தனுஷுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும்!- பத்திரிக்கையாளர் மணி

 

நடிகர் தனுஷ் தனது பிறந்தநாள் விழாவில் பேசிய பேச்சு எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவார் என்கிற எண்ணத்தை பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் தனது ரசிகர்களை நற்பணி மன்றங்களாக மாற்றி சமூக சேவகையில் ஈடும்படி அவர் கூறியிருக்கிறார்.

உங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் எல்லோருக்கும் உதவி செய்யுங்கள்.. அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு உதவுங்கள்.. நாம் இப்படியே இருக்க கூடாது’ என்ற அவர் பேசியது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மேலும் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வந்த ஆசை போலவே கஸ்தூரி ராஜாவுக்கும் தனது மகன் தனுஷை அரசியலுக்கு கொண்டுவர வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் இதுபற்றி கருத்து தெரிவித்த பிரபல பத்திரிக்கையாளர் மணி ‘எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜய்க்கு மக்கள் கொடுத்த நம்பிக்கையை வேறு எந்த நடிகைக்கும் கொடுக்கவில்லை. அந்த நம்பிக்கையை மக்கள் விஜய்க்கு மட்டுமே கொடுத்தார்கள். அது விஜயின் 20 ஆண்டுகால உழைப்பின் பலன்.. விஜய் தனது படங்களில் அரசியல் பேசி அரசியல்வாதிகளின் பகையை சம்பாதித்தார்.. விஜய் போல தனுஷ் வருவதற்கு வாய்ப்பு 0 தவீதம்தான்’ எனக் கூறியிருக்கிறார்.