள் நிறைந்த இந்த சிறிய பசிபிக் தீவு, ஜெர்மனியால காலனித்துவப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் ஆஸ்திரேலிய நிர்வாகத்தின் கீழ் சென்ற நவுரு, இறுதியாக 1968ல் சுதந்திர குடியரசாக மாறியது.
இந்நிலையில் பாரம்பரியம், தாய்மொழியில் உள்ள எழுத்துக்கூட்டு மற்றும் உச்சரிப்புக்கு ஏற்ப, நவுரு தீவின் பெயர் நவோரா குடியரசு என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்நாட்டின் சர்வதேச குறியீடு NRU-விலிருந்து NRO-வாக மாறும். அந்த தீவின் மக்கள் நவ்ருவான் என்பதற்கு பதிலாக டெய்-நவோரா என அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


