ஊரடங்கு சட்டம் – இவர்களுக்கு வீடுகளில் தஞ்சமளிக்க வேண்டாம் – வெளியான அறிவிப்பு

 

கெந்தலியத்த வீதி மேற்கு, கெந்தலியத்த வீதி வடக்கு மற்றும் தம்புவ கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், சந்தேகத்திற்குரிய நபர்கள் எவருக்கும் தஞ்சமளிக்க வேண்டாம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

உடன் அமுலாகும் வகையில் ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹர சிறையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.

மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி – மேற்கு, 246 சி கெண்டலியத்த வீதி – வடக்கு மற்றும் 181 ஜி – தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்குள் மட்டும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலும் மறு அறிவிப்பு வரும் வரையிலும் பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.