தமிழ் படங்களில் காதல் இல்ல காமம் மட்டும் தான் இருக்கு

 

தமிழ் சினிமாவில் தற்போது காதல் படங்கள் வருவது இல்லை காமம் தான் இருக்கிறது என்று ஜோதிகா போல்டாக தெரிவித்த கருத்து சினிமா ரசிகர்களை பேச வைத்திருக்கிறது. ஜோதிகா சொன்னது சரியா, தவறா என்று விவாதிக்கிறார்கள்.

சூர்யா மனைவி: மும்பையில் வசித்து வரும் ஜோதிகா தற்போது பாலிவுட் படங்கள், வெப்தொடர்களில் பிசியாகிவிட்டார். அவரை தேடி வெயிட்டான கதாபாத்திரங்கள் வருவதால் சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விருது விழா ஒன்றில் ஜோதிகா பேசிய விஷயம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

சூர்யாவும், ஜோதிகாவும் ஆரம்ப காலத்தில் சேர்ந்து நடித்தபோது தான் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு பெற்றோரை சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொண்டார்கள். கோலிவுட்டின் ஹேப்பியான ஜோடிகளில் ஒன்று சூர்யா-ஜோதிகா ஜோடி. ஆனால் சூர்யா,ஜோதிகா ஒரு படத்தில் ஜோடியாக நடித்து பல ஆண்டுகளாகிவிட்டது. அவர்களை மீண்டும் பெரியதிரையில் சேர்ந்து பார்க்கும் ஆசை ரசிகர்களுக்கு உள்ளது.

கோலிவுட் படங்கள்: இந்நிலையில் தான் நீங்களும், சூர்யாவும் எப்பொழுது மீண்டும் சேர்ந்து நடிப்பீர்கள் மேடம் என விருது விழாவில் ஜோதிகாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, கதைக்காக காத்திருக்கிறோம். தமிழ் சினிமாவில் காதல் படக் கதை எழுத சிலருக்கு தான் புத்தி இருக்கிறது என்பதை நான் சொல்லியே ஆக வேண்டும். அதனால் தான் சில்லுக்கருப்பட்டி படத்தை பாராட்டுகிறேன். அதை 2டி என்டர்டெயின்மென்ட்ஸ் மூலம் ரிலீஸ் செய்வது என்று நான் தான் முடிவு செய்தேன்.

அதில் இருந்த ரொமான்ஸ் ரொம்ப பிடித்திருந்தது. கடைசி 10, 15 ஆண்டுகளில் வந்த ஒரே நல்ல ரொமான்டிக் தமிழ் படம் சில்லுக்கருப்பட்டி என்று தைரியமாக சொல்வேன். மற்ற படங்களில் காமம் மட்டும் தான் பார்க்க முடிகிறது. ஒரு பெண்ணாக இருந்து பார்த்தால் தமிழ் படங்கள் தற்போது காட்டுவது காதல் இல்லை காமம். காதல் கதையை எழுத எனக்கும், சூர்யாவுக்கும் ஒரு பெண் இயக்குநர் தேவை என்றார்.

ஜோதிகா சரியா?: ஜோதிகா அன்று பேசியது குறித்து இன்று விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள். ஜோதிகா சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?. 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் பார்க்கும் நல்ல நல்ல காதல் கதைகள் படமாக வந்தது. ஆனால் தற்போது எல்லாம் முகம் சுளிக்கும் வகையான காட்சிகளை தான் காதல் படம் என்கிற பெயரில் எடுக்கிறார்கள். ஜோதிகாவாவது தைரியமாக சொல்லியிருக்கிறாரே என்கிறார்கள் சிலர்.

மேலும் சிலர் கூறியிருப்பதாவது, கோலிவுட்டில் காமம் இருக்கிறது என்று சொல்லும் ஜோதிகா, பாலிவுட்டில் அந்த காட்சிகளில் தான் நடிக்கிறார். அவருக்கு அவரின் தாய் மொழியை மையமாக வைத்து இருக்கும் பாலிவுட் தான் முக்கியம். சூர்யாவுக்காக கோலிவுட்டை சகித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் பேசாமல் பாலிவுட்டிலேயே இருக்கவும் மேடம் என்று கூறியுள்ளனர்.

சூர்யா காதல் படம்: நான் காதல் படங்களில் நடித்து சுமார் 14 ஆண்டுகள் இருக்கும் என்று சொல்லி வெங்கி அட்லூரியிடம் காதல் கதை கேட்டு சூர்யா நடித்திருக்கும் படம் தான் விஸ்வநாத் அன்ட் சன்ஸ். ஜூலை மாதம் ரிலீஸாவதாக இருந்த அந்த படம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
அந்த படத்தில் 40 வயது ஹீரோ மீது 20 வயது ஹீரோயினுக்கு காதல் வருகிறது. அதனால் தான் சூர்யாவுக்கு 25 வயது மமிதா பைஜுவை ஜோடியாக்கியிருக்கிறார் வெங்கி அட்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.